என் மலர்
திருவண்ணாமலை
- சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
ஜார்க்கண்ட் மாநிலம், கலகாபாத், கிரிதிக் பகுதியை சேர்ந்தவர் சுகன்மாஞ்சி. இவரது மகன் தீபக் (வயது 23).
இவர் வெம்பாக்கம் அடுத்த நர்சம்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நடைபெற்று வரும் கட்டுமான பணியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை கடையில் பொருட்கள் வாங்குவதற்காக நர்சம்பேட்டை கிரஷர் ரோடு பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது பின்னால் வந்த அடையாள தெரியாத வாகனம் தீபக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் படுகாயம் அடைந்த தீபக் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் தீபக்கை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி தீபக் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.இது குறித்து தூசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சொத்துவரி செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்
- செயல் அலுவலர் தகவல்
செங்கம்:
செங்கம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. மேலும் செங்கம் பேரூராட்சியில் பல்வேறு இடங்களில் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக கட்டடங்கள் உள்ளது.
செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடு மற்றும் சொத்து வரி செலுத்தாத உரிமையா ளர்கள் சொத்து வரி செலுத்த பேரூராட்சி சார்பில் அறிவு றுத்தப்பட்டுள்ளது.
செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்போர் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, கடை வாடகை உள்பட வரி இனங்களை செலுத்தாத வர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் வரி இனங்களை செலுத்தி பேரூராட்சியில் இருந்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வரி செலுத்தாதவர்கள் சொத்துக்கள் மீது ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் செங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் ச.லோகநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று செங்கம் பகுதியில் வரி இனங்கள் செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பை பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் மேற்பார்வையில் ஊழியர்கள் துண்டித்தனர்.
- உதவி கலெக்டர் வழங்கினார்
- குறை தீர்வு முகாமில் மனு கொடுத்த உடனே தீர்வு
ஆரணி:
ஆரணி டவுன் கோட்டை வீதியில் ஆரணி சப்-கலெக்டர் அலுவலகம் இயங்கி வருகின்றன. தற்போது சப்-கலெக்டராக தனலட்சுமி என்பவர் இருந்து வருகின்றார்.
இந்த அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட் கிழமை குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் ஆரணி போளூர் ஜமுனாமுத்தூர் கலசபாக்கம் உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டன.
மேலும் கடந்த வாரம் திங்கட்கிழமை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் எஸ்.வி.நகரம் கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கில் பொதுமக்கள் தங்கியிருந்ததை வருவாய் துறையினர் அகற்றிவிட்டனர்.
தங்க வழியின்றி உள்ளதாக எஸ்.வி.நகரம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் கார்த்தி சாமந்தி ஆகிய 3 பயனாளிகள் ஆரணி சப்-கலெக்டரிடம் குறைதீர்வு முகாமில் மனு அளித்தனர். இந்த மனுவை உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்து இரும்பேடு ஊராட்சியில் உள்ள இடத்தில் 3 பேருக்கும் இலவச வீட்டு மனை பட்டா சப்-கலெக்டர் தனலட்சுமி வழங்கினார்.
பட்டாவை பெற்ற பயனாளிகள் வருவாய் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். இதில் சப்-லெக்டர் நேர்முக உதவியாளர் பெருமாள் தாசில்தார் ஜெகதீசன், உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- 41 பாட்டில்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமம் குட்டிச் சாலை புளிய மரத்தின் அருகே கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக கீழ்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கீழ்கொடுங்கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 51) என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
பின்னர் போலீசார் முத்துராமலிங்கத்தை கைது செய்து அவரிடம் இருந்த 41 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- அரியானா மாநிலம் மேவாட் பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேர் பதுங்கி இருப்பது தனிப்படையினருக்கு தெரியவந்தது.
- இருவரும் திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்த 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையர்கள் கடந்த 12-ந்தேதி ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600-ஐ கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் அரியானாவிற்கு சென்று 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அரியானா மாநிலம் மேவாட் பகுதியில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேர் பதுங்கி இருப்பது தனிப்படையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கர்நாடக மாநிலம் கோலார் மகாலட்சுமி லேஅவுட் பகுதியை சேர்ந்த குஷரத்பாஷா (வயது43) என்பவரையும், அசாம் மாநிலம் லைலா பைபாஸ் ரோடு லால்பூர் பகுதியை சேர்ந்த அப்சர் உசேன் (23) என்பவரையும் கோலார் பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் குஷரத் பாஷா கொள்ளையர்களுக்கு பண பரிமாற்றம் செய்ய உதவியதும், அப்சர் உசேன் கொள்ளையர்களுக்கு கோலாரில் ஒரு விடுதியில் தங்க அறை எடுத்து கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து கோலாரில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று மாலை அழைத்து வந்தனர்.
விசாரணைக்கு பின்னர் இருவரும் திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- பயிர் சாகுபடி நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில். வேளாண்மை தொழில்நுட்ப முகமை, மற்றும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் மூலம். மாநிலத்திற்குள் விவசாயிகளுக்கு பயிற்சி சேத்துப்பட்டு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நாராயணசாமி, தலைமையில் புதுக்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்வி நிலையம் தேசிய பயிறு வகை ஆராய்ச்சி மைய வளாகத்தில் பயிற்சி நடந்தது.
வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் யுவராஜா, வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் வெளியிடப்பட்ட விதைகள், விதைகளின் தன்மைகள், விதை தேர்வு செய்யும் முறைகள், விதை நேர்த்தி, பயிர் வகைகளில் பூச்சி நோய், மற்றும் பூச்சி நோய் மேலாண்மை, மற்றும் பயிர் வகையில் களை கட்டுப்பாடு, பயிர் வகை உற்பத்தி தொழில்நுட்பங்கள், மற்றும் மண்வள மேம்பாடு, ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியில் ஜமுனாமரத்தூர், போளூர், கலசப்பாக்கம், ஆரணி, சேத்துப்பட்டு, ஆகிய வட்டாரங்களை சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பயிற்சி முகாமில் வேளாண்மை கல்வி மைய இணை பேராசிரியர் ஞானசேகரன், உதவி பேராசிரியர் ராம் ஜெகதீசன், பயிற்சி உதவியா ளர் ராதாகிருஷ்ணன், உதவி பேராசிரியர் மேனகா, ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி ஏற்பாடுகளை சேத்துப்பட்டு வட்டார தொழில் நுட்ப மேலாளர் சேகர், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் ஆனந்த், வினோத், ஆகியோர் செய்து இருந்தனர்.
- உடல்நலக் குறைவால் விபரீதம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அருகே உள்ள இளங்காடு கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 50) விவசாயி.
இவர் 2 ஆண்டுகளாக உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் நெல் பயிருக்கு வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சி கிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசுபோக்குவரத்து கழகம் சார்பில் நடந்தது
- ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசுபோக்குவரத்து கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கண்காட்சி மூலம் விளக்கி கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சாலை விதிகளை மதிப்போம் சந்தோஷமாய் இருப்போம், பாதுகாப்பான இயக்கமே நிறுவன வருவாய், அளவான வேகமே ஆயிலை அதிகரிக்கும், பொது வாக னத்தை பயன்படுத்துவோம் தனி வாகனத்தை தவிர்ப்போம், சாலை விதிகளை மதிப்போம் வேதனைகளை தவிர்ப்போம்.
நடைபாதையில் நடப்போம் நலமுடன் பயணிப்போம் போன்ற வாசகங்களை ஒட்டிய பேனர்களுடன் அரசு போக் குவரத்து கழகத்தினுடைய பஸ்சில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை டிரைவர்கள், பயிற்சியாளர் அத்தவாசி ரகுராமன், ஆரணி புருஷோத்தமன், செய்யாறு மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர்.
சந்திரசேகரன் ஆகியோர் நிகழ்ச்சியில் பிரபாகரன், மலர், சாதிக் மற்றும் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ராம்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் விபரீதம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை காமாட்சி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் இவரது மனைவி செல்வி இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு சாமுவேல் (வயது 19) என்ற மகம், ஒரு மகளும் உள்ளனர். சாமுவேல் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் முதலாம் ஆண்டின் அனைத்து பாட தேர்வுகளும் தோல்வி அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் 2-ம் ஆண்டு தேர்விலும் தோல்வி அடைந்து விடுவோம் என்று பயத்தில் இருந்துள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த அவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து செல்வி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 அடி அளவு தண்ணீர் மட்டுமே இருப்பதாக விவசாயிகள் வேதனை
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து அவ்வப்போது மர்ம நபர்கள் தண்ணீர் திறந்து விடுவதை தடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கலசபாக்கம் அருகே உள்ள ஜவ்வாதுமலை அடிவாரத்தில் இருந்து உற்பத்தியாகி வரும் நீர் செய்யாற்றில் செங்கம், காஞ்சி, கடலாடி, மாதிமங்கலம், எலத்தூர், பழங்கோவில், பூண்டி கலசபாக்கம், போளூர், ஆரணி வழியாக செல்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் வரும் தண்ணீர் வீணாக கடலில் கலந்து விடுவதை தடுப்பதற்காக ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதன்படி முதல் கட்டமாக கலசபாக்கம் அருகே ஆணைவாடி பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டன. இதன் மூலம் சுமார் 7 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படுகின்றன. இதனால் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கின்றன.
இதனால் அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியை அடைந்து வருகின்றனர்.தற்போது மழை நின்ற காரணத்தால் தடுப்பனையில் சுமார் 7 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்த தண்ணீரை மர்ம நபர்கள் மணல் கொள்ளை அடிப்பதற்காகவும் மற்றும் மீன்பிடிப்பதற்காகவும் இரவில் தடுப்பணையில் உள்ள ஷட்டரை திறந்து விடுகின்றனர். இதனால் தண்ணீர் குறைந்து தற்போது 2 அடி அளவு தண்ணீர் மட்டுமே இருப்பதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது சம்பந்தமாக விவசாயிகள் கலசபாக்கம் தாசில்தார் மற்றும் போலீசார், சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகத்தினர் உடனடியாக தலையிட்டு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
- பஸ் படிகட்டில் பயணம் செய்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் பெரணம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 45). இவர் பெங்களூருவில் பெயிண்டராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு இவர் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ்சில் வந்ததார். பின்னர் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை சுமார் 2 மணி அளவில் அரசு பஸ்சில் பெரணம்பாக்கம் நோக்கி சென்றார். பஸ்சில் அதிக அளவில் பயணிகள் இருந்ததால் படிக்கட்டில் தொங்கியபடி அவர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலையை அடுத்த இனம்காரியந்தல் அருகில் உள்ள சுங்கச்சாவடி வழியாக பஸ் செல்லும் போது படியில் தொங்கிக் கொண்டிருந்த சேட்டு எதிர்பாராத விதமாக அங்கிருந்த தடுப்பில் மோதி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அம்மன் தேரில் பவனி
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலத்தில் அங்காளம்மனுக்கு மயான கொள்ளை உற்சவ விழா நடைபெற்றது.
இதைமுன்னிட்டு ஆடும் கரக ஊர்வலம் நடைபெற்றது. இரவில் ஜோதி கரகம் ஊர்வலமும், நடைபெற்றது. காலையில் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. மகிஷாஷீரமர்த்தினி அலங்காரத்தில் அங்காளம்மன் பூத கணங்கள் பிடாரி, பிடாரன், உடலில் எலுமிச்சை பழங்குத்தி கொக்கலிக்கட்டை ஆட்டத்துடன் ஆவேசமாக ஊர்வலமாக சென்று கண்ணமங்கலம் நாகநதி சந்தைமேட்டில் மயான கொள்ளை உற்சவம் நடைபெற்றது.
மேலும் அங்காளம்மனைக்கு குலதெய்வ வழிபாடு செய்யும் பக்தர்கள் பொங்கலிட்டு, குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்தியும், கோழி பலியிட்டு வழிபாடு செய்தனர்.
இதேபோல் போளூரில் நேற்று மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. போளூரில் அங்காளம்மன், மற்றும் பூங்காவனத்தம்மன் ஆகிய இரு சாமிகளும் வெவ்வேறு வழியாக திருவீதி உலா வந்தனர்.
அப்போது தெரு முழுவதும் உள்ள பொதுமக்கள் தீப ஆராதனை செய்து அம்மன் அருள் பெற்றனர். பிறகு பழைய பஸ் நிலையம் வந்தடைந்து. இரு சாமிகளும் மாலை மாற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்பிறகு 7 மணி அளவில் சுடுகாட்டை சென்றடைந்து மயான கொள்ளை விழா நடந்தது.
கீழ்பென்னாத்தூர் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன்ஆலயத்தில் மாயன கொள்ளை விழா நடந்தது. இரவு மேளதாளம் முழங்க அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதி உலா நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டு, மதியம் 2 மணி அளவில் மயான கொள்ளை உற்சவ விழா நடைபெற்றது.
விழாவில் சாமி வேடம் அணிந்த பக்தர்கள் நடனம் ஆடிய வண்ணம் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் அவலூர்பேட்டை சாலை, திருவண்ணாமலை சாலை, குளக்கரைதெரு வழியாக கீழ்பென்னாத்தூர் மயான பகுதிக்கு சென்றது. அங்கு மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். திருத்தேர் உற்சவம் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ளது.
இதே போல், கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பூங்காவனத்தம்மன் என்கின்றஅங்காளம்மன் கோவிலில், மயான சூறை உற்சவ விழா நடந்தது.






