என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செங்கம்

    செங்கம் அருகே உள்ள கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் பேரூராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூடம் திறக்கும் விழா நடந்தது.

    இந்த நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வபாரதி மனோஜ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த விழாவில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு புதுப்பாளையம் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூடத்தை திறந்து வைத்து பேசினார்.

    நிகழ்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ. கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட தடகள சங்கத் தலைவர் எ.வ.வே.கம்பன், புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன், பேரூராட்சி மன்ற தலைவர் செல்வபாரதி மனோஜ் குமார், பேரூராட்சி செயல் அலுவலர் உஸ்னாபி, மாவட்ட கவுன்சிலர் மனோகரன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்வில் முடிவில் பேரூராட்சி செயல் அலுவலர் உஸ்னாபி நன்றி கூறினார்.

    • 25 பேரை கடித்து குதறியது
    • காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    போளூர்:

    போளூர் நகரப் பகுதியில் நேற்று காலை வெறிநாய் ஒன்று சுற்றி திரிந்து கொண்டு இருந்தது. வெளியூர்களிலிருந்து பஸ் நிலையம் மற்றும் பஜாருக்கு வந்த 25க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த 15 பேர் போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதனால் போளூர் பகுதி மக்கள் மிகுந்த பீதி அடைந்தனர். இது குறித்து பேரூராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஊழியர்கள் நேற்று இரவு முழுவதும் வெறிநாயை நகரம் முழுவதும் தேடி அலைந்தனர்.

    இன்று அதிகாலை அங்காள பரமேஸ்வரி கோவில் தெருவில் சுற்றித்திரிந்த வெறிநாயை கண்டுபிடித்து பேரூராட்சி ஊழியர்கள் அடித்துக் கொன்றனர். இதனால் பேரூராட்சி டவுன் பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    • 25 பேரை கடித்து குதறியது
    • காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    போளூர்:

    போளூர் நகரப் பகுதியில் நேற்று காலை வெறிநாய் ஒன்று சுற்றி திரிந்து கொண்டு இருந்தது. வெளியூர்களிலிருந்து பஸ் நிலையம் மற்றும் பஜாருக்கு வந்த 25க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த 15 பேர் போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதனால் போளூர் பகுதி மக்கள் மிகுந்த பீதி அடைந்தனர். இது குறித்து பேரூராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஊழியர்கள் நேற்று இரவு முழுவதும் வெறிநாயை நகரம் முழுவதும் தேடி அலைந்தனர்.

    இன்று அதிகாலை அங்காள பரமேஸ்வரி கோவில் தெருவில் சுற்றித்திரிந்த வெறிநாயை கண்டுபிடித்து பேரூராட்சி ஊழியர்கள் அடித்துக் கொன்றனர். இதனால் பேரூராட்சி டவுன் பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    • 250 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. கார்த்திகேயன் ஆய்வு

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசலில் நேற்று காளைவிடும் திருவிழா நடைபெற்றது.

    இந்த விழாவில் நுழைவுக்கட்டணம் ரூ.2500 செலுத்திய பல்வேறு ஊர்களிலிருந்து சுமார் 250 காளைகள் கொண்டு வரப்பட்டு வேகமாக ஓட விடப்பட்டது.

    இதில் வேகமாக ஓடி முதலிடம் பெற்ற லத்தேரி சேர்ந்த காளைக்கு ரூ1,15,000 ரொக்கப்பரிசும், இரண்டாமிடம் பெற்ற வன்றந்தாங்கல் ரேஸ் பைக் காளைக்கு ரூ.1 லட்சமும் மூன்றாம் இடம் பெற்ற அட்சரமங்கலம் கருப்பு காட்டேரி காளைக்கு ரூ.85 ஆயிரமும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ் பி கார்த்திகேயன் நேரில் வந்து ஆய்வு செய்தார். ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.காளைவிடும் திருவிழாவை வேடிக்கை பார்க்க வந்த சிலரை மாடு முட்டியதில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டனர்.

    முன்னதாக கடந்த 20-ம்தேதி கிராம தேவதை பாலியம்மன், பூவாத்தம்மன் உற்சவம் நடைபெற்றது. இரவில் அம்மன் திருவீதி உலாவும் நாடகமும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • வாகன தணிக்கையின் போது சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி ஆரணிப்பாளையம் ஆறுமுகம் தெருவை சேர்ந்தவர் மதி (வயது 57), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு சவாரியை முடித்துவிட்டு ஆட்டோவை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்.

    நேற்று காலை எழுந்து பார்க்கும் போது ஆட்டோ திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் மதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப் போது முனுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வசந்த் (27) என்ப வர் ஆட்டோவை ஓட்டி வந்தார். அவரிடம் விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்த போது மதியின் ஆட்டோவை திருடி வந்தது தெரிந்தது.

    இதையடுத்து வசந்தை போலீசார் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகில் உள்ள பெரியப்பாலிப்பட்டு கிராமம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணா மலை (வயது 74). இவர் நேற்று காலை சைக்கிளில் செங்கம் சாலையில் உள்ள கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர் வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அந்த சமயத்தில் திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற சரக்கு வேன் அண்ணா மலை மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த அண்ணாமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவண்ணாமலை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்தது
    • முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பங்கேற்பு

    திருவண்ணாமலை:

    எம்.ஜி.ஆர் 106-வது பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் திருவண்ணாமலை தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் தச்சம்பட்டு கிராமத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் தென்மாத்தூர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ, சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோவை சத்யன், கட்சி செய்தி தொடர்பாளர் அனுமோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் நாராயணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பேருராட்சி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி சார்புஅணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், முன்னாள் இன்னாள் உள்ளாட்சி நகராட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் இன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கிளை, வட்ட கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், கழகத்தின் செயல்வீரர்கள், வீராங்கனைகள் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மரத்தில் தூக்கில் தொங்கினார்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    வெறையூர் அருகே உள்ள பவித்திரம் புதூர் பகுதியைச்சேர்ந்த வர் காசி (வயது 65), கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் அருகில்" இருந்த மரத்தில் காசி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து வெறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தந்தை, மகன்கள் மீது புகார்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே ஒண் ணுபுரம் வடக்கு விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 70). இவ ருக்கும் சகோதரர் கண்ணன் (50) என்பவருக்கும் முன்விரோதம் உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த 10-ந்தேதி பொன்னுசாமி தனது வீட்டில் இருந்த போது, அங்கு வந்த கண்ணன், அவரது மகன்கள் செல்வராஜ் (35), செல்வ மூர்த்தி (30), ஆகிய 3 பேரும் ஆபாசமாக திட்டி கையாலும், கம்பாலும் தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த பொன்னுசாமி சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பாக பொன்னுசாமியின் மகன் காமராஜ் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    • அறிவு திறனை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை
    • முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

    செய்யாறு:

    செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் அறிவு திறனை மேம்படுத்தும் வகையில் அரசு ஒரு கோடி மதிப்பிலான மின்னணு நூலக கட்டிடம் கட்டப்பட்டது.

    இதனை நேற்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியை ஒட்டி ஒ.ஜோதி எம்எல்ஏ புதிய மின்னணு நூலக கட்டிடத்தில் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    இதில் கல்லூரி முதல்வர் பொறுப்பு ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், திமுக நகர செயலாளர் கே.விஸ்வநாதன், நகரமன்ற தலைவர் ஆ. மோகனவேலு, ஒன்றிய குழு தலைவர்கள் ராஜு, திலகவதி ராஜ்குமார், திமுக ஒன்றிய செயலாளர்கள் சங்கர், சீனிவாசன், தினகரன், ஞானவேல், ரவிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா பாரி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் தெள்ளார், ஊராட்சி ஒன்றியம் சி.ம.புதூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம், வாசிப்பு இயக்க திட்டம் தொடக்க விழா, மற்றும் புதிய நூலக திறப்பு விழா, ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

    விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நம்பெருமாள், தலைமை தாங்கினார். வட்டார வள மேற்பார்வையாளர் ஜெயசீலன், ஆசிரியர் பயிற்சிநர் தமிழ் நேசன், குருவள மைய தலைமை ஆசிரியர் மணி, ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தெள்ளார், வட்டார கல்வி அலுவலர் ரங்கநாதன், கலந்து கொண்டு. பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 22-23-ம் ஆண்டிற்கான விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க, தெரியாத, அனைவருக்கும் எழுத்தும், எண்ணறிதல், வாக்காளர் உரிமை, சுற்றுச்சூழல் அறிதல், பணம் இல்ல பரிமாற்றம், இணைய வழி கல்வி, ஆகியவை குறித்து விழிப்புணர்வு துண்டு பதாகைகளை ஏந்தியவாறு மாணவ-மாணவிகள், முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர்.

    விழாவில் பள்ளி ஆசிரியர்கள் பச்சையப்பன், சரவணன், பள்ளி மேலாண்மை கல்வியாளர் சந்திரசேகரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிரிஜா, கணினி ஆசிரியர் சுரேஷ், புதிய பாரத எழுத்தறிவு திட்ட பொறுப்பாளர் இந்துமதி, வாசிப்புத்திறன் இயக்க பொறுப்பாளர் விஜய் லட்சுமி, வந்தவாசி கிருஷ்ண கோச்சிங் சென்டர் சீனிவாசன், மற்றும் ஊர் பெரியவர்கள், பெற்றோர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • மழை பெய்தால் பொருட்கள் நனைந்து போவதாக புகார்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கராம்பட்டு கிராமத்தில் கற்பகம் கூட்டுறவு ரேசன் கடை சித்திரசாவடி கேட் பகுதியில் பழுதடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

    மழை பெய்தால் ரேசன் பொருட்கள் நனைந்து போகும் நிலை உள்ளது. எனவே புதிய ரேசன் கடை கட்ட, பழைய ஊராட்சி அலுவலகம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்திவாரம் போடப்பட்ட நிலையில் பூமி பூஜை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    ஆனால் கட்டிட பணிகள் தொடங்கவில்லை. எனவே புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×