ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

100 நாள் வேலைதிட்ட பணி வழங்க வலியுறுத்தல் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
Published on

ஆரணி:

ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் 100 நாள் வேலை திட்ட பணியை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட துணை செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் நடைப்பெற்றது.

மேலும் தற்போது 100 நாள் பணி வழங்க கோரியும் நிரந்தரமான கூலி வழங்க கோரியும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆரணி சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com