என் மலர்
திருவண்ணாமலை
- 55 ஆண்டுகளாக நடந்து வருகிறது
- முதலிடம் வந்த காளைக்கு பரிசாக ரூ.75 ஆயிரம் வழங்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங் கலத்திலிருந்து ஆற்காடு செல்லும் ரோட்டில் உள்ள ராணுவப்பேட்டை என்கிற கம்மவான்பேட்டை கிராமத்தில் 55-ம் ஆண்டு காளைவிடும் திருவிழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் பல்வேறு ஊர்களிலிருந்து 115 காளைகள் கொண்டு வரப்பட்டன. பஜனை கோயில் தெருவில் வாடி வாசல் வழியாக ஓடவிடப்பட்டது.
இதில் வேகமாக ஓடி முதலிடம் பெற்ற சூப்பர் ஸ்டார் முத்து காளைக்கு ரொக்கப் பரிசு ரூ.75 ஆயிரம், இரண்டாமிடம் பெற்ற வாணியம்பாடி அன்வர் காளைக்கு ரூ.65 ஆயிரம், 3-ம் இடம் பெற்ற நெல்வாய் ராஜாபாபு காளைக்கு ரூ.55 ஆயிரம் உள்பட 55 காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.
பரிசுகளை தவமணி, பிரதீப், விஸ்வநாதன், ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமுருகன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி ஏழுமலை, துணை தலைவர் லோகலட்சுமி குமரன் ஆகியோர் வழங்கினர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு, வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.
மேலும் விழாவை வேலூர் தாலுகா தாசில்தார் செந்தில்குமார், கணியம்பாடி வருவாய் ஆய்வாளர் சந்தியா, கம்மவான்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
- குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாக இருந்த காரணத்தால் பால் குடிக்காமல் சிரமப்பட்டு வந்தது.
- குழந்தையின் பெற்றோர் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் நர்சுகளிடம் குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
வந்தவாசி:
வந்தவாசி கோட்டை தெருவை சேர்ந்தவர் இப்ராஹிம், கூலி தொழிலாளி இவருடைய மனைவி சபீனா. இவர்களுக்கு முகமது ரசூல் என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது.
சளி மற்றும் காய்ச்சல் காரணமாக குழந்தையை வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 3 நாட்களாக டாக்டர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாக இருந்த காரணத்தால் பால் குடிக்காமல் சிரமப்பட்டு வந்தது. அப்போது குழந்தையின் பெற்றோர் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் நர்சுகளிடம் குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
இதனை கேட்டும் டாக்டர் மற்றும் செவிலியர்கள் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் குழந்தை பரிதாபமாக இறந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குழந்தை இறப்புக்கு காரணமாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு மருத்துவமனை தரம் உயர்த்த வேண்டும் என்றும் உறவினர்கள் மருத்துவமனையின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த மாவட்ட இணை இயக்குனர் பொறுப்பு மருத்துவர் ஏழுமலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய விசாரணை நடத்தபடும் என்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
- எங்கள் கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி.
- நாங்கள் தேவையில்லாமல் யாரிடமும் சவால் விட மாட்டோம்.
திருவண்ணாமலை :
திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 'அரசியலமைப்பை பாதுகாப்போம்', 'கையோடு கை கோர்ப்போம்' என்ற பரப்புரை இயக்க மண்டல ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் திருவண்ணாமலை, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். நான் மிகுந்த தைரியத்தோடு அண்ணாமலைக்கு நேரடியாக ஒரு சவால் விடுகின்றேன். அவர் அ.தி.மு.க.வை விட நாங்கள் தான் பெரிய கட்சி என்று சொன்னார்.
அவர் பாராளுமன்ற தேர்தலில் தனியாக நிற்பதற்கு முன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நிற்க முடியுமா. தனியாக கூட நிற்க வேண்டாம். அ.திமு.க. கூட்டணியோடு அண்ணாமலை நிற்பதற்கு தைரியம் இருக்கிறதா. தைரியம் இருந்தால் அண்ணாமலை நின்று காட்டட்டும். யார் வெற்றி பெறுகிறார் என்று பார்ப்போம். நாங்கள் தேவையில்லாமல் யாரிடமும் சவால் விட மாட்டோம்.
எங்கள் கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி. அ.தி.மு.க. கூட்டணியில் இந்த தேர்தலில் நிற்பதற்கு தயங்குகின்றனர். அவர்களின் கூட்டணியில் தேர்தலை சந்திக்க கூடிய ஆற்றல் இல்லை. இவ்வளவு தான் அவர்களின் பலம். நாம் தேர்தல் களத்தில் நமது வேட்பாளரை இறக்கி விட்டு உள்ளோம். ஆனால் அவர்கள் யார் நிற்க வேண்டும் என்ற பந்தை அவர்களுக்கு உள்ளேயே உதைத்து கொள்கின்றனர். எங்களோடு பந்தை உதைப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. இதுவரை அவர்கள் அந்த களத்திற்கு வரவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- திருவண்ணாமலை, போளூர் பகுதியில் தொடர்ந்து குற்ற செயல்கள் அதிகரிப்பு
- ஜெயிலில் அடைப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த பூமந்தகுளம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் இவரது மனைவி ஜான்சி (வயது 48) இவர் சாராய விற்பனையில் ஈடுபட்ட போதும், திருவண்ணாமலை சமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்த அசோக்குமார் மனைவி மங்கை (42) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்கள் 2 பேரையும் திருவண்ணாமலை டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரை சேர்ந்த வெங்கடேசன் மகன் பாலாஜி (23) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவண்ணாமலை கிழக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார். போளூர் நகரம் சின்னப்பா தெருவை சேர்ந்த பாலமுருகன் (32) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு போளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா கொடுக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த குமார் (37) என்பவர் திருவண்ணாமலை கருமாரப்பட்டி ஏரிக்கரை அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட போது திருவண்ணாமலை தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவர்கள் 5 பேரும் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடுவதை தடுக்க திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் ஜான்சி, மங்கை, பாலாஜி, பாலமுருகன், குமார் ஆகிய 5 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து அவர்களை போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர்.
- நடந்து சென்றபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, செஞ்சி, சாலையில் கடந்த 17-ந்் தேதி இரவு அந்த வழியாக 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி பலத்த காயமடைந்தார். உடனே அந்த வழியாக சென்றவர்கள். சேத்துப்பட்டடு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சேத்துப்பட்டு போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியை மீட்டு திருவண்ணாமலை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலியானார்.
இது குறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும், மூதாட்டி குறித்தும் சேத்துப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயிலில் அடைப்பு
- போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை
போளூர்:
ஜமுனாமுத்தூர் அடுத்த மந்தைவெளி கொட்டாய் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 22) ஏழுமலை முன் விரோதத்தால் தன் சித்தப்பாவை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஏழுமலையை குண்டர் சட்டத்தில் ைது செய்ய கலெக்டர் முருகேஷிடம் பரிந்துரை செய்தார்.
இந்த நிலையில் ஏழுமலையை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் ஏழுமலையை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
போளூர் போலீசார் 17-ந் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த காரை மடக்கிய சோதனையை மேற்கொண்டனர். அப்போது காரில் 5 பேர் 2 கிலோ கஞ்சாவை கடத்தியது தெரிய வந்தது.
இதில் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான போளூர் சின்னப்பா தெருவை சேர்ந்த பாலகுமரனை (32) குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் கலெக்டர் முருகேஷ் உத்தரவின்படி போலீசார் பாலகுமரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.
- திருவண்ணாமலை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
- சமூக ஆர்வலர் கொலை வழக்கில் நடவடிக்கை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் கடந்த 2012-ம் ஆண்டு சமூக ஆர்வலர் திருவண்ணாமலையில் மனித உரிமை மீறல் மற்றும் நில அபகரிப்பு வழக்குகளில் பல்வேறு போலீஸ் அதிகாரிகள் மற்றும் நில மாபியாக்களுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் ராஜ்மோகன்சந்திரா இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந் தேதி செங்கம் சாலையில் அமைந்துள்ள சிங்கமுக தீர்த்தம் அருகில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முன்விரோதம் காரணமாக திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் திருப்பதி பாலாஜி என்ற வெங்கடேசன் (வயது 45) தரப்பினர் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து திருப்பதி பாலாஜி, அவரது தந்தை காசி என்ற வீராசாமி, அண்ணன் செல்வம், செல்வத்தின் மனைவி மீனாட்சி (41), திருவண்ணாமலை வடஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் (32), தென்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (39), ஆணாய்பிறந்தான் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (42), விஜயராஜ் (41), வடஆண்டாப்பட்டு பகுதியை சேர்ந்த சடையன் (40), போளூர் தாலுகா செங்குணம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (50) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு நடைபெற்று வந்த சமயத்தில் திருப்பதி பாலாஜியின் அண்ணன் செல்வமும், தந்தை காசி என்ற வீராசாமியும் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டு நீதிபதி (பொறுப்பு) இருசன்பூங்குழலி தீர்ப்பு அளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட திருப்பதி பாலாஜி என்ற வெங்கடேசன், மீனாட்சி, முருகன், சந்திரசேகர், அய்யப்பன், விஜயராஜ், சடையன், சுப்பிரமணி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். சமூக ஆர்வலர்கள் கொலை வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ேசவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த 5 புத்தூர் ஊராட்சியை சேர்ந்த சோமந்தாங்கல் கிராமத்தில் கிராம தேவதை காளியம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் ஆரணி சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தரிசனம் செய்தார். இதில் சேலம் தொழிலதிபர் அண்ணாமலை, ஒன்றிய செயலாளர் கொளத்தூர்திருமால், ஒன்றிய துணைச் செயலாளர் சகுந்தலாஏழுமலை, விவசாய பிரிவு செயலாளர் சேகர், மாவட்ட பிரதிநிதி சுந்தரேசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவில் இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
- சிகிச்சை பலனின்றி பரிதாபம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் பொன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 40). கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவர் புதுப்பேட்டை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இவருக்கு லட்சுமி (28) என்ற மனைவியும், பிரியதர்ஷினி (6), மேகவர்ஷினி (2) ஆகிய மகள்களும் உள்ளனர். கடந்த 21ம்தேதி மாலை தனது வீட்டருகே இருந்த போது மோகன்ராஜை விஷப்பாம்பு கடித்தது. அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாளை நடக்கிறது
- வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலத்தி லிருந்து ஆற்காடு செல்லும் ரோட்டில் உள்ள ராணுவப்பேட்டை என்கிற கம்மவான்பேட்டை கிராமத்தில் 24-ம்தேதி 55-ம் ஆண்டு காளைவிடும் திருவிழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொண்டு வேகமாக ஓடி முதலிடம் பெறும் காளைக்கு ரொக்கமாக முதல் பரிசு ரூ 75 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.65 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ 55 ஆயிரம் உள்பட பல்வேறு காளைகளுக்கு 55 பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
காளை விடும் திருவிழா நடைபெற உள்ள தெருவில் வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலூர் தாலுகா போலீசார் செய்துள்ளனர்.
- பால் வாங்க சென்றபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன், நரசிம்ம நகரில் வசித்து வருபவர் ஐயப்பன் வயது 55, இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
இன்று அதிகாலை 5 மணி அளவில் பால் பாக்கெட் வாங்க ஆற்காடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது செய்யாறு பஸ் நிலையம் நோக்கி சென்ற தனியார் பஸ் ஐயப்பன் மீது மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மகன் பிரேம்குமார் செய்யாறு போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- போதையில் அட்டூழியம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி பழைய பஸ் நிலை யம் அருகே பள்ளிக்கூடம் தெரு முகப்பில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தின் ஆரணி பகுதி முகவராக ஆரணிவெற்றிலை காரர் தெருவை சேர்ந்த பால குமரன் (வயது 24) என்பவர் தனியார் ஒப்பந்தத்தில் ஏ.டி. எம். மையத்தின் பொறுப் பாளராக கவனித்து வருகிறார்.
இந்த ஏ.டி.எம். மையத்தில் கடந்த 16-ந் தேதி அதிகாலை ஒருவர் நுழைந்து கண்ணாடி அறைகளை சேதப்படுத்தி பணம் திருட முயற்சி செய்துள்ளார்.
அன்று காலை பணம் நிரப்ப வந்த பாலகுமரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடன டியாக கண்காணிப்பு கேம ராக்களை சோதனை செய்ததில் ஏ.டி.எம். மையத்தில் பணம் திருட முயற்சி செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் பாலகுமரன் புகார்கொடுத்தார். அதன்பே ரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் கண்காணிப்பு கேம ராவில் உள்ள உருவங்களை போலீசார் தொடர்ந்து விசா ரணை செய்ததில் ஆரணி கார்த்திகேயன் சாலை நக ராட்சி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் கலையரசன் (30) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






