என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அக்ரிகிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம்.
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
- திருவண்ணாமலை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்தது
- முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பங்கேற்பு
திருவண்ணாமலை:
எம்.ஜி.ஆர் 106-வது பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் திருவண்ணாமலை தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் தச்சம்பட்டு கிராமத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் தென்மாத்தூர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ, சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோவை சத்யன், கட்சி செய்தி தொடர்பாளர் அனுமோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் நாராயணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பேருராட்சி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி சார்புஅணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், முன்னாள் இன்னாள் உள்ளாட்சி நகராட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் இன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கிளை, வட்ட கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், கழகத்தின் செயல்வீரர்கள், வீராங்கனைகள் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






