என் மலர்
நீங்கள் தேடியது "Monthly council meeting"
- பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்
- கவுன்சிலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் மாதாந்திர கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக்பாஷா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 15-வது நிதிக்குழு மானியம் மூலம் அடிப்படை, சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவது அனைத்து வார்டுகளிலும் தெருக்களில், மின்விளக்குகள், குடிநீர் வசதி, கால்வாய், சாலை வசதி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில் ஆணைமங்கலம் சமுதாயக் கூடம் கழிப்பிடம் பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை பணிகள், அனைத்து குடிநீர் வசதி, மழை நீர் வடிகால் அமைத்தல் பணிகள் உள்பட பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்களை பேரூராட்சி அலுவலர் ரமேஷ் வாசித்தார்.
பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் உள்பட பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






