என் மலர்
உள்ளூர் செய்திகள்

கண்ணாடி மாளிகை சுற்றுலா பணிகளை தொடங்க வேண்டும்
- சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
- பொதுப்பணி துறை சார்பாக ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆரணி வேலூர் சாலை பூசிமலைக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள 1806-ம் ஆண்டு திருமலை ராவ் தன்னுடைய காதல் மனைவிக்காக கட்டபட்ட இந்த கண்ணாடி மாளிகை கட்டினார். தற்போது 217 ஆண்டுகளுக்கு மேலாக பழமைவாய்ந்த கட்டிடமாக உள்ளது.
மேலும் கடந்த 70 ஆண்டுக்கு மேலாக வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் கட்டுபாட்டில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணாடி மாளிகை வனத்துறைக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளதால் வனத்துறையினர் தனது முழு கட்டுபாட்டில் காதல் கண்ணாடி மாளிகையை மீட்டெடுத்தனர்.
ஆரணி சரக வனத்துறையினர் கண்ணாடி மாளிகையை சுற்றி வேலி அமைத்து வனத்துறைக்கு சொந்தமாக இடமான அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
ஆரணியில் புரதான சின்னமாக விளங்கும் பூசிமலைக்குப்பம் கண்ணாடி மாளிகை குடிகாரகளின் கூடாராமாக மாறி வருகிறது. இந்த கண்ணாடி மாளிகை தற்போது வனத்துறையிடம் வந்துள்ளது.
இந்த கண்ணாடி மாளிகையை சுற்றுலாதலமாக மாற்றி அமைத்து பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்களின் கோரிக்கை விடுத்தனர்.
அமைச்சர் எ.வ.வேலு ரூ.11 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புனரமைத்து கண்ணாடி மாளிகை பாதுகாக்கபடும் என்று அறிவித்தார்.
ஆனால் தற்போது 10 மாதங்கள் மேலாகியும் பூசிமலைகுப்பம் கிராமத்தில் உள்ள கண்ணாடி மாளிகையில் எந்த பணியும் சிறிதளவும் நடைபெறவில்லை. இதனால் பூசிமலைக்குப்பம் கிராமத்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பணியை விரைந்து முடித்து கண்ணாடி மாளிகையை சுற்றுதலமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல படவேடு பகுதியில் உள்ள கல்வெட்டுகள் புராதான சின்னங்கள் அனைத்தையும் பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






