என் மலர்
நீங்கள் தேடியது "படுகாயம் அடைந்த 15 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்."
- 25 பேரை கடித்து குதறியது
- காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
போளூர்:
போளூர் நகரப் பகுதியில் நேற்று காலை வெறிநாய் ஒன்று சுற்றி திரிந்து கொண்டு இருந்தது. வெளியூர்களிலிருந்து பஸ் நிலையம் மற்றும் பஜாருக்கு வந்த 25க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த 15 பேர் போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதனால் போளூர் பகுதி மக்கள் மிகுந்த பீதி அடைந்தனர். இது குறித்து பேரூராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஊழியர்கள் நேற்று இரவு முழுவதும் வெறிநாயை நகரம் முழுவதும் தேடி அலைந்தனர்.
இன்று அதிகாலை அங்காள பரமேஸ்வரி கோவில் தெருவில் சுற்றித்திரிந்த வெறிநாயை கண்டுபிடித்து பேரூராட்சி ஊழியர்கள் அடித்துக் கொன்றனர். இதனால் பேரூராட்சி டவுன் பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.






