என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "He tried to cross the road."

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகில் உள்ள பெரியப்பாலிப்பட்டு கிராமம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணா மலை (வயது 74). இவர் நேற்று காலை சைக்கிளில் செங்கம் சாலையில் உள்ள கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர் வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அந்த சமயத்தில் திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற சரக்கு வேன் அண்ணா மலை மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த அண்ணாமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யார் என்று அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள அரசாங்கன்னி பஸ் நிறுத்தம் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ் அவர்மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயங்களுடன் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இறந்த நபரின் மார்பு பகுதியில் நந்தகோபால் எனவும், கைகளில் ராமு, பார்த்திபன் எனவும் பச்சை குத்தியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து மேல்செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×