என் மலர்
திருவண்ணாமலை
- வேறு பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதை கண்டித்து நடந்தது
- போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள அனக்காவூர் காலனி, காளியம்மன் கோயில் தெருவில் அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ளது.
அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில், வந்தவாசி சாலையில் குடியிருக்கும் 3 நபர்களுக்கு, மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் வேறு பகுதியில் வசிப்பவர்க ளுக்கு, பட்டா வழங்கியதை கண்டித்து இன்று காலை 7 மணி அளவில் வந்தவாசி சாலையில் திடீரென்று சாலை மறியல் செய்தனர்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடபட்ட பொதுமக்களிடம் சமரசரப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் கை விட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
- திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு
- சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மோரக்கணியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 32), கூலி தொழிலாளி. கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி அவரது வீட்டிற்கு 5 வயதுடைய சிறுமியும், அவரது சகோதரனும் சென்றனர்.
அப்போது சிறுமியிடம் அவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் சந்தோஷின் வீட்டின் இருந்து சிறுமியின் சகோதரர் அழுதுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்தவர்கள் சந்தோஷின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர். அப்போது எதுவும் நடக்காதது போன்று சந்தோஷ் அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்து உள்ளார். அப்போது சிறுமி நடந்த சம்பவம் குறித்து கூறி அழுதுள்ளார்.
இது குறித்த சிறுமியின் தாயார் மூலம் அளித்த புகாரின் பேரில் போளூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனர்.
20 ஆண்டு சிறை
இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அப்போது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சந்தோஷிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார்.
- 3 மாவட்ட விவவசாயிகளுடன் கலெக்டர் முருகேஷ் ஆலோசனை
- மார்ச் முதல் வாரத்தில் இருந்து திறந்து விடப்படுகிறது
திருவண்ணாமலை:
சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பது குறித்து திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நீர்வளத்துறையின் சார்பில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பது குறித்து விவசாயிகளிடம் கருத்துகள் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 118.75 அடியாக உள்ளது. தற்போதைய கொள்ளளவு 7,264 மில்லியன் கன அடி ஆகும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு மார்ச் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பது குறித்து இக்கூட்டத்தின் மூலம் ஆலோசிக்கப்பட்டுஉள்ளது.
மேலும் தண்ணீர் திறப்பதற்கு அரசாணை பெறுவதற்காக கருத்துரு அனுப்பப்பட்டு உத்தரவு பெற்ற பின்னர் சாத்தனூர் அணையின் வலது மற்றும் இடதுபுற கால்வாயிலிருந்து விவசாய பாசனத்திற்காக 90 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படும். இனி வரும் காலங்களில்.
பாசனத்திற்காக தண்ணீர் திறப்பதன் மூலம் திருக்கோவிலூர் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டில் 5 ஆயிரம் ஏக்கரும், சாத்தனூர் இடதுபுறக் கால்வாய் மூலம் திருவண்ணாமலை மற்றும் தண்டராம்பட்டு வட்ட ஆயக்கட்டில் 17 ஆயிரத்து 641 ஏக்கரும், திருக்கோ விலூர் தாலுகா ஆயக்கட்டில் 6 ஆயிரத்து 353 ஏக்கரும், சாத்தனூர் வலதுபுறக்கால்வாயில் தண்டராம்பட்டு வட்டத்தில் ஆயக்கட்டு பரப்பில் 1,818 ஏக்கரும், சங்கராபுரம் வட்டத்தில் ஆயக்கட்டு பரப்பில் 19 ஆயிரத்து 182 ஏக்கர் பாசன வசதி பெறும்.
மேலும் நீர்வரத்து, நீர் இருப்பிற்கேற்ப கூடுதலான நாட்களுக்கு தண்ணீர் திறப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இனிவரும் காலங்களில் ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை போதிய அளவு நீர் இருப்பின் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் செயற்பொறியாளார் சண்முகம், வேளாண்மை இணை இயக்குநர் அரக்குமார், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு அரசாணை பெற நடவடிக்கை
3 மாவட்ட விவவசாயிகளுடன் கலெக்டர் முருகேஷ் ஆலோசனை
மார்ச் முதல் வாரத்தில் இருந்து திறந்து விடப்படுகிறது
திருவண்ணாமலை:
சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பது குறித்து திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நீர்வளத்துறையின் சார்பில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பது குறித்து விவசாயிகளிடம் கருத்துகள் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 118.75 அடியாக உள்ளது. தற்போதைய கொள்ளளவு 7,264 மில்லியன் கன அடி ஆகும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு மார்ச் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பது குறித்து இக்கூட்டத்தின் மூலம் ஆலோசிக்கப்பட்டுஉள்ளது.
மேலும் தண்ணீர் திறப்பதற்கு அரசாணை பெறுவதற்காக கருத்துரு அனுப்பப்பட்டு உத்தரவு பெற்ற பின்னர் சாத்தனூர் அணையின் வலது மற்றும் இடதுபுற கால்வாயிலிருந்து விவசாய பாசனத்திற்காக 90 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படும். இனி வரும் காலங்களில்.
பாசனத்திற்காக தண்ணீர் திறப்பதன் மூலம் திருக்கோவிலூர் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டில் 5 ஆயிரம் ஏக்கரும், சாத்தனூர் இடதுபுறக் கால்வாய் மூலம் திருவண்ணாமலை மற்றும் தண்டராம்பட்டு வட்ட ஆயக்கட்டில் 17 ஆயிரத்து 641 ஏக்கரும், திருக்கோ விலூர் தாலுகா ஆயக்கட்டில் 6 ஆயிரத்து 353 ஏக்கரும், சாத்தனூர் வலதுபுறக்கால்வாயில் தண்டராம்பட்டு வட்டத்தில் ஆயக்கட்டு பரப்பில் 1,818 ஏக்கரும், சங்கராபுரம் வட்டத்தில் ஆயக்கட்டு பரப்பில் 19 ஆயிரத்து 182 ஏக்கர் பாசன வசதி பெறும்.
மேலும் நீர்வரத்து, நீர் இருப்பிற்கேற்ப கூடுதலான நாட்களுக்கு தண்ணீர் திறப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இனிவரும் காலங்களில் ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை போதிய அளவு நீர் இருப்பின் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் செயற்பொறியாளார் சண்முகம், வேளாண்மை இணை இயக்குநர் அரக்குமார், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் பொதுவெளியில் நின்று ஒருவருக்கொருவர் முகச்சவரம் செய்தனர்.
- ஒழுக்கத்துடன் வர செய்த இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆரணி :
பள்ளி பருவம்தான் ஒருவரின் வாழ்க்கையை எதிர்காலத்தில் மேம்படுத்தும். என்னதான் உயர்கல்வி படித்தாலும் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே மாணவர்களை நல்வழிப்படுத்தும். எனவே பள்ளிகளில் கல்விக்கு இணையாக ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு வரும் பொழுது தினமும் சீருடையை சுத்தமாக அணிந்து கொண்டு தலையில் எண்ணெய் வைத்து வரவேண்டும், கை-கால் நகங்களை வெட்டி இருப்பதுடன் தலைமுடியையும் முறையாக வெட்ட வேண்டும். புள்ளிங்கோ கட்டிங் மற்றும் ஸ்டைலாக குறுந்தாடி வைக்க கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறையை விதித்து தினமும் இதை மாணவர்கள் கடைபிடிக்கிறார்களா? என கண்காணிக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூரில் நேற்று முன்தினம் புள்ளிங்கோ ஸ்டைலில் தலைமுடியுடன் வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் முடிதிருத்த நடவடிக்கை எடுத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலும் இதுேபான்று வரவேற்கத்தக்க நிகழ்வு நேற்று நடந்துள்ளது. ஆரணியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியான சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் சிலர் குறுந்தாடியுடன் முகச்சவரம் செய்யாமல் 'ஸ்டைல்' என்ற பெயரில் வந்துள்ளனர்.
இதனை கவனித்த ஆசிரியர்கள் அவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் அறிவுரை வழங்கி உடனடியாக முகச்சவரம் செய்து வர வேண்டும் என வெளியே அனுப்பினர்.
முடித்திருத்தகங்களில் ஒருவருக்கு முகச்சவரம் செய்ய ரூபாய் 50 கேட்டதால் அவர்கள் தங்களிடம் அவ்வளவு ரூபாய் இல்லை எனக் கூறி சமாளித்துள்ளனர். இதனால் யோசித்த சில மாணவர்கள் கடைகளில் விற்கப்படும் 'ரேசர் ஷேவ்' 10 ரூபாய் கொடுத்து வாங்கினர்.
பின்னர் ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குழாயில் தண்ணீரை பிடித்து முகத்துக்கு தண்ணீர் தடவி ஒருவருக்கொருவர் முகச்சவரம் செய்து கொண்டனர். அதன்பின்னர் பள்ளிக்கூடத்துக்கு சென்றனர்.
முன்னதாக மாணவர்கள் ஒருவருக்கொருவர் முகச்சவரம் செய்து கொண்டதை அங்கு கூடியிருந்த பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் பரப்பினர்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால் பள்ளியையும், மாணவர்களையும், ஆசிரியர்களையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
- செல்போன் பார்ப்பதை கண்டித்ததால் விபரீதம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
வாணாபுரம் அருகே வாழ வச்சனூர் பகுதியைச் சேர்ந்த வர் தணிகாசலம். இவரது மகள் வர்ஷா (வயது 14). இவர் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
வர்ஷா சம்பவத்தன்று வீட் டில் வேலை செய்யாமல் செல்போனில் படம் பார்த் துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவ ரது தாய் கண்டித்துள்ளார். தனால் மனவேதனை அடைந்த வர்ஷா வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டு தாயிடம் கூறினார். இதனையடுத்து அவரை சிகிச் சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வர்ஷா
பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 4 பவுன் நகை, பைக் பறிமுதல்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த தேசூர் போலீசார் ஏரிக்கரை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபரிடம் விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த தினகரன் என்பதும் இவர் பெரணமல்லூர் தேசூர் செஞ்சி சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் புகுந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் திருத்தணி ஆற்காடு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் தினகரன் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து தேசூர் போலீசார் தினகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் அவரிடம் இருந்த 4 பவுன் நகை, வெள்ளி கொலுசுகள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- 70 பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர், வட்டார வள மையம் சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் பிறந் குழந்தை முதல் 18. வயது உடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் சங்கர், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், வட்டார வள மேற்பார்வையாளர் ராஜா அனைவரையும் ஆசிரியர் பயிற்றுனர் இசையருவி, வரவேற்றார்.
முகாமில் கண், காது, குழந்தைகள் நலம், எலும்பு முறிவு, உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.
முகாமில் சரணம் நல்லூர் வட்டாரத்தில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாற்றுத்திறனாளி குழந்தைகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
முன்னதாக 2 பயனாளிகளுக்கு வீல் சேர், 1 பயனாளிக்கு நடைவண்டி, மற்றும் 50 பேருக்கு அடையாள அட்டை, மேலும் 70 பயனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை உள்பட வழங்கினார்கள்.
முகாமில் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள், தசைப் பயிற்சியாளர்கள், உட்பட கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் சுகந்தி, நன்றி கூறினார்.
- துண்டு பிரசுரங்கள் வினியோகம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலத்தில் நேற்று தனியார் பள்ளியில் சுகாதார துறை சார்பில் திருத்தியமைக்கப்பட்ட காசநோய் தடுப்பு துணை இயக்குனர் அசோக் ஆலோசனைப்படி, காசநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுது.
இந்த முகாமிற்கு கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் நரேந்திரன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் வேலாயுதம், ராஜேஷ், உதவி தலைமையாசிரியர் ரவி முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் முருகன் வரவேற்றார்.
திருவண்ணாமலை மாவட்ட காசநோய் நலக்கல்வியாளர் சேஷாத்திரி கலந்து கொண்டு பேசுகையில், "காசநோயின் அறிகுறிகள், அதற்கான பாதுகாப்பு, சிகிச்சை முறைகள், காசநோயாளிகளுக்கு அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.500 வழங்கப்படுகிறது. மேலும் தமிழகம் காசநோய் இல்லாத மாநிலமாக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
மேலும் மாணவிகளுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இதில் சிசிச்சை மேற்பார்வையாளர் தினேஷ், களப்பணியாளர் மோகன்பாபு, ஆசிரியர்கள் சிவகுமார், இந்துமதி, சரண்யா, அனுராதா, பொற்செல்வி மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மற்றும் அரியலூர் சரக கூட்டுறவு தணிக்கையாளர்களுக்கான வருடாந்திர புத்தாக்க பயிற்சி திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்றது.
விழுப்புரம் மண்டல கூட்டுறவு தணிக்கை இணை இயக்குனர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டுறவு தணிக்கை துணை இயக்குனர் குணசேகரன், உதவி இயக்குனர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அலுவலக கண்காணிப்பாளர் கதிர்வேல் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர்கள் மயில்முருகன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
பயிற்சி முகாமில் திருவண்ணாமலை மற்றும் அரியலூர் மாவட்ட தணிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
- கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய 2 பேரை பலத்த காவலுடன் போலீசார் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர்.
- கொள்ளை சம்பவத்தில் மேலும் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம நபர்கள் ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600-ஐ கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் அரியானா மாநிலத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு மேவாட் பகுதியில் பதுங்கி இருந்த கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிப் (வயது 35) மற்றும் அரியானா மாநிலம் புன்ஹானா மாவட்டம் பைமாகேரா கிராமத்தை சேர்ந்த ஆசாத் (37) ஆகிய 2 பேரை அந்த மாநில போலீசார் உதவியுடன் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் கடந்த 18-ந் தேதி திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசார் மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய 2 பேரை பலத்த காவலுடன் போலீசார் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் திருவண்ணாமலை கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கவியரசன் முன்னிலையில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்க அனுமதி கேட்டனர். இதையடுத்து இருவரையும் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் அவர்கள் கொள்ளையடித்த ரூ.70 லட்சத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளார்கள்.
கொள்ளையடிக்க எப்படி சதி திட்டம் தீட்டினர், கொள்ளை சம்பவத்தில் மேலும் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் அவர்கள் பல்வேறு முக்கிய தகவல்கள் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 100 நாள் வேலைதிட்ட பணி வழங்க வலியுறுத்தல்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆரணி:
ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் 100 நாள் வேலை திட்ட பணியை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட துணை செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் தற்போது 100 நாள் பணி வழங்க கோரியும் நிரந்தரமான கூலி வழங்க கோரியும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆரணி சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.
- டி.எஸ்.பி. அதிரடி உத்தரவு
- செய்யாறில் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்
செய்யாறு:
செய்யாறு காவல் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட அனைத்து வங்கி கிளை மேலாளர்க ளுக்கும் மற்றும் ஏ.டி.எம். காவலாளி களுக்குமான விழிப்புணர்வு கூட்டம் செய்யாறு டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் நேற்று மாலை நடந்தது.
இன்ஸ்பெக்டர் பாலு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் செய்யாறு வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள வங்கி கிளை மேலாளர்கள் ஏடிஎம் காவலாளிகள் என 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் டி.எஸ்.பி. வெங்கடேசன் பேசுகையில்:-
வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் கண்டிப்பாக செக்யூரிட்டி காவலர் நியமிக்க வேண்டும் முக்கியமாக இரவு நேரங்களில் காவலர்கள் நியமித்து கண்காணிக்கப்பட வேண்டும். (60 வயதுக்கு மேற்பட்ட வயதான வர்களை தவிர்க்க வேண்டும்).
அனைத்து வங்கிகளிலும் ஏ.டி.எம்.களிலும் கண்டிப்பாக பெயரளவுக்கு இல்லாமல் தரமான சிசிடிவி கேமரா பொருத்தி இருக்க வேண்டும். கேமரா நல்ல நிலையில் இயங்கு கிறதா என அடிக்கடி சரிபார்க்க வேண்டும். வங்கி மற்றும் ஏடிஎம் நோக்கியபடி எதிரே வெளியில் இருந்து கண்காணிக்கும்படி கேமரா பொருத்தப்பட வேண்டும்.
அடிக்கடி வரும் நபர்கள் சந்தேகப்படும்படி தெரிந்தால் அந்த நபரை புகைப்படம் எடுத்தும், அந்த நபரை குறித்து உடனடியாக அருகிலுள்ள சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். நெடுநேரம் வங்கிக்குள் அமர்ந்து உள்ளவர்களை கண்காணித்து அவர்களை அப்புறப்படுத்திட வேண்டும். வங்கிக்குள் எச்சரிக்கை அலாரம் கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும். ஏடிஎம் வங்கிக்குள் செக்யூரிட்டி அலாரம் இணைக்கப்பட வேண்டும்.
போலீஸ் நிலையத்துடன் நேரடியாக இணைத்திட வேண்டும். ஏ.டி.எம். வங்கி போலீஸ் நிலையத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ள ஏதுவாக ஹாட் லைன் இணைக்கப்பட வேண்டும் என பேசினார்.






