பள்ளி வேனில் சிக்கி 2 வயது குழந்தை பலி

தாயுடன் அக்காவை அழைத்து வர சென்ற போது பரிதாபம் டிரைவர் கைது
பள்ளி வேனில் சிக்கி 2 வயது குழந்தை பலி
Published on

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே உள்ள பூதமங்கலம் கொரக்கந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி கூலி தொழிலாளி. இவரது மனைவி கல்பனா, மகள்கள் பிரிஸ்திகா, ஜெயஷ்டிகா (வயது 2).

மூத்த மகள் பிரிஸ்திகா தேவிகாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். நேற்று பள்ளிக்குச் சென்று விட்டு பள்ளி வேனில் வீடு திரும்பினார். வீட்டின் அருகே வேன் நின்றதும் அவரது தாயார் கல்பனா பிரிஸ்திகாவை அழைத்து வர சென்றார். அப்போது தனது அக்காவை பார்ப்பதற்காக தாயை பின் தொடர்ந்து ஜெயஸ்டிஸ்கா ஓடினாள் . கல்பனா வேனின் பின்பக்கமாக சென்று மூத்த மகளை எடுத்துள்ளார்.

அந்த நேரத்தில் வேனின் முன்பக்கமாக 2 வயது குழந்தை ஜெயஸ்டிகா ஓடியது. இதனை அறியாமல் டிரைவர் வண்டியை எடுத்துள்ளார். இதனால் வேன் சக்கரத்தில் ஜெயஸ்டிகா சிக்கினாள். இதனை கண்டு கல்பனா அலறி கூச்சலிட்டார்.

வேனில் சிக்கிய ஜெயஸ்டிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை கண்டு அவர் தாயார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த மங்கலம் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்து டிரைவர் பெருமாளை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com