search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Court judgment"

    • திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு
    • சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மோரக்கணியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 32), கூலி தொழிலாளி. கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி அவரது வீட்டிற்கு 5 வயதுடைய சிறுமியும், அவரது சகோதரனும் சென்றனர்.

    அப்போது சிறுமியிடம் அவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் சந்தோஷின் வீட்டின் இருந்து சிறுமியின் சகோதரர் அழுதுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்தவர்கள் சந்தோஷின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர். அப்போது எதுவும் நடக்காதது போன்று சந்தோஷ் அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்து உள்ளார். அப்போது சிறுமி நடந்த சம்பவம் குறித்து கூறி அழுதுள்ளார்.

    இது குறித்த சிறுமியின் தாயார் மூலம் அளித்த புகாரின் பேரில் போளூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனர்.

    20 ஆண்டு சிறை

    இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அப்போது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சந்தோஷிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார்.

    • கஞ்சா வியாபாரிகளை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
    • கஞ்சா வியாபாரிகளுக்கு சிறைதண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே கன்னிவாடி குரும்பபட்டி பிரிவு பகுதியில் இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த திவாகர் என்பவர் 22 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தார். அவரை கைது செய்து விசாரித்தில் தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த சுகப்பிரியா என்பவர் மொத்த வியாபாரியாக செயல்பட்டது தெரியவந்தது.

    அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்குபதிவு செய்து மதுரை கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.

    இதனை விசாரித்த நீதிபதி செங்கமலச்செல்வன் திவாகருக்கு 10 ஆண்டு சிறையும், ரூ.1லட்சம் அபராதமும், சுகப்பிரியாவுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1லட்சத்து 10 ஆயிரமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    கஞ்சா வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.

    ×