search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    24 மணி நேரம் தொடர்ந்து நடந்த 108 நாதஸ்வர, தவில் கலைஞர்களின் இசை விழா
    X

    108 நாதஸ்வர, தவில் கலைஞர்களின் இசை விழா நடந்த காட்சி.

    24 மணி நேரம் தொடர்ந்து நடந்த 108 நாதஸ்வர, தவில் கலைஞர்களின் இசை விழா

    • திருவண்ணாமலை கோவில் ராஜகோபுரம் முன்பு நடந்தது
    • மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு ஏற்பாடு

    திருவண்ணாமலை:

    மகா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாதஸ் வரம், தவில் இசை சங்கம் சார்பில் 41-ம் ஆண்டு இசை விழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு நேற்று நடைபெற்றது.

    சங்கத்தின் தலைவரான நாதஸ் வர கலைமாமணி பிச்சாண்டி தலை மையில் 108 நாதஸ்வர மற்றும் தவில் இசை கலைஞர்களின் இசை விழா நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இசை விழா, 24 மணி நேரம் நடைபெற்று இன்று அதிகாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

    கவுரவத் தலைவர் பூபாலன், செயலாளர் ஏழுமலை, துணை கவுரவத் தலைவர் முருகேசன், துணை செயலாளர் கார்த்திகேயன், இணை தலைவர் பாலகணேசன் மற்றும் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்று, மங்கல இசை மற்றும் பல்வேறு ராகங்களில் வாசித்தனர். மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றன. இசை விழாவை, அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    Next Story
    ×