search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு இடைத்தேர்தல் பெரிய திருப்பமாக இருக்கும்
    X

    திராவிடர் கழக கூட்டத்தில் கி.வீரமணிக்கு பத்து ரூபாய் நாணயங்கள் எடைக்கு எடை ரூபாய் 78 ஆயிரம் வழங்கிய போது எடுத்த படம்.

    ஈரோடு இடைத்தேர்தல் பெரிய திருப்பமாக இருக்கும்

    • செய்யாறு பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி பேச்சு
    • தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது

    செய்யாறு:

    செய்யாறில் நேற்று சமூக நீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட திக தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். வேல்.சோ.நெடுமாறன், காமராசன், வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திராவிட கழக தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டு பேசியதாவது:-

    1929 ஆம் ஆண்டு பெரியார் செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் சுய மரியாதை மாநாடு நடத்திய போது பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். தற்பொழுது பெண்கள் சொத்துரிமை, படிப்புரிமை, வேலை வாய்ப்பு உரிமை எனஅனைத்து துறைகளிலும் பெண்கள் பணி செய்வது பெரியார் எனும் மாபெரும் மனிதரின் புரட்சியால்தான், கலைஞர் ஆட்சியில் தான் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது.செயல்படுத்துவதற்கு திராவிட மாடல் ஆட்சி வழிகாட்டுவது திராவிடர் கழகம்.

    பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்பதற்காக மந்திரி பதவியை ராஜினாமா செய்தவர் புரட்சியாளர் அம்பேத்கர்.தற்பொழுது உள்ள கவர்னர் நம் வரிப்பணத்தில் சனாதன தர்மம் பரப்ப சத்சங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கலைஞரின் முயற்சியால் பாராளுமன்றத்தில் பெண்களுக்கான சொத்துரிமை கொண்டுவரப்பட்டது.

    திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் கல்லூரி சென்றால் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. கல்வி வள்ளல் பச்சைத்தமிழர் காமராஜர் பகல் உணவு திட்டத்தை சிறப்பாக செய்தார்.

    தற்பொழுது பகல் உணவு திட்டத்தை தாண்டி காலை உணவு சிற்றுண்டி குழந்தைகள் சாப்பிடுகிறார்களா என சொல்லும் அளவிற்கு இந்தியாவிலேயே திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இல்லம் தேடி கல்வி, வீடு தேடி மருத்துவம் என்ன எண்ணற்ற திட்டங்களை நமக்காக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். ஈரோடு இடைத்தேர்தல் பெரிய திருப்பமாக இருக்கும் அங்கு எதிரிகள் யார் என்றே புரியவில்லை அங்கு உள்ளவர்கள் பொம்மலாட்ட பொம்மைகள் காவிகாரர்கள் கால் கையை இழுத்து ஒரு கட்சியை நான்கு கட்சியாக ஆக்கினார்கள்.

    நான்கு கட்சியினரும் சுதந்திரமாக இல்லை நல்ல அடமானப் பொருட்களாக இருக்கிறார்கள் அடமானத்தை மீட்க வேண்டும் என்பதற்காக தன்மானத்தை பற்றி கவலை இல்லாமல் வருமானத்தைப் பற்றி தான் கவலைப்படுகிறார்கள். மோடி வந்தவுடன் ஒரு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்றார் அவர் வந்து ஒன்பது வருடம் ஆச்சு 18 ஆயிரம் கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதா, அதேபோல உங்கள் வங்கிக் கணக்கில் 15 லட்சம் வரும் என்று சொன்னார் எத்தனை பேருக்கு வந்தது, திராவிட மாடல் ஆட்சியில் அப்படியல்ல சொன்னதைத்தான் செய்வோம் செய்வதைத்தான் சொல்லுவோம் 86 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளனர். எல்லோரும் மனிதநேயத்தோடு இருக்க வேண்டும் அன்பு காட்ட வேண்டும்.

    சேது சமுத்திர கால்வாய் திட்டம் நிறைவேறினால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் இவ்வாறு பேசினார். இறுதியில் பெருமாள் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், விசிகேவை சேர்ந்த குப்பன், கம்யூனிஸ்ட் சேர்ந்த சோலைப் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×