என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரூ.1 கோடியில் மின்னணு நூலக கட்டிடம் திறப்பு
    X

    செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் ரூ1 கோடியில் மின்னணு நூலக கட்டிடத்தை காணொளி மூலமாக முதல்-அமைசச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையொட்டி ஒ.ஜோதி எம்எல்ஏ கட்டிடத்தில் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரூ.1 கோடியில் மின்னணு நூலக கட்டிடம் திறப்பு

    • அறிவு திறனை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை
    • முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

    செய்யாறு:

    செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் அறிவு திறனை மேம்படுத்தும் வகையில் அரசு ஒரு கோடி மதிப்பிலான மின்னணு நூலக கட்டிடம் கட்டப்பட்டது.

    இதனை நேற்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியை ஒட்டி ஒ.ஜோதி எம்எல்ஏ புதிய மின்னணு நூலக கட்டிடத்தில் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    இதில் கல்லூரி முதல்வர் பொறுப்பு ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், திமுக நகர செயலாளர் கே.விஸ்வநாதன், நகரமன்ற தலைவர் ஆ. மோகனவேலு, ஒன்றிய குழு தலைவர்கள் ராஜு, திலகவதி ராஜ்குமார், திமுக ஒன்றிய செயலாளர்கள் சங்கர், சீனிவாசன், தினகரன், ஞானவேல், ரவிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா பாரி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×