அடகு கடையில் 4 பவுன் நகை திருட்டு

ரூ.50 ஆயிரம் அபேஸ்போலீசார் விசாரணை
அடகு கடையில் 4 பவுன் நகை திருட்டு
Published on

செங்கம்:

செங்கம் அருகே உள்ள அரட்ட வாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே பகு தியில் அடகு கடை நடத்தி வருகிறார்.

இவர் நேற்று கடையை திறந்து வைத்து விட்டு அருகில் சென்று இருந்த போது மர்ம நபர் ஒருவர் கடையில் புகுந்து ரூ.50 ஆயிரம் ரொக்கம், 4 பவுன் தங்கம், 900 கிராம் வெள்ளி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மணிகண்டன், செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com