என் மலர்
நீங்கள் தேடியது "திருவள்ளுவர் உருவம்"
- 1330 வெள்ளை நிற சாக்பீஸ்களில் 1330 திருக்குறள்களையும் எழுதினர்
- திருக்குறள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முயற்சி
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த கல்லாங்குத்து கிராமத்தைச் சேர்ந்தவர் உதயராஜ். இவரது மனைவி செண்பகவள்ளி (வயது 23). பட்டதாரியான இவர் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது வழிகாட் டுதலின் பேரில் அதே கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் மோனேஷ், யுகேஷ்வரன், நிரஞ்சனா ஆகியோர் 1330 வெள்ளை நிற சாக்பீஸ்களில் பென்சில் மூலம் 1330 திருக் குறள்களையும் எழுதினர்.
பின்னர் தன்னார்வலர் செண்பகவள்ளி வீட்டின் தரையில் திருக்குறள்கள் எழுதப்பட்ட சாக்பீஸ்களை அடுக்கி திருவள் ளுவரின் உருவத்தை அவர்கள் வடிவமைத்தனர்.
தகவலறிந்த மாணவர்கள், பொதுமக்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் அங்கு சென்று பார் வையிட்டு மாணவர்களை பாராட்டினர்.
இதில், மோனேஷ் மருதாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பும், நிரஞ்சனா அதே பள்ளியில் 6-ம் வகுப்பும், யுகேஷ்வரன் வந்தவாசி ஆர்.சி.எம். உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
உலக பொதுமறையான திருக்குறள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சி மேற்கொண்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.






