search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grave Robbery Ceremony"

    • பால் அபிஷேகம் செய்யப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி அடுத்த கவுண்டப்பனூர் கிராமம் தேவலேரிபுரம் வட்டத்தில் ஸ்ரீ சுடலை மகாகாளியம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது.

    மதியம் அம்மனுக்கு கூழ் வார்த்தல் 2-ம் நாள் சிவராத்திரி விரதம் இருந்தவர்களுக்கு சிவ பூஜை மாவிளக்கு எடுத்தல் தானிய வகைகளான துவரை அவரை கொள்ளு போன்ற பொருட்களை மகாகாளி அம்மனுக்கு படையல் இடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று மயான கொள்ளை நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

    மகா காளியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூக்காரங்க ஊர்வலம் மகா காளியம்மன் வேடம் அணிந்து ஊர்வலமாக சென்றனர். விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றுச் சென்றனர்.

    இதேபோல் நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் மயான கொள்ளை விழா நடைபெற்றது.

    விழாவிற்கு நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

    • அம்மன் தேரில் பவனி
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலத்தில் அங்காளம்மனுக்கு மயான கொள்ளை உற்சவ விழா நடைபெற்றது.

    இதைமுன்னிட்டு ஆடும் கரக ஊர்வலம் நடைபெற்றது. இரவில் ஜோதி கரகம் ஊர்வலமும், நடைபெற்றது. காலையில் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. மகிஷாஷீரமர்த்தினி அலங்காரத்தில் அங்காளம்மன் பூத கணங்கள் பிடாரி, பிடாரன், உடலில் எலுமிச்சை பழங்குத்தி கொக்கலிக்கட்டை ஆட்டத்துடன் ஆவேசமாக ஊர்வலமாக சென்று கண்ணமங்கலம் நாகநதி சந்தைமேட்டில் மயான கொள்ளை உற்சவம் நடைபெற்றது.

    மேலும் அங்காளம்மனைக்கு குலதெய்வ வழிபாடு செய்யும் பக்தர்கள் பொங்கலிட்டு, குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்தியும், கோழி பலியிட்டு வழிபாடு செய்தனர்.

    இதேபோல் போளூரில் நேற்று மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. போளூரில் அங்காளம்மன், மற்றும் பூங்காவனத்தம்மன் ஆகிய இரு சாமிகளும் வெவ்வேறு வழியாக திருவீதி உலா வந்தனர்.

    அப்போது தெரு முழுவதும் உள்ள பொதுமக்கள் தீப ஆராதனை செய்து அம்மன் அருள் பெற்றனர். பிறகு பழைய பஸ் நிலையம் வந்தடைந்து. இரு சாமிகளும் மாலை மாற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன்பிறகு 7 மணி அளவில் சுடுகாட்டை சென்றடைந்து மயான கொள்ளை விழா நடந்தது.

    கீழ்பென்னாத்தூர் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன்ஆலயத்தில் மாயன கொள்ளை விழா நடந்தது. இரவு மேளதாளம் முழங்க அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதி உலா நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டு, மதியம் 2 மணி அளவில் மயான கொள்ளை உற்சவ விழா நடைபெற்றது.

    விழாவில் சாமி வேடம் அணிந்த பக்தர்கள் நடனம் ஆடிய வண்ணம் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் அவலூர்பேட்டை சாலை, திருவண்ணாமலை சாலை, குளக்கரைதெரு வழியாக கீழ்பென்னாத்தூர் மயான பகுதிக்கு சென்றது. அங்கு மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.

    வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். திருத்தேர் உற்சவம் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதே போல், கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பூங்காவனத்தம்மன் என்கின்றஅங்காளம்மன் கோவிலில், மயான சூறை உற்சவ விழா நடந்தது.

    • 1200 போலீசார் பாதுகாப்பு
    • பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலூர் பாலாற்றங்கரையில் கூடினர்

    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மயா னக் கொள்ளை திருவிழா கொண்டாடப்பட்டது.

    வேலூர் விருதம் பட்டு, மோட்டூர், கழிஞ் சூர் பகுதிகளில் இருந்தும், வேலூர் தோட்டப்பாளை யம் அருகந்தம் பூண்டி, சேண்பாக்கம், ஓல்டு டவுன், எம்ஜிஆர் நகர் பகு திகளில் இருந்தும் அலங்க ரிக்கப்பட்ட தேரில் அங்கா ளம்மன் உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக புறப்பட்டு பாலாற்றங்கரையை அடைகின்றனர்.

    அங்கு பாலாற்றங்கரையில் மண் ணால் ஆன அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தேர்களில் வந்த அங்காளம்மன் உற்சவர்களுக்கும் சிறப்பு பூஜைகளும் வழி பாடுகளும் நடக்கிறது. தொடர்ந்து சூறையாடல் நிகழ்வு நடக்கிறது.

    இந்த ஊர்வலத்தின் போது பல்வேறு கடவுள் உருவங்கள் வேடமிட்ட படி வரும் பக்தர்கள் சூறையாடலில் கலந்து கொன்டனர். இத்திரு விழாவை காண பல்லா யிரக்கணக்கான மக்கள் பாலாற்றங்கரையில் கூடினர்.

    அங்கு பூஜையில் கலந்து கொள்வதுடன், இறந்த தங்கள் உறவினர்க ளின் கல்லறைகளிலும் வழிபாடு நடத்தினர். அதேபோல் குடியாத் தம் உட்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேர் ஊர்வல மும், சிறப்பு பூஜைகளுடன் மயானங்களில் மயானக் கொள்ளை விழா நடந்தது.

    இத்திருவிழாவில் அசம்பாவித சம்பவங் கள் நடப்பதையும், குற்றச் சம்பவங்கள் நடப்பதை யும் தடுக்கும் வகையில் எஸ்பி ராஜேஷ் கண்ணன் தலைமையில் வேலூரில் ஏடிஎஸ்பிக்கள் பாஸ்க ரன், குணசேகரன், சேகர் ஆகியோர் தலைமையில் 3 டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீ சார் என 700 பேர் பாது காப்புப்பணியில் ஈடுபடுத் தப்படுகின்றனர்.

    அதேபோல் பிற இடங்களில் நடைபெறும் மயானக்கொள்ளை விழா பாதுகாப்புப்பணியில் 500 பேர் என மொத்தம் 1200 போலீசார் மயானக் கொள்ளை விழா பாது காப்புப்பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர்.

    • பாலாற்றங்கரையில் உள்ள மயானத்தை சீர் செய்யும் பணி தொடங்கியது
    • கட்-அவுட்டுகள், பேனர்களுக்கு கட்டுப்பாடு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான மயான கொள்ளை திருவிழா வரும் 19-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி வேலூர், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, விருதம்பட்டு மற்றும் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வருவார்கள். ஊர்வலத்தில் தங்களுடைய நேர்த்திக்க டனை செலுத்தும் வகையில் பல்வேறு சாமி வேடமிட்டு வருவார்கள்.

    இதனால் வேலூர் புதிய நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரையில் உள்ள மயானத்தை சீர் செய்யும் பணி தொடங்கியது. பொக்லைன் எந்திரங்களை கொண்டு அப்பகுதி முழுவதும் சீர் செய்யப்பட்டு வருகிறது.

    மகா சிவராத்திரியை யொட்டி மயானக்கொள்ளை திருவிழா பல்வேறு இடங்களில் கொண்டா டப்படுகிறது. இதையொட்டி போக்குவரத்துக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் மாவட்டத்தில் முக்கியமான சந்திப்புகள், வளைவுகள், நடைப்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் கட்-அவுட்டுகள் மற்றும் பேனர்கள் சம்பந்தப்பட்ட துறையினரின் அனுமதி யின்றி வைக்க கூடாது.

    கட்அவுட்கள் மற்றும் பேனர்கள் வைப்போர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×