என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • இன்று மாலை ஈசான்ய மைதானத்தில் தொடங்குகிறது.
    • இந்த நிகழ்ச்சிகள் அதிகாலை 6 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெற உள்ளது.

    திருவண்ணாமலையில் உலகபிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சிவராத்திரியும் ஒன்றாகும். அதன்படி கோவிலில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை முதல் மதியம் 2 மணி வரை சாமிக்கு லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு மகா சிவராத்திரியின் முதல் கால பூஜையும், இரவு 11.30 மணிக்கு 2-ம் கால பூஜையும், மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு 3-ம் கால பூஜையும், அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெறும்.

    மகா சிவராத்திரி விழாவை அனைத்து சிவன் கோவில்களிலும் விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

    அதன்படி இந்த ஆண்டு முதல் முறையாக திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் ஈசான்ய மைதானத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வெகு விமரிசையாக நடைபெற கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இன்று மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் ஆஸ்தான நாதஸ்வர கலைஞர்களின் மங்கள இசை நிகழ்ச்சியும், 6.30 மணிக்கு ஓதுவார்கள் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்களின் திருமுறை விண்ணப்பம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    7.30 மணிக்கு புதுவை சுரேஷ் குழுவினரின் கயிலாய வாத்திய நிகழ்ச்சியும், 8 மணிக்கு ஜெகத்லயா குழுவினர் மற்றும் சகானா அகாடமி குழுவினர், தில்லை ஸ்ரீசிவகாமி மாதங்கி நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், 9 மணிக்கு கலைமாமணி துறையூர் முத்துக்குமார் குழுவினரின் சாமியாட்டமும், 9.25 மணிக்கு சிவனடியார்கள் பெரிதும் சிந்தை மகிழ்வது மக்கள் தொண்டிலா, மகேசன் தொண்டிலா என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து 10.45 மணிக்கு செம்பருத்தி கலைக்குழு, பரமசிவம் குழுவினரின் நையாண்டி மேள நிகழ்ச்சியும், 12.30 மணிக்கு பினேஷ் மகாதேவன் குழுவினரின் நாட்டிய நாடகமும், அதிகாலை 1.30 மணிக்கு திண்டுக்கல் மின்னல் மூர்த்தி குழுவினர் வழங்கும் தப்பாட்டம் நிகழ்ச்சியும், 2 மணிக்கு சக்தி குழுவினரின் நாத சங்கமம் நிகழ்ச்சியும், 3 மணிக்கு ஏர்டெல் சூப்பர் சிங்கர் அபிலாஷ், அனிருத், ரேஷ்மா, ஷியாம், தன்யஸ்ரீ ஆகியோர் வழங்கும் இசை சங்கமம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சிகள் அதிகாலை 6 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை மீட்டுள்ளனர்.
    • அரியானா, குஜராத் மாநிலங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி அதிகாலை 4 ஏடிஎம் எந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளைக் கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில் கொள்ளையர்கள் அரியானாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

    திருவண்ணாமலையில் ஏ.டி.எம்.களை நோட்டமிட்டு கைவரிசை காட்டிய அவர்கள், பெங்களூர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் அரியானா சென்றுள்ளனர். அவர்களுக்கு மற்ற மாநிலத்தவர்கள் உதவி செய்துள்ளனர். இது தொடர்பாக கர்நாடகா, அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சிலரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் அரியானா சென்ற தனிப்படை போலீசார், அங்கு கொள்ளைக் கும்பல் தலைவன் உள்ளிட்ட 2 பேரை கைது செய்துள்ளனர். கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிப் (வயது 35), ஆஜாத் (வயது 37) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை மீட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் விமானம் மூலம் தமிழகத்திற்கு அழைத்து வருகிறார்கள்.

    ஏற்கனவே அரியானா, குஜராத் மாநிலங்களில் தனிப்படை போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்டவர்களின் கூட்டாளிகள் 6 பேர் இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை அரியானா மற்றும் குஜராத்தில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • மின்வாரிய செயற்பொறியாளர் தகவல்
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே நல்லவன்பா ளையத்தில் அமைந்துள்ள சமுத்திரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. 

    இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணாநகர், எடப்பாளையம், கீழ்நாத்தூர், வேல்நகர், கோபால் நாயக் கன் தெரு, கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவ லம் ரோடு, சிறுபாக்கம், மேல் செட்டிப்பட்டு, மெய்யூர், சாவல்பூண்டி, அத்தியந்தல், கச்சிராப்பட்டு, புத்தியந்தல், காந்திபுரம், தென்மாத்தூர், தச்சம்பட்டு, வெறையூர், வர கூர், சாந்திமலை, காம்பட்டு, ரமணாஸ்ரமம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மின் நிறுத் தம் செய்யப்படும். 

    இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர் (மேற்கு) ராஜஸ்ரீ தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • செங்கத்தில் பல்வேறு இடங்களில் திருட்டு நடப்பதாக குற்றச்சாட்டு

    செங்கம்:

    செங்கம் நகரில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெருவதை தடுக்கவும் மற்றும் கண்காணிப்பு பணிக்காகவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

    ஆனால் சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பயன்பாட்டில் இல்லை என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

    சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்து காட்சி பொருளாக உள்ளதாக அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது ஏடிஎம் கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

    இந்த நிலையில் செங்கம் நகர்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் அனைத்தையும் பழுது நீக்கி சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

    மேலும் செங்கம் நகரில் இரவு நேரங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்திட வேண்டும் என அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள்  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
    • சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவல்

    ஆரணி:

    ஆரணி டவுன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் ஆரணி டவுன் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் படித்து வருகின்றன.

    தினந்தோறும் பஸ் மூலம் பயணம் செய்து வருகின்றனர்.

    பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் பழைய, புதிய பஸ் நிலையங்களில் குவிந்து கிராமத்திற்கு செல்லும் பஸ்களில் முண்டியடித்து கொண்டு ஏறுகின்றனர்.

    இந்த நிலையில் ஆரணி பஸ் நிலையத்திலிருந்து தேவிகாபுரம் செல்லும் அரசு பஸ்சில் அதிகளவிலான மாணவ மாணவிகள் ஆபத்தான முறையில் பஸ் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

    இச்சம்பவம் தற்போது சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வருகின்றன.

    இதனால் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ்சை இயக்கி மாணவ மாணவிகளின் நலனை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்
    • கவுன்சிலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் மாதாந்திர கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக்பாஷா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 15-வது நிதிக்குழு மானியம் மூலம் அடிப்படை, சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவது அனைத்து வார்டுகளிலும் தெருக்களில், மின்விளக்குகள், குடிநீர் வசதி, கால்வாய், சாலை வசதி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதில் ஆணைமங்கலம் சமுதாயக் கூடம் கழிப்பிடம் பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை பணிகள், அனைத்து குடிநீர் வசதி, மழை நீர் வடிகால் அமைத்தல் பணிகள் உள்பட பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்களை பேரூராட்சி அலுவலர் ரமேஷ் வாசித்தார்.

    பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் உள்பட பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • செய்யாறு பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி பேச்சு
    • தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது

    செய்யாறு:

    செய்யாறில் நேற்று சமூக நீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட திக தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். வேல்.சோ.நெடுமாறன், காமராசன், வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திராவிட கழக தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டு பேசியதாவது:-

    1929 ஆம் ஆண்டு பெரியார் செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் சுய மரியாதை மாநாடு நடத்திய போது பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். தற்பொழுது பெண்கள் சொத்துரிமை, படிப்புரிமை, வேலை வாய்ப்பு உரிமை எனஅனைத்து துறைகளிலும் பெண்கள் பணி செய்வது பெரியார் எனும் மாபெரும் மனிதரின் புரட்சியால்தான், கலைஞர் ஆட்சியில் தான் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது.செயல்படுத்துவதற்கு திராவிட மாடல் ஆட்சி வழிகாட்டுவது திராவிடர் கழகம்.

    பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்பதற்காக மந்திரி பதவியை ராஜினாமா செய்தவர் புரட்சியாளர் அம்பேத்கர்.தற்பொழுது உள்ள கவர்னர் நம் வரிப்பணத்தில் சனாதன தர்மம் பரப்ப சத்சங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கலைஞரின் முயற்சியால் பாராளுமன்றத்தில் பெண்களுக்கான சொத்துரிமை கொண்டுவரப்பட்டது.

    திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் கல்லூரி சென்றால் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. கல்வி வள்ளல் பச்சைத்தமிழர் காமராஜர் பகல் உணவு திட்டத்தை சிறப்பாக செய்தார்.

    தற்பொழுது பகல் உணவு திட்டத்தை தாண்டி காலை உணவு சிற்றுண்டி குழந்தைகள் சாப்பிடுகிறார்களா என சொல்லும் அளவிற்கு இந்தியாவிலேயே திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இல்லம் தேடி கல்வி, வீடு தேடி மருத்துவம் என்ன எண்ணற்ற திட்டங்களை நமக்காக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். ஈரோடு இடைத்தேர்தல் பெரிய திருப்பமாக இருக்கும் அங்கு எதிரிகள் யார் என்றே புரியவில்லை அங்கு உள்ளவர்கள் பொம்மலாட்ட பொம்மைகள் காவிகாரர்கள் கால் கையை இழுத்து ஒரு கட்சியை நான்கு கட்சியாக ஆக்கினார்கள்.

    நான்கு கட்சியினரும் சுதந்திரமாக இல்லை நல்ல அடமானப் பொருட்களாக இருக்கிறார்கள் அடமானத்தை மீட்க வேண்டும் என்பதற்காக தன்மானத்தை பற்றி கவலை இல்லாமல் வருமானத்தைப் பற்றி தான் கவலைப்படுகிறார்கள். மோடி வந்தவுடன் ஒரு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்றார் அவர் வந்து ஒன்பது வருடம் ஆச்சு 18 ஆயிரம் கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதா, அதேபோல உங்கள் வங்கிக் கணக்கில் 15 லட்சம் வரும் என்று சொன்னார் எத்தனை பேருக்கு வந்தது, திராவிட மாடல் ஆட்சியில் அப்படியல்ல சொன்னதைத்தான் செய்வோம் செய்வதைத்தான் சொல்லுவோம் 86 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளனர். எல்லோரும் மனிதநேயத்தோடு இருக்க வேண்டும் அன்பு காட்ட வேண்டும்.

    சேது சமுத்திர கால்வாய் திட்டம் நிறைவேறினால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் இவ்வாறு பேசினார். இறுதியில் பெருமாள் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், விசிகேவை சேர்ந்த குப்பன், கம்யூனிஸ்ட் சேர்ந்த சோலைப் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்
    • உதவி கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரை

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூரை அடுத்த காட்டு நல்லான்பிள்ளை பெற்றான் தேவனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசெல்வ ஆண்டவர். விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரம்யா (வயது 26), இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரம்யாவிற்கு கடு மையான காய்ச்சல் ஏற்பட்டதில் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரம்யா மண்எண்ணெய் எடுத்து தனது உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். வலி தாங்காமல் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காகசென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய் தார். திருமணம் ஆகி 6 வருடங்களே ஆன நிலையில் ரம்யா இறந்துள்ளதால் அது குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கும் பரித்துரைக்கப்பட்டுள்ளது.

    • தி.மு.க. பிரமுகர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் எரிந்தது
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கரியான் செட்டி தெருவை சேர்ந்தவர் சங்கர். தி.மு.க தொண்டரணி நகர துணை அமைப்பாளர். இவர் பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சங்கர் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம கும்பல் வீட்டின் வெளிப்புறத்தில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். அந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ பிழம்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த் துள்ளார். அப்போது வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து சங்கர் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த இலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தமாக திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அவர்களை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • உடல்நலக் குறைவால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    தூசி:

    வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள தர்மாபுரம் குளக் கரை தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 63), உடல்நலக் குறைவால் இவர் அவதிப்பட்டு வந்தார்.

    பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் விஷத்தை குடித்து விட் டார். மயங்கிய நிலையில் இருந்த இவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட் டார்.

    இது தொடர்பாக இவருடைய மகன் சக்திவேல் தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • போலீசார் விசாரணை
    • திருமணமான ஒரு ஆண்டில் பரிதாபம்

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த ஸ்ரீரங்க ராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் தசரதன் (வயது 35). விவசாயியான இவர் பொக்லைன் எந்திரமும் வைத்துள்ளார்.

    அதில் பாலாஜி என்பவரை டிரைவராக பணியமர்த்தி உள்ளார். இவருக்கு ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் டிரைவர் பாலாஜி வந்தவாசிக்கு மோட்டார்சைக்கிளில் தசரதனை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.

    முதலூர் கிராமம் அருகில் வந்தபோது நான் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விட்டேன். பிழைக்க மாட்டேன் இப்படியே என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்று வீடு என்று கூறியுள்ளார்.

    தசரதன் உடல்நிலை மோசமானதால் அவரை வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். டாக்டர்கள் முதலுதவி செய்து தீவிர சிகிச்சை அளித்தனர் சிகிச்சைபலனின்றி தசரதன் இறந்தார்.

    உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவருடைய தம்பி அமலேஷ் கீழ்க்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆரணியில் கோவில் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
    • தாசில்தாரிடம் மனு அளித்தனர்

    ஆரணி:

    ஆரணி டவுன் அண்ணசாலை அருகில் உள்ள பழமைவாய்ந்த அங்காளம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலை சுற்றி ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வருவாய் துறை மற்றும் நகராட்சி மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டோருக்கு புகார் மனு அளிக்கப்பட்டன.

    ஆனால் இதுநாள் வரையில் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை தற்போது நெருங்கி வரும் மயான கொள்ளை திருவிழாவிற்கு இடையூறு இல்லாமல் விழா நடைபெறுவதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மனு அளிக்க ஆரணி கோட்டை தாலுகா அலுவலகத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தாமோதரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்தனர்.

    இதனையடுத்து திடீரென தாசில்தார் அலுவலகம் நுழைவாயில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இச்சம்பவம் அலுவலகத்தில் ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து வந்த ஆரணி டவுன் போலீசார் மற்றும் துணை தாசில்தார் சங்கீதா ஆகியோர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். துணை தாசில்தார் சங்கீதாவிடம் போராட்டம் நடத்தியவர்கள் மனு அளித்தனர்.

    ×