என் மலர்
உள்ளூர் செய்திகள்

கத்திச்சண்டை போட்டியில் கண்ணமங்கலம் அரசு பள்ளி மாணவன் சாதனை
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
- பெற்றோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவன் டி.அருண் கன்னியாகுமரி ஸ்டெல்லா மேரிஸ் என்ஜினியரிங் கல்லூரியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட பிரிவில் கத்தி சண்டை போட்டியில் கலந்து கொண்டு, மூன்றாமிடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.
மாணவன் அருணுக்கு நேற்று பள்ளியின் இறை வணக்கக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் ஆர் கருணாநிதி தலைமையில் சான்றிதழ்கள், பதக்கம் வழங்கப்பட்டது.
ஆசிரியர் சங்க செயலாளர். என் சுப்பிரமணி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோவர்த்தனன் முன்னிலை வகித்தார்.
இதில் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் சரவணன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு கத்திச்சண்டை உபகரணங்கள் வழங்கிய பாரதிதாசன், போக்குவரத்து செலவுக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
மேலும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் ஆர்.கார்த்திகேயன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆர். அமுதா ஜி. அன்பு குமரன், வெற்றி பெற்ற மாணவன் அருணின் பெற்றோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த விழாவில் பள்ளியின் ஆசிரிய ஆசிரியைகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் எம் ராஜா நன்றி கூறினார்.






