என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • கொள்ளை நடந்து 7 நாட்களாகியும் கொள்ளை கும்பலைச் சேர்ந்த மற்றவர்களை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
    • தனிப்படையினர் நடத்திய விசாரணையில் கொள்ளை கும்பலை சேர்ந்த மேலும் 3 பேர் அரியானா மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் எந்திரங்களை உடைத்து ரூ.73 லட்சம் கொள்ளையடித்தனர். கொள்ளை கும்பலை கைது செய்வதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அரியானா, குஜராத், கர்நாடகா மாநிலம் உட்பட பல பகுதிகளில் அதிரடி வேட்டை நடத்தினர்.

    கடந்த 7 நாட்களாக போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    இந்த கொள்ளையில் ஈடுபட்ட அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் தலைவன் முகமது ஆரிப் மற்றும் ஆஜாத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இந்த கொள்ளையில் மேலும் 6-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் ரூ.70 லட்சம் பணத்தை அவர்கள் பதுக்கி வைத்துள்ளனர்.

    கைதான இருவரையும் வருகிற 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திருவண்ணாமலை டவுன் போலீசார் முடிவு செய்தனர். அதற்காக திருவண்ணாமலை கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்தனர்.

    காவலில் எடுத்து விசாரணை நடத்திய பின்னரே மீதமுள்ள கொள்ளையர்கள் எங்கு பதுங்கி இருக்கிறார்கள் ரூ.70 லட்சம் பணம் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது போன்ற தகவல்கள் வெளிவரும்.

    கொள்ளை நடந்து 7 நாட்களாகியும் கொள்ளை கும்பலைச் சேர்ந்த மற்றவர்களை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    தொடர்ந்து தனிப்படையினர் நடத்திய விசாரணையில் கொள்ளை கும்பலை சேர்ந்த மேலும் 3 பேர் அரியானா மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார் அவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அரியானா, ராஜஸ்தான் மாநில எல்லைப் பகுதியில் மாடு திருடிய 2 பேரை காரில் வைத்து அப்பகுதி மக்கள் தீவைத்து எரித்து கொலை செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    இதனால் அரியானா மாநிலத்தில் பதுங்கி உள்ள கொள்ளையர்களை பிடிப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஆரணியில் பட்டப்பகலில் துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி டவுன் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன் ( வயது 51). பட்டு சேலை வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று பகலில் ஆரணி தச்சூர் சாலையில் உள்ள கனரா வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்து 54 ஆயிரம் எடுத் தார். பின்னர் ஆரணி பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய் தார். மீதித்தொகை ரூ.1 லட்சத்து 54 ஆயிரம் கையில் வைத்திருந்தார்.

    அப்போது வங்கியில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்ததற்கு ஆதார் கார்டு, மற்றும் பான்கார்டு நகலை கேட்டதால் அவர் தனது கையில் வைத்திருந்த பணத்தை ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியில் உள்ள பாக்சில் வைத்தார். பின்னர் ஆரணி காந்தி ரோட்டில் உள்ள தனியார் பிரவுசிங் சென்டருக்கு சென்று அங்கு சீட்டுக்கடியில் இருந்த ஆதார் கார்டு, பான்கார்டைஎடுத்து ஜெராக்ஸ் போடச் சென்றார்.

    ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு வெளியே வந்து பார்க்கும்போது சீட் டுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 54 ஆயிரம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களி டம் கேட்டு பார்த்தார். ஆனால் யாரும் பார்க்கவில்லை என கூறினர்.

    இதையடுத்து ஆரணி டவுன் போலீசில் சரவணன் புகார் கொடுத்தார். அதன்பே ரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் மற் றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அங் குள்ள கண்காணிப்பு கேமராவில் பதி வாகி உள்ளதா என்று ஆய்வு செய்தனர். மேலும் பணத்தை திருடி சென்ற மர்ம தபரை போலீசார் தேடி வருகின்றனர். ஆரணியில் பட்டப்பகலில் ஸ்கூட்ட ரில் வைக்கப்பட்ட பணம் திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வாலிபரின் வீட்டுக்கு தீ வைத்த உறவினர்கள்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது மாணவி. இவர் வந்த வாசியில் உள்ள தனியார் கல் லூரியில் இறுதி ஆண்டு படித்துவருகிறார். இந்தநிலை யில் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் தோட்டத்துக்குச் சென்று பார்த்த போது மாணவி அங்கு இல்லை. பின்னர் எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை.

    வந்தவாசியை அடுத்த வீரம் பாக்கம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தங்களது மகளுடன் பேசி வந்த நிலையில் அவர் கடத்திச் சென்றிருக்கலாம் என கருதி மாணவியின் பெற் றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது அந்த வாலிபர் வீட்டில் இல்லாததால் சந்தே கம் அடைந்த அவர்கள் அங் கிருந்தவர்களிடம் கேட்ட போது சரியான தகவல் கூற வில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் உறவி னர்கள் அவர்களுடன் தக ராறு செய்தனர். பின்னர் வாலிபரின் குடிசை வீட்டுக்கு திடீரென தீ வைத்ததாக கூறப்படுகிறது.

    அப்போது மாணவியின் உறவினர்களில் சிலர் உடனே தீயை அணைத்த னர். அதற்குள் வீடு முழுவதும் தீ பரவியதால் அக்கம் பக்கத் தினர் வந்தவாசி வடக்கு போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட அனைவரையும் தடுத்து நிறுத்தினர். மேலும் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை ஆசை வார்த்தை யாராவது கடத்திச் சென்றனரா அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மரங்கள் எரிந்து நாசம்
    • தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தன்னார்வ சேவை அமைப்பினர், வனத்துறையினர் ஈடுபட்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை காஞ்சி சாலையில் அமைந்துள்ளது கவுத் திமலை. இரும்பு தாது உள்ள இந்த மலை மற்றும் மலைப்பகுதியில் உள்ள காப்புக்காடுகளில் லட் சக்கணக்கான மரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண் டும் கோடை காலத்தில், இந்த மலையில் தீ விபத்து ஏற்படுவதும் மரங்கள் அழிவதும் வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில், கவுத் திமலையின் தென்மேற்கு திசையில் நேற்று மாலை ஏற்பட்ட தீ, கிடுகிடுவென பரவியது. அதனால், மலைப்பகுதியில் உள்ள ஏராளமான மரங்கள் தீயில் கருகி சாம்பலா னது. பல அடி உயரத் துக்கு தீ பற்றி எரிந்ததால், மலைப்பகுதியில் புகை மண்டலமாக காட்சிய ளித்தது.

    இந்த தீயில் சிக்கி, மான்கள், காட்டுப்பன் றிகள் உள்ளிட்ட வன விலங்குகளும் உயிரிழந்தி ருக்கலாம் என தெரிகிறது. கோடை காலம் தொடங்கும் முன்பே, கவுத்திமலை யில் காட்டுத் தீப்பற்றியிருப்பது வன ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

    தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில், தன்னார்வ சேவை அமைப்பினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    ஆனாலும் தீயை கட் டுக்குள் கொண்டு வரு வது கடும் சவாலாகவே உள்ளதாக தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் தெரி வித்தனர்.

    மேலும், மலைப்பகுதிக்கு கால்நடைகளை மேய்க்க செல்வோர், புகைப்பிடிக்க பற்ற வைக்கும் நெருப்பால், இது போன்ற விபத்துக்கள் ஏற் படலாம் அல்லது சமூக விரோதிகள் திட்டமிட்டு தீவைத்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    • திருவண்ணாமலை கோவில் ராஜகோபுரம் முன்பு நடந்தது
    • மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு ஏற்பாடு

    திருவண்ணாமலை:

    மகா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாதஸ் வரம், தவில் இசை சங்கம் சார்பில் 41-ம் ஆண்டு இசை விழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு நேற்று நடைபெற்றது.

    சங்கத்தின் தலைவரான நாதஸ் வர கலைமாமணி பிச்சாண்டி தலை மையில் 108 நாதஸ்வர மற்றும் தவில் இசை கலைஞர்களின் இசை விழா நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இசை விழா, 24 மணி நேரம் நடைபெற்று இன்று அதிகாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

    கவுரவத் தலைவர் பூபாலன், செயலாளர் ஏழுமலை, துணை கவுரவத் தலைவர் முருகேசன், துணை செயலாளர் கார்த்திகேயன், இணை தலைவர் பாலகணேசன் மற்றும் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்று, மங்கல இசை மற்றும் பல்வேறு ராகங்களில் வாசித்தனர். மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றன. இசை விழாவை, அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    • விடிய விடிய ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தாழம்பூவை சிவனுக்கு வைத்து வழிபடும் நிகழ்வு மற்றும் சிறப்பு தீபராதனை நடந்தது

    திருவண்ணாமலை:

    பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும்.

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருமால் மற்றும் பிரம்மன் ஆகிய இருவரில் யார் பெரியவர் என போட்டி வந்த போது, நான் என்ற அகந்தை அடங்கினாலன்றி சிவ பரம்பொருளை காண முடியாது என்ற உண்மையை உலகிற்கும், திருமால் மற்றும் பிரம்மனுக்கு உணர்த்தும் வகையில் தனது அடியையும், முடியையும் யார் கண்டு வருகிறீர்களோ அவரே பெரியவர் என சிவபொருமான் கூறினார்.

    திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியை குடைந்து சென்றும், பிரம்மன் அன்னபட்சியாக உருவெடுத்து முடியைக்காணவும் உயரப்பறந்து சென்றார்.

    இருவரும் பல யூகங்களாக தேடியும் அடியையும், முடியையும் காண முடியாமல் தோல்வி அடைந்ததுடன் திருமால் தனது தவறை உணர்ந்து சிவனிடம் சென்று வழிபட்டார்.

    பிரம்மன் மேலும் பல யுகங்களாக சென்று முடியை காண முடியாத சூழலில் மேலிருந்து கீழே வந்த தாழம்பூவை பொய் சாட்சி சொல்ல வைத்தார்.

    இதனையறிந்த சிவபெருமான் நெருப்பு பிழம்பாக லிங்க வடிவாய் வெளியே வந்து அனைத்து தேவர்களுக்கும் நல்லாசி வழங்கியதுடன் பிரம்மனுக்கு பூலோகத்தில் கோவில்கள் இல்லை என்றும், பொய்சாட்சி கூறிய தாழம்பூ பூஜைக்குப் பயன்படாது என்று சாபம் அளித்து லிங்கோத்பவ மூர்த்தியாக காட்சியளித்தார். இந்த மகா சிவராத்திரி உருவான இடம் திருவண்ணாமலையாகும்.

    மகா சிவராத்தியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் சன்னதி பின்புறம் மேற்குத் திசையில் அமைந்துள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு நள்ளிரவில் 12 மணிக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், ருத்ராட்சம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் ஆராதனைகள் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தாழம்பூவை சிவனுக்கு வைத்து வழிபடும் நிகழ்வு மற்றும் சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது. இந்த சிவராத்திரி விழாவில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு லிங்கோத்பவரை தரிசனம் செய்து வழிபட்டனர்.

    அதிகாலை வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • போலீசார் வெளியிட்ட செய்தி குறிப்பில் ரூ.72 லட்சத்து 79 ஆயிரம் பணம் கொள்ளை போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இருவரையும் மார்ச் 3-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 11-ந்தேதி நள்ளிரவில் 4 ஏ.டி.எம். மையங்களை குறி வைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    திருவண்ணாமலை நகர பகுதியில் 2 ஏ.டி.எம். மையங்கள், போளூரில் ஒரு ஏ.டி.எம். மையம், கலசப்பாக்கத்தில் இன்னொரு ஏ.டி.எம். மையம் என 4 ஏ.டி.எம். மையங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 73 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் சுருட்டிக் கொண்டு தப்பி ஓடினார்கள். இதில் கலசப்பாக்கம் ஏ.டி.எம். மையம் "ஒன் இண்டியா" ஏ.டி.எம். மையமாகும். மற்ற 3 ஏ.டி.எம் மையங்களும் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களாகும்.

    கடந்த 12-ந்தேதி அன்று இரவோடு இரவாக பணத்தை மூட்டையாக கட்டிக் கொண்டு தப்பிய கொள்ளையர்கள் தமிழக எல்லையை தாண்டி தலைமறைவானார்கள்.

    இதைத் தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் கொள்ளை கும்பலை பிடிக்க நேரடியாக களம் இறங்கினார். சென்னையில் இருந்து உடனடியாக புறப்பட்டு திருவண்ணாமலைக்கு விரைந்து சென்ற அவர் அங்கு டி.ஐ.ஜி. முத்துசாமி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன் (திருவண்ணாமலை), பால கிருஷ்ணன் (திருப்பத்தூர்), ராஜேஷ்கண்ணன் (வேலூர்), செபாஸ் கல்யாண் (திருவள்ளூர்), கிரண்ஸ்ருதி (ராணிப் பேட்டை) ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தனித்தனியாக பிரிந்து கொள்ளையர்களை பிடிக்க வெவ்வேறு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டனர்.

    இவர்களில் திருவண்ணாமலை சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் அரியானா மாநிலத்துக்கு விரைந்து சென்றனர்.

    ஏ.டி.எம். கொள்ளை நடந்த விதம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரீப் என்கிற கொள்ளை கும்பல் தலைவன் தலைமையில் சுமார் 6 கொள்ளையர்கள் ஏ.டி.எம்.களை குறி வைத்து கைவரிசை காட்டியது வெட்ட வெளிச்சமானது.

    "மேவாட்" கொள்ளையர்கள் என்று அழைக்கப்படும் இந்த கொள்ளை கும்பல் மிகவும் துணிச்சலாக சினிமா காட்சிகளையே மிஞ்சும் வகையில் பரபரப்பாக கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றுவதில் கை தேர்ந்தவர்கள் ஆவர்.

    இவர்களை பற்றி ஐ.ஜி. கண்ணன் ஏற்கனவே நன்கு தெரிந்து வைத்திருந்ததால் உடனடியாக அவரது மேற்பார்வையிலேயே விசாரணை முடுக்கி விடப்பட்டு கொள்ளையர்கள் அடை யாளம் காணப்பட்டனர்.

    இதன்படி முகமது ஆரிப் தலைமையிலான கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் முகமது ஆரிப்பும், அவனது கூட்டாளியுமான ஆசாத் ஆகிய இருவரும் அரியானாவில் பதுங்கி இருக்குமிடம் தெரிந்தது. இதைத் தொடர்ந்தது அரியானா மாநில போலீசாரின் உதவியுடன் தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்பட்டது.

    ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக திருவண்ணாமலை போலீசார் வெளியிட்ட செய்தி குறிப்பில் ரூ.72 லட்சத்து 79 ஆயிரம் பணம் கொள்ளை போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.3 லட்சம் பணம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் மீதமுள்ள சுமார் 70 லட்சம் ரூபாய் எங்கே? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    கொள்ளையடித்த பணத்தை கொள்ளையர்கள் பங்கு போட்டுக் கொண்டு தனித்தனியாக பிரிந்து சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் 2 பேர் மட்டுமே பிடிபட்டு உள்ள நிலையில் மற்றவர்களை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.

    ரூ.75 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் லாரியில் கடத்திச் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை மொத்தமாக பறிமுதல் செய்ய போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அரியானாவில் முகாமிட்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    ஏ.டி.எம்.களில் கை வரிசை காட்டுவதற்காக அரியானா மாநிலம் நூ மாவட்டம் சோனாரி கிராமத்தைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய கொள்ளையன் முகமது ஆரிப் தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து புறப்பட்டு கர்நாடக மாநிலத்துக்கு சென்றுள்ளான். அங்கு கோலார் பகுதியில் லாட்ஜில் அறை எடுத்து அனைவரும் தங்கி உள்ளனர்.

    முகமது ஆரிப்பும், கூட்டாளிகளும் திருவண்ணாமலைக்கு சென்று ஒத்திகை பார்த்துள்ளனர். இதன் பின்னரே கடந்த 12-ந்தேதி அதிகாலையில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்கள். இருப்பினும் போலீஸ் படை துரிதமாக செயல்பட்டு கொள்ளை கும்பலை கூண்டோடு பிடித்துள்ளனர். இதை தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு தனிப்படை போலீசாரை பாராட்டியுள்ளார்.

    இதற்கிடையே அரியானாவில் பிடிபட்ட முகமது ஆரிப், ஆசாத் இருவரையும் போலீசார் நேற்று இரவு விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்ற போலீசார் கொள்ளையர்கள் இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். இருவரையும் மார்ச் 3-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கொள்ளை கும்பலுக்கு உதவி செய்தவர்கள் யார்-யார்? என்பதை கண்டு பிடித்து அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் போலீசார் கொண்டு வந்துள்ளனர்.

    கொள்ளை நடந்த 6 நாட்களில் ஏ.டி.எம். கொள்ளையர்களை மடக்கி பிடித்துள்ள தனிப்படை போலீசாரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

    • பழங்குடியின மாணவர்கள் புகார்
    • கல்லூரி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, கல்வி உதவி தொகை பெற ஆன்லைனில் புதிய சாதிச்சான்றிதழ் பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில் பழங்குடி மாணவ மாணவிகளுக்கு கோட்டாட்சியர் மூலமாக வழங்கப்பட்ட நிரந்தர சாதிச்சான்றிதழை பதிவேற்றம் செய்ய வழிவகை செய்திட வேண்டும், மேலும் புதிய சாதிச்சான்றிதழ் பெற பல நடைமுறை சிக்கல்களான கால தாமதம், மற்றும் கோட்டாட்சியர் மூலமாக விசாரணை தாமதம் ஆகியவற்றை களைய காலநீட்டிப்பு ஆகியவை வழங்கிட வேண்டும் என கோரிக்கை அடங்கிய மனுவினை வந்தவாசி தாசில்தார் முருகானந்தத்திடம் வழங்கினர்.

    இது குறித்து தாசில்தாரிடம் கேட்டதற்கு உடனடியாக கல்லூரியிலேயே மாணவ மாணவிகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கிட ஆன்லைன் முகாம் அமைத்து தர கல்லூரி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • பக்தர்கள் அவதி
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    செங்கம்:

    செங்கத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீகாக்கங்கரை விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் தினமும் நூற்றுக்கணக்கானோர் காலை மற்றும் மாலை வேலைகளில் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    இந்த கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கால்வாயின் மீது இரும்பு கம்பிகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. இந்த இரும்பு கம்பிகள் பல வருடங்களாக பரா மரிப்பின்றி உள்ளது. இந்நிலையில் பராமரிப்பு இல்லாமல் உள்ள இந்த இரும்பு கம்பிகள் துருப்பிடித்தும் வளைந்தும் சில இடங்களில் அகலமான பள்ளங்கள் ஏற்பட்டும் காட்சியளிக்கிறது.

    கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தவறுதலாக சேதமடைந்துள்ள இரும்பு கம்பிகளில் கால் சிக்கிக் கொண்டு கீழே விழும் நிலை ஏற்படுகிறது. மேலும் சரக்கு வாகனம் இந்த கம்பியின் மீது ஏறியதில் வளைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    இரும்பு கம்பிகளை மாற்றி புதிதாக அமைத்து அச்சமின்றி பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    • பெற்றோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவன் டி.அருண் கன்னியாகுமரி ஸ்டெல்லா மேரிஸ் என்ஜினியரிங் கல்லூரியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட பிரிவில் கத்தி சண்டை போட்டியில் கலந்து கொண்டு, மூன்றாமிடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.

    மாணவன் அருணுக்கு நேற்று பள்ளியின் இறை வணக்கக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் ஆர் கருணாநிதி தலைமையில் சான்றிதழ்கள், பதக்கம் வழங்கப்பட்டது.

    ஆசிரியர் சங்க செயலாளர். என் சுப்பிரமணி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோவர்த்தனன் முன்னிலை வகித்தார்.

    இதில் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் சரவணன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு கத்திச்சண்டை உபகரணங்கள் வழங்கிய பாரதிதாசன், போக்குவரத்து செலவுக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

    மேலும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் ஆர்.கார்த்திகேயன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆர். அமுதா ஜி. அன்பு குமரன், வெற்றி பெற்ற மாணவன் அருணின் பெற்றோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இந்த விழாவில் பள்ளியின் ஆசிரிய ஆசிரியைகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் எம் ராஜா நன்றி கூறினார்.

    • 1330 வெள்ளை நிற சாக்பீஸ்களில் 1330 திருக்குறள்களையும் எழுதினர்
    • திருக்குறள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முயற்சி

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த கல்லாங்குத்து கிராமத்தைச் சேர்ந்தவர் உதயராஜ். இவரது மனைவி செண்பகவள்ளி (வயது 23). பட்டதாரியான இவர் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது வழிகாட் டுதலின் பேரில் அதே கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் மோனேஷ், யுகேஷ்வரன், நிரஞ்சனா ஆகியோர் 1330 வெள்ளை நிற சாக்பீஸ்களில் பென்சில் மூலம் 1330 திருக் குறள்களையும் எழுதினர்.

    பின்னர் தன்னார்வலர் செண்பகவள்ளி வீட்டின் தரையில் திருக்குறள்கள் எழுதப்பட்ட சாக்பீஸ்களை அடுக்கி திருவள் ளுவரின் உருவத்தை அவர்கள் வடிவமைத்தனர்.

    தகவலறிந்த மாணவர்கள், பொதுமக்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் அங்கு சென்று பார் வையிட்டு மாணவர்களை பாராட்டினர்.

    இதில், மோனேஷ் மருதாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பும், நிரஞ்சனா அதே பள்ளியில் 6-ம் வகுப்பும், யுகேஷ்வரன் வந்தவாசி ஆர்.சி.எம். உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    உலக பொதுமறையான திருக்குறள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சி மேற்கொண்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

    • சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
    • பொதுப்பணி துறை சார்பாக ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆரணி வேலூர் சாலை பூசிமலைக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள 1806-ம் ஆண்டு திருமலை ராவ் தன்னுடைய காதல் மனைவிக்காக கட்டபட்ட இந்த கண்ணாடி மாளிகை கட்டினார். தற்போது 217 ஆண்டுகளுக்கு மேலாக பழமைவாய்ந்த கட்டிடமாக உள்ளது.

    மேலும் கடந்த 70 ஆண்டுக்கு மேலாக வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் கட்டுபாட்டில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணாடி மாளிகை வனத்துறைக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளதால் வனத்துறையினர் தனது முழு கட்டுபாட்டில் காதல் கண்ணாடி மாளிகையை மீட்டெடுத்தனர்.

    ஆரணி சரக வனத்துறையினர் கண்ணாடி மாளிகையை சுற்றி வேலி அமைத்து வனத்துறைக்கு சொந்தமாக இடமான அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    ஆரணியில் புரதான சின்னமாக விளங்கும் பூசிமலைக்குப்பம் கண்ணாடி மாளிகை குடிகாரகளின் கூடாராமாக மாறி வருகிறது. இந்த கண்ணாடி மாளிகை தற்போது வனத்துறையிடம் வந்துள்ளது.

    இந்த கண்ணாடி மாளிகையை சுற்றுலாதலமாக மாற்றி அமைத்து பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்களின் கோரிக்கை விடுத்தனர்.

    அமைச்சர் எ.வ.வேலு ரூ.11 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புனரமைத்து கண்ணாடி மாளிகை பாதுகாக்கபடும் என்று அறிவித்தார்.

    ஆனால் தற்போது 10 மாதங்கள் மேலாகியும் பூசிமலைகுப்பம் கிராமத்தில் உள்ள கண்ணாடி மாளிகையில் எந்த பணியும் சிறிதளவும் நடைபெறவில்லை. இதனால் பூசிமலைக்குப்பம் கிராமத்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பணியை விரைந்து முடித்து கண்ணாடி மாளிகையை சுற்றுதலமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதேபோல படவேடு பகுதியில் உள்ள கல்வெட்டுகள் புராதான சின்னங்கள் அனைத்தையும் பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×