என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழுதடைந்த சி.சி.டி.வி. கேமராக்கள்.
பழுதடைந்த சி.சி.டி.வி. கேமராக்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- செங்கத்தில் பல்வேறு இடங்களில் திருட்டு நடப்பதாக குற்றச்சாட்டு
செங்கம்:
செங்கம் நகரில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெருவதை தடுக்கவும் மற்றும் கண்காணிப்பு பணிக்காகவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ஆனால் சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பயன்பாட்டில் இல்லை என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்து காட்சி பொருளாக உள்ளதாக அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது ஏடிஎம் கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் செங்கம் நகர்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் அனைத்தையும் பழுது நீக்கி சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செங்கம் நகரில் இரவு நேரங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்திட வேண்டும் என அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






