என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தவறி விழுந்த கிணற்றையும், பலியான குழந்தையையும் படத்தில் காணலாம்.
வாழப்பாடி அண்ணாபுரத்தில், கிணற்றில் விழுந்த குழந்தை பலி
- வாழப்பாடியை அடுத்த திருமனூர் ஊராட்சி அண்ணாபுரம் வடக்குக்காடு பகுதியில் 8 மாத ஆண் குழந்தை கிணற்றில் விழுந்து பலி.
- தாய் உயிருடன் மீட்பு.
வாழப்பாடி:
வாழப்பாடியை அடுத்த திருமனூர் ஊராட்சி அண்ணாபுரம் வடக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (30). இவரது மனைவி தேன்மொழி (28). இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது.
இவர்களது தோட்டத்தி–லுள்ள கிணற்று ஓரமாக, நேற்று தேன்மொழி கைக்குழந்தையுடன் நடந்து சென்ற போது தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். தேன்மொழியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்–பக்கத்தினர் ஓடிச் சென்று கிணற்றில் தத்தளித்த தேன்மொழியை மீட்டனர். ஆனால், தண்ணீரில் மூழ்கி இவரது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தையின் சடலத்தை மீட்ட வாழப்பாடி போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






