என் மலர்
திருவண்ணாமலை
- புனித நீர் தெளிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது
- ஏரளாமான பக்தர்கள் தரிசனம்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, அருகே உள்ள தச்சம்பட்டு, கிராமத்தில் ஜடா முனீஸ்வரன், முத்தாயி, அம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு பஞ்சவர்ணம் பூசி கும்பாபிஷேக விழா நடந்தது.
கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து. 108 கலசம் வைத்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து 3 காலயாக பூஜைகள் செய்தனர். பின்னர் மேளதாளம் முழங்க புனித நீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து ஜடாமுனீஸ்வரன், முத்தாயி, அம்மன் சிலைகள் மீது ஊற்றினார்கள்.
பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழா குழுவினர், செய்து இருந்தனர். இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- வாட்ஸ்-அப்பில் ஆடியோ அனுப்பி விபரீதம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த புரிசை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 47). இவர் அரசு மதுபான கடையில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கீதா (வயது 21) உள்பட 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
கல்லூரி மாணவி தற்கொலை
கீதா தனியார் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி படித்து வந்தார்.
இந்த நிலையில் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கினார். அங்கிருந்தவர்கள் உடனடியாக கீதாவை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கீதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வாட்ஸ் அப்பில் ஆடியோ பதிவு
சிவலிங்கம் தனது மகள் செல்போனை பார்த்த போது அதில் வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் செய்யாறு தாலுகா சடத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியதாகவும், பிறகு திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியபோது திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுப்பு தெரிவித்ததாகவும் வாட்ஸ்-அப் மூலம் வீடியோ ஆடியோ செய்தி அனுப்பி உள்ளது தெரியவந்தது. அதனால் விரக்தியில் கீதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து சிவலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் அனக் காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 320 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளியும் இருந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவி லுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் அங்குள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்று கிரிவலப்பாதை யில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரூ.2 கோடியே 71 லட்சத்தி 96 ஆயிரத்து 869 உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தது.
மேலும் 320 கிராம் தங்கமும், 2கிலோ 684 கிராம் வெள்ளி பொருட்களும் இருந்தது. உண்டியல் எண்ணும் பணி இணையதளத்தில் ஒளிபரப்பப் பட்டது.
- இருவேறு விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் நடவடிக்கை
- நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்
செய்யாறு:
சென்னை சைதாப்பேட்டை சின்னமலை வெங்கடபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 32). இவர் கடந்த 2005-ம் ஆண்டு பஸ்சில் சென்றபோது தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் இறந்தார். அவரது குடும்பத் துக்கு கோர்ட்டு உத்தரவிட்டபடி நஷ்டஈடு வழங்காததால் செய்யாறு கோர்ட்டில் நிறைவேறுதல் மனு தாக்கல் செய்யப் பட்டது.
அதனை விசாரித்த கோர்ட்டு, பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்பேரில்செய்யாறு பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இதேபோல் பெருங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஞானவேல், பொன்னன் ஆகிய மாட்டு வண்டி தொழிலாளர்கள் அரசு பஸ் மோதி காயம் அடைந்தனர்.
இவர்களுக்கும் கோர்ட்டு உத்தரவின்பேரில் நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இதனையடுத்து நிறைவேறுதல் மனுதாக்கல் செய்யப்பட்டதை விசாரித்த செய்யாறு கோர்ட்டு பஸ்ஒன்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
அதன்பேரில் செய்யாறு பஸ் நிலையத்தில் நின்றுக் கொண்டு இருந்த டவுன் பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
- ரூ.50 ஆயிரம் அபேஸ்
- போலீசார் விசாரணை
செங்கம்:
செங்கம் அருகே உள்ள அரட்ட வாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே பகு தியில் அடகு கடை நடத்தி வருகிறார்.
இவர் நேற்று கடையை திறந்து வைத்து விட்டு அருகில் சென்று இருந்த போது மர்ம நபர் ஒருவர் கடையில் புகுந்து ரூ.50 ஆயிரம் ரொக்கம், 4 பவுன் தங்கம், 900 கிராம் வெள்ளி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மணிகண்டன், செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சீர்வரிசையுடன் பக்தர்கள் ஊர்வலம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சைதாப்பேட்டையில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த கெங்கையம்மன் கோவில் உள்ளது.
சுமார் 35 ஆண்டுக்கு பின்பு கெங்கையம்மன் ஆலயத்தை புனரமைத்து மஹா கும்பாபிஷேகம் பணி வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கும்பாபிஷேக விழாவிற்கு முன்னதாக கெங்கையம்மனுக்கு தாய் வீட்டு சீதனமாக ஆரணி சைதாப்பேட்டை நாடக சாலை பேட்டை தெருவில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்திலிருந்து 50ஆயிரம் மதிப்பிலான கெங்கையம்மன் படம் பொறித்த பட்டுபுடவை பழ வகைகள் இனிப்பு வகைகள் வளையல் குங்குமம் மஞ்சள் உள்ளிட்ட சுமார் 100 தட்டு சீர்வரிசைகளை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மேளதாளத்துடன் சைதாப்பேட்டையில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக கொண்டு வந்தனர்.
கெங்கை அம்மன் கோவில் அம்மனுக்கு சீர்வரிசைகள் வழங்க கோவில் நிர்வாகிகள் பெற்று கொண்டனர்.
- தி.மு.க. சார்பில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் செய்யாறு டவுன் மண்டி தெருவில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கே விஸ்வநாதன் தலைமை வகித்தார். நகர மன்ற தலைவர் ஆ.மோகனவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், ஏ. என்.சம்பத், செய்யாறு ஒன்றிய செயலாளர் ஞானவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்எல்ஏ மற்றும் தலைமை கழக பேச்சாளர் அருளானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ வ.அன்பழகன், புரிசை சிவக்குமார், ராம் ரவி, வழக்கறிஞர்கள் சான் பாஷா, தினேஷ் குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் கொடியேற்றி நலத்திட்ட உதவி வழங்கினார்
- மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு கலெக்டர்முருகேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மூவர்ண பலூன்கள் மற்றும் சமாதான புறாக்களை வானில் பறக்கவிட்டார்.
காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷனி, கூடுதல் கலெக்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடியரசு தின விழாவில் தலைமை காவலர்கள் 50 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார், தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு சால்வை அணிவத்து மரியாதை செலுத்தினார், பின்னர் வருவாய்த்துறை, பழங்குடியினர் நலன், கூட்டுறவுத்துறை, மாற்று திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் 34 பயனாளிகளுக்கு ரூ.32,16,449 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன, அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- திருட்டு கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்
- கைரேகை நிபுணர்கள் சோதனை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் ஊராட்சி சர்வேசா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவர் திருவண்ணாமலை ஈசான்ய மைதானம் அருகில் உள்ள அம்மணி அம்மன் சித்தர் பீட நிர்வாகி ஆவார்.
இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று வேலூரில் நடைபெற்ற அவரது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் இன்று காலை ரமேஷ் வீட்டின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அவர் குடும்பத்தினருடன் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு விரைந்து வந்தார். பின்னர் அவர்கள் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது ஜன்னல் உடைக்கப்பட்டு பீரோக்களின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் பொருட்கள் கலைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
45 பவுன் நகை கொள்ளை
மேலும் வீட்டில் இருந்த 45 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி மற்றும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு கிளினிக் நடத்தி வந்தார்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி காதர்ஜண்டா தெருவில் போலி டாக்டர் ஒருவர் கிளினிக் வைத்து மூல நோய்க்கு சிகிச்சை அளிப்ப தாக புகார்கள் வந்தன.
இதை யடுத்து வந்தவாசி அரசு மருத் துவமனை தலைமை மருத் துவ அலுவலர் சிவப்பிரியா தலைமையிலான மருத்துவத் துறையினர் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட னர்.
இதில் வந்தவாசி கஸ்தூரி பாய் தெருவைச் சேர்ந்த ரிஷி காந்த்ராய் மகன் அனந்தகு மார்ராய் (வயது 42) என்பவர் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு கிளினிக் வைத்து மூல நோய்க்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. இதைய டுத்து அவரிடமிருந்து மருத் துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்த னர்.
இதுகுறித்து மருத்துவ அலு வலர் சிவப்பிரியா வந்தவாசி தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனந்தகுமார்ராயை கைது செய்தனர்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது
- பல்வேறு பூஜைகள் நடந்து வருகிறது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை பச்சையம்மன் மன்னார்சாமி திருக்கோயில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா வரும் 27 தேதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெற உள்ளன.
இதனை முன்னிட்டு கடந்த 23ஆம் தேதி திங்கட்கிழமை முதல் விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் கோ பூஜை தொடர்ந்து மங்கல இசை கிராம சாந்தி பிரசவ பலி சாந்தி ஓமம் பூர்ணாவதி பல்வேறு நிகழ்ச்சிகளும் முதல் கால யாக பூஜையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர். நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பச்சையம்மன் மன்னார்சாமி கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடந்தது
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள பைங்கினர் கிராமம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மைதானத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறிநாய் கடி நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.
கால்நடைதுறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம் தலைமை தாங்கினாாார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், செய்யாறு ஒன்றிய குழு தலைவர் வி.பாபு, கால்நடை உதவி இயக்குனர் ராமன், கால்நடை மருத்துவர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் ஒ.ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு வெறிநாய் கடி நோயைப் பற்றி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி முகாமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் பாலகோபால், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், தினகரன், வழக்கறிஞர் சான்பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் நாய்களுக்கு வெறி நாய் கடி நோய் தடுப்பூசி போடப்பட்டது.






