search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child sacrifice"

    • மர்ம காய்ச்சலுக்கு குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • சுகாதாரத்துறையினர் தீவிர காய்ச்சல் முகாம்கள் நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் பெர்னட். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 4 வயதில் அக்சரன் என்ற மகன் உள்ளார். அக்சரன் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளிக்கு சென்று வந்தான்.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அக்சரனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே அவனை பெர்னட் கூடங்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்து அக்சரனுக்கு காய்ச்சல் குணமாகாமல் இருந்துள்ளது.

    நேற்று காலை சிறுவன் அக்சரனின் உடல்நிலை மிகவும் மோசம் அடையவே கூடங்குளம் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அவனை நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் அக்சரனை ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அக்சரன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம காய்ச்சலுக்கு குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு ஏற்கனவே 10 மாத குழந்தை இறந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் நாங்குநேரி பரப்பாடி பகுதியில் 6 வயது சிறுமி இறந்துவிட்டார். இந்நிலையில் நேற்று சிறுவன் அக்சரன் இறந்துள்ளான். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். எனவே மாவட்டம் முழுவதும் சுகாதராத்துறையினர் தீவிர காய்ச்சல் முகாம்கள் நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குடியாத்தத்தை சேர்ந்த சிறுவன் உட்பட 3 பேர் படுகாயம்
    • விபத்து ஏற்படுத்திச் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர்

    வாணாபுரம்:

    திருவண்ணாமலை அடுத்த ஆண்டியார் பாளையத்தை சேர்ந்தவர் பவுன் குமார். இவரது மனைவி எழிலரசி (28). மகன்கள் ரோஹித் (5), வர்ஜித் (3). இவர்களது உறவினரான குடியாத்தத்தை சேர்ந்த குழந்தை தர்ஷன் (7).

    இந்த நிலையில் எழிலரசி உள்பட 3 குழந்தைகளும் மொபட்டில் வேலை சம்பந்தமாக நேற்று திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். தென்மாத்தூர் தனியார் கல்லூரி அருகே வரும்போது எதிரே வந்த கார் எழிலரசி ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு எழிலரசி மற்றும் 3 குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு குழந்தை வர்ஜித் பரிதா பமாக இறந்தான். மற்றவ ர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வெறையூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வர்ஜீத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த விபத்து ஏற்படுத்திச் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாள ராக வேலை செய்து வருகின்றார்.
    • வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    முத்தூர், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது30) .வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாள ராக வேலை செய்து வருகின்றார். இவருக்கு அஷ்மிதா (4) மற்றும் 1½ வயதான தர்ஷினிதா என்று 2 மகள்கள் உள்ளனர். நேற்று காலை தர்ஷினிதா வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது குளியல் அறை அருகே வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வாளியில் தவறி விழுந்து விட்டார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விளையாடிக்கொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்த வெங்கட்ட கவுண்டனூர் பகுதி யைச் சேர்ந்தவர் கோபி, விவ சாயி. இவரது மனைவி சுபித்ரா. இவர்களின் மூன்றா வது குழந்தை கவுஷிக் (1 1/2 வயது) கோபியும், அவரது மனைவியும் நேற்று முன்தி னம் நிலத்துக்கு விவசாய பணிக்காக சென்றனர்.

    அப் போது குழந்தை கவுஷிக்கையும் உடன் அழைத்து சென்றிருந்தனர்.

    அங்கு கனவின், மனைவி இருவரும் விவசாய பணிகளை மேற்கொண்டிருந்தனர். விவசாய நிலத்தின் அரு கில் விவசாய பயன்பாட்டுக் காக தண்ணீர் தொட்டி உள்ளது. இதில் தண்ணீர் தேக்கி வைத்து நிலங்களுக்கு பாய்ச்சி வருகிறார்கள்.

    அந்தப் பகுதியில் குழந்தை கவுஷிக் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளான்.

    திடீரென குழந்தையை காணாததால் தேடிய போது தண்ணீர் தொட்டியில் மூழ்கிய நிலையில் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக குழந்தையை மீட்டு பார்த்தபோது குழந்தை இறந்துவிட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழந்தை தண்ணீர் தொட் டியில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தாயுடன் அக்காவை அழைத்து வர சென்ற போது பரிதாபம்
    • டிரைவர் கைது

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை அருகே உள்ள பூதமங்கலம் கொரக்கந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி கூலி தொழிலாளி. இவரது மனைவி கல்பனா, மகள்கள் பிரிஸ்திகா, ஜெயஷ்டிகா (வயது 2).

    மூத்த மகள் பிரிஸ்திகா தேவிகாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். நேற்று பள்ளிக்குச் சென்று விட்டு பள்ளி வேனில் வீடு திரும்பினார். வீட்டின் அருகே வேன் நின்றதும் அவரது தாயார் கல்பனா பிரிஸ்திகாவை அழைத்து வர சென்றார். அப்போது தனது அக்காவை பார்ப்பதற்காக தாயை பின் தொடர்ந்து ஜெயஸ்டிஸ்கா ஓடினாள் . கல்பனா வேனின் பின்பக்கமாக சென்று மூத்த மகளை எடுத்துள்ளார்.

    அந்த நேரத்தில் வேனின் முன்பக்கமாக 2 வயது குழந்தை ஜெயஸ்டிகா ஓடியது. இதனை அறியாமல் டிரைவர் வண்டியை எடுத்துள்ளார். இதனால் வேன் சக்கரத்தில் ஜெயஸ்டிகா சிக்கினாள். இதனை கண்டு கல்பனா அலறி கூச்சலிட்டார்.

    வேனில் சிக்கிய ஜெயஸ்டிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை கண்டு அவர் தாயார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த மங்கலம் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்து டிரைவர் பெருமாளை கைது செய்தனர்.

    • வாழப்பாடியை அடுத்த திருமனூர் ஊராட்சி அண்ணாபுரம் வடக்குக்காடு பகுதியில் 8 மாத ஆண் குழந்தை கிணற்றில் விழுந்து பலி.
    • தாய் உயிருடன் மீட்பு.

    வாழப்பாடி:

    வாழப்பாடியை அடுத்த திருமனூர் ஊராட்சி அண்ணாபுரம் வடக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (30). இவரது மனைவி தேன்மொழி (28). இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது.

    இவர்களது தோட்டத்தி–லுள்ள கிணற்று ஓரமாக, நேற்று தேன்மொழி கைக்குழந்தையுடன் நடந்து சென்ற போது தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். தேன்மொழியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்–பக்கத்தினர் ஓடிச் சென்று கிணற்றில் தத்தளித்த தேன்மொழியை மீட்டனர். ஆனால், தண்ணீரில் மூழ்கி இவரது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

    குழந்தையின் சடலத்தை மீட்ட வாழப்பாடி போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விளையாடிய போது விழுந்தது
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வர் குமரேசன் ( வயது 30 ) . கட்டிட மேஸ்திரி . இவரது மனைவி சித்ரா ( 25 ) . இவர்களுக்கு மூன்று குழந்தைகள்.

    இதில் 3 - வது குழந்தை சஞ்சனா விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அருகில் உள்ள தரை மட்ட தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டாள். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஆபத்தான நிலையில் இருந்த சஞ்சனாவை அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சஞ்சனா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசில் தாய் புகார்
    • மருத்துவ முகாம் நடத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சிறுகரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து.விவசாய கூலிவேலை செய்து வருகிறார்.

    இவரது குழந்தை யோகஸ்ரீ (வயது3). இந்நிலையில் நேற்று காலை குழந்தைக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.இதனால் பதறிப்போன குழந்தையின் பெற்றோர் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.இதுகுறித்து குழந்தையின் தாய் கங்கா காவேரிப்பாக்கம் போலீஸ் புகார் செய்தார்.

    சப் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மர்ம காய்ச்சலால் குழந்தை இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மர்ம காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை இறந்ததால் சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம் நடத்தி மேலும் மர்ம பாய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×