மர்ம காய்ச்சலால் 3 வயது குழந்தை பலி

போலீசில் தாய் புகார்மருத்துவ முகாம் நடத்த பொதுமக்கள் வலியுறுத்தல்
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சிறுகரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து.விவசாய கூலிவேலை செய்து வருகிறார்.

இவரது குழந்தை யோகஸ்ரீ (வயது3). இந்நிலையில் நேற்று காலை குழந்தைக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.இதனால் பதறிப்போன குழந்தையின் பெற்றோர் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.இதுகுறித்து குழந்தையின் தாய் கங்கா காவேரிப்பாக்கம் போலீஸ் புகார் செய்தார்.

சப் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மர்ம காய்ச்சலால் குழந்தை இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மர்ம காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை இறந்ததால் சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம் நடத்தி மேலும் மர்ம பாய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com