search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    இந்து முன்னணியினர் தாசில்தார் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம்
    X

    இந்து முன்னணியினர் தாசில்தார் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம்

    • ஆரணியில் கோவில் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
    • தாசில்தாரிடம் மனு அளித்தனர்

    ஆரணி:

    ஆரணி டவுன் அண்ணசாலை அருகில் உள்ள பழமைவாய்ந்த அங்காளம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலை சுற்றி ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வருவாய் துறை மற்றும் நகராட்சி மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டோருக்கு புகார் மனு அளிக்கப்பட்டன.

    ஆனால் இதுநாள் வரையில் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை தற்போது நெருங்கி வரும் மயான கொள்ளை திருவிழாவிற்கு இடையூறு இல்லாமல் விழா நடைபெறுவதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மனு அளிக்க ஆரணி கோட்டை தாலுகா அலுவலகத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தாமோதரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்தனர்.

    இதனையடுத்து திடீரென தாசில்தார் அலுவலகம் நுழைவாயில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இச்சம்பவம் அலுவலகத்தில் ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து வந்த ஆரணி டவுன் போலீசார் மற்றும் துணை தாசில்தார் சங்கீதா ஆகியோர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். துணை தாசில்தார் சங்கீதாவிடம் போராட்டம் நடத்தியவர்கள் மனு அளித்தனர்.

    Next Story
    ×