என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
    X

    ஆரணி கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி சீர்வரிசையுடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்த காட்சி.

    கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

    • சீர்வரிசையுடன் பக்தர்கள் ஊர்வலம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சைதாப்பேட்டையில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த கெங்கையம்மன் கோவில் உள்ளது.

    சுமார் 35 ஆண்டுக்கு பின்பு கெங்கையம்மன் ஆலயத்தை புனரமைத்து மஹா கும்பாபிஷேகம் பணி வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் கும்பாபிஷேக விழாவிற்கு முன்னதாக கெங்கையம்மனுக்கு தாய் வீட்டு சீதனமாக ஆரணி சைதாப்பேட்டை நாடக சாலை பேட்டை தெருவில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்திலிருந்து 50ஆயிரம் மதிப்பிலான கெங்கையம்மன் படம் பொறித்த பட்டுபுடவை பழ வகைகள் இனிப்பு வகைகள் வளையல் குங்குமம் மஞ்சள் உள்ளிட்ட சுமார் 100 தட்டு சீர்வரிசைகளை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மேளதாளத்துடன் சைதாப்பேட்டையில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக கொண்டு வந்தனர்.

    கெங்கை அம்மன் கோவில் அம்மனுக்கு சீர்வரிசைகள் வழங்க கோவில் நிர்வாகிகள் பெற்று கொண்டனர்.

    Next Story
    ×