என் மலர்
நீங்கள் தேடியது "ஆட்டோ திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி"
- வாகன தணிக்கையின் போது சிக்கினார்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி ஆரணிப்பாளையம் ஆறுமுகம் தெருவை சேர்ந்தவர் மதி (வயது 57), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு சவாரியை முடித்துவிட்டு ஆட்டோவை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்.
நேற்று காலை எழுந்து பார்க்கும் போது ஆட்டோ திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் மதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப் போது முனுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வசந்த் (27) என்ப வர் ஆட்டோவை ஓட்டி வந்தார். அவரிடம் விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்த போது மதியின் ஆட்டோவை திருடி வந்தது தெரிந்தது.
இதையடுத்து வசந்தை போலீசார் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






