என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The festival of bulls"

    • 250 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. கார்த்திகேயன் ஆய்வு

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசலில் நேற்று காளைவிடும் திருவிழா நடைபெற்றது.

    இந்த விழாவில் நுழைவுக்கட்டணம் ரூ.2500 செலுத்திய பல்வேறு ஊர்களிலிருந்து சுமார் 250 காளைகள் கொண்டு வரப்பட்டு வேகமாக ஓட விடப்பட்டது.

    இதில் வேகமாக ஓடி முதலிடம் பெற்ற லத்தேரி சேர்ந்த காளைக்கு ரூ1,15,000 ரொக்கப்பரிசும், இரண்டாமிடம் பெற்ற வன்றந்தாங்கல் ரேஸ் பைக் காளைக்கு ரூ.1 லட்சமும் மூன்றாம் இடம் பெற்ற அட்சரமங்கலம் கருப்பு காட்டேரி காளைக்கு ரூ.85 ஆயிரமும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ் பி கார்த்திகேயன் நேரில் வந்து ஆய்வு செய்தார். ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.காளைவிடும் திருவிழாவை வேடிக்கை பார்க்க வந்த சிலரை மாடு முட்டியதில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டனர்.

    முன்னதாக கடந்த 20-ம்தேதி கிராம தேவதை பாலியம்மன், பூவாத்தம்மன் உற்சவம் நடைபெற்றது. இரவில் அம்மன் திருவீதி உலாவும் நாடகமும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • 41 காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கீழ்நகர் கிராமத்தில் காளைவிடும் திருவிழா நடைபெற்றது.

    விழாவில் 150-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. பின்னர் சாலையில் அமைக்கப்பட்ட தடுப்புகள் வழியாக ஓடவிடப்பட்டது. இதில் வேகமாக ஓடி முதலிடம் பெற்ற கீழ் வல்லம் காளைக்கு ரொக்கப் பரிசு ரூ.50 ஆயிரம் உள்பட 41 காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக வாடி வாசல் வழியாக காளைகளை ஊராட்சி மன்ற தலைவர் ராணிதண்டபாணி, முன்னாள் தலைவர் ஏழுமலை ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

    இதில் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×