வந்தவாசியில் கல்வி உதவி தொகை, சாதிச்சான்றிதழ் ஆன்லைனில் பெறுவதில் காலதாமதம்

பழங்குடியின மாணவர்கள் புகார் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி
தாசில்தாரிடம் மாணவர்கள் புகார் மனு அளித்த காட்சி.
தாசில்தாரிடம் மாணவர்கள் புகார் மனு அளித்த காட்சி.
Published on

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, கல்வி உதவி தொகை பெற ஆன்லைனில் புதிய சாதிச்சான்றிதழ் பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் பழங்குடி மாணவ மாணவிகளுக்கு கோட்டாட்சியர் மூலமாக வழங்கப்பட்ட நிரந்தர சாதிச்சான்றிதழை பதிவேற்றம் செய்ய வழிவகை செய்திட வேண்டும், மேலும் புதிய சாதிச்சான்றிதழ் பெற பல நடைமுறை சிக்கல்களான கால தாமதம், மற்றும் கோட்டாட்சியர் மூலமாக விசாரணை தாமதம் ஆகியவற்றை களைய காலநீட்டிப்பு ஆகியவை வழங்கிட வேண்டும் என கோரிக்கை அடங்கிய மனுவினை வந்தவாசி தாசில்தார் முருகானந்தத்திடம் வழங்கினர்.

இது குறித்து தாசில்தாரிடம் கேட்டதற்கு உடனடியாக கல்லூரியிலேயே மாணவ மாணவிகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கிட ஆன்லைன் முகாம் அமைத்து தர கல்லூரி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com