search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide by arson"

    • சுகுமார் (வயது 29). டிப்ளமோ படித்து விட்டு மேஸ்திரி வேலை செய்து வந்தார்.
    • கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்த சுகுமார் திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    எருமப்பட்டி:

    எருமப்பட்டி அருகே உள்ள வாழவந்தி கிழக்கு வீதியை சேர்ந்தவர் மலையாளம். இவருடைய மகன் சுகுமார் (வயது 29). டிப்ளமோ படித்து விட்டு மேஸ்திரி வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி மனம் நொந்து பேசுவதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்த சுகுமார் திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். அப்போது வீட்டின் வெளியே இருந்த அவருடைய தம்பி பிரகாஷ், பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சுகுமாரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காமாட்சி விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
    • இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சேளூர் செல்லப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இவரது மனைவி காமாட்சி (25). கூலித் தொழிலாளர்கள்.

    கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காமாட்சி விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

    தீக்குளிப்பு

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார் . உடலில் தீப்பற்றி எரியவே வலி தாங்க முடியாமல் காமாட்சி சத்தம் போட்டு உள்ளார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அனைத்து காப்பாற்றி ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    பரிதாபமாக இறந்தார்

    இந்த நிலையில் காமாட்சி சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காமாட்சிக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆவதால் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகன்யா தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • கணவருடன் அடிக்கடி தகராறு
    • போலீசார் விசாரணை

    வேலூர்,

    காட்பாடி அடுத்த மேல்பாடி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ரஞ்சனி. இவரது கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரஞ்சனி கடந்த 27-ந்தேதி தனக்குத்தானே மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சனி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குடியாத்தம் மேல்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஞ்சனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்
    • உதவி கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரை

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூரை அடுத்த காட்டு நல்லான்பிள்ளை பெற்றான் தேவனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசெல்வ ஆண்டவர். விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரம்யா (வயது 26), இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரம்யாவிற்கு கடு மையான காய்ச்சல் ஏற்பட்டதில் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரம்யா மண்எண்ணெய் எடுத்து தனது உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். வலி தாங்காமல் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காகசென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய் தார். திருமணம் ஆகி 6 வருடங்களே ஆன நிலையில் ரம்யா இறந்துள்ளதால் அது குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கும் பரித்துரைக்கப்பட்டுள்ளது.

    • உடல்நிலை சரியில்லாததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜாவில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஜோபு (வயது 60). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் மனம் உடைந்த ஜோபு, வீட்டில் யாரும் இல்லாத போது தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ பரவியதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியிலும், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் அனு மதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்
    • போலீசார் விசாரணை

    தண்டராம்பட்டு:

    தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே சே.ஆண்டப் பட்டு கிராமத்தில் உள்ள ரைஸ்மில் தெருவில் வசித்து வருப வர் சக்திவேல் (வயது 45), கூலித்தொழிலாளி.

    இவரது 2-வது மகள் சந்தியா தானிப்பாடி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி சந்தியா மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை யிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த தானிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி
    • உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி போலீசார் விசாரணை

    போளூர்:

    போளூர் மேல் சாவடி தெருவில் வசிப்பவர் ஏழுமலை (வயது 55). கூலித் தொழிலாளி. இவருக்கு பல நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார்.

    இதனால் ஏழுமலை தொடர்ந்து சிகிச்சை பெற்றும் சரியாகயாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    தீயில் கருகி அலறிய அவரது குரலை கேட்டு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பதறி அடித்து எழுந்து பார்த்தனர். பின்னர் ஏழுமலையின் உடலில் எரிந்த தீயை அணைத்து திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த னர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்து விட்டார்.

    இது குறித்து அவரது மனைவி லட்சுமி அளித்த புகாரின் பேரில் போளூர் சப் -இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • காப்பாற்ற முயன்ற மகளும் கருகினார்
    • விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில் பரிதாபம்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சி.ஆர்.பி.எப் வீரர் ஏழுமலை.ஆவடியில் பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி வனஜா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

    ஏழுமலைக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்தநிலையில் ஏழுமலை 15 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.வீட்டில் தனது மூத்த மகளான சண்முகப்பிரியா மட்டும் இருந்த நிலையில், ஏழுமலை அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.அப்போது திடீரென மதுபோதையில், ஏழுமலை தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீயை பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதனைக் கண்ட அவரது மகள் சண்முகப்பிரியா உடனடியாக தனது தந்தையை காப்பாற்ற முயன்றுள்ளார்.அப்போது இருவரும் தீயில் சிக்கிய நிலையில், அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் நுழைந்து தீயில் எரிந்து கொண்டிருந்த தந்தை ஏழுமலை மற்றும் மகள் சண்முகப்பிரியாவை மீட்டனர்.தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் உதவியோடு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    ஏழுமலை உடல் முழுவதும் கருகிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சண்முகப்பிரியா தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை
    • கடன் கொடுத்தவர்கள் கடந்த 2 மாதமாக அவருக்கு கடும் நெருக்கடி கொடு த்துள்ளனர்

    கொழிஞ்சாம்பாறை,

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் அருகே உள்ள திருத்தாலா பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது46). இவரது மனைவி சாந்தினி(43). இவர்களுக்கு கார்த்திக்(14), ராகுல்(8) என 2 மகன்கள் உள்ளனர்.

    ராதாகிருஷ்ணன் மர வியாபாரம் செய்து வந்தார். இதுதவிர வேறு பணிகளையும் எடுத்து ெசய்து வந்துள்ளார்.இந்த நிலையில் இன்று காலை இவரது வீட்டிற்குள் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்றனர். வீட்டின் கதவை திறக்க முயன்றபோது அது திறக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது, வீட்டிற்குள் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சாந்தினி, மகன்கள் என 4 பேரும் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    இதையடுத்து அவர்க ள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருத்தாலா ஆஸ்பத்திரியில் அனுமதித்த னர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுகுறித்து திருத்தாலா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொ–ண்டனர்.

    விசாரணையில், ராதாகிருஷ்ணன் வேலை விஷயமாக பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை.இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் கடந்த 2 மாதமா க அவருக்கு கடும் நெருக்கடி கொடு த்துள்ளனர் . இதனால் ராதாகிருஷ்ணன் மனவேதனையில் இருந்ததும், அதன் காரணமாகவே மண்எ ண்ணையை ஊற்றி குடும்பத்துடன் தற்கொலை செய்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து திருத்தாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • முதல் மனைவியுடன் கணவருக்கு தொடர்பில் இருந்ததால் 2-வது மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • தனது கணவரிடம் முதல் மனைவியிடம் உள்ள தொடர்பை கைவிடுமாறு கூறினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அ.பாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி சஞ்சிலாமணி(38). முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்தார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை கடந்த 10 வருடத்துக்கு முன்பு சஞ்சிலாமணியை 2-ம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி அவரது முதல் மனைவியிடம் மீண்டும் தொடர்பில் இருப்பது சஞ்சலாமணிக்கு தெரியவந்தது. எனவே இவர் தனது கணவரிடம் முதல் மனைவியிடம் உள்ள தொடர்பை கைவிடுமாறு கூறினார். ஆனால் அதை ஏற்க அவர் மறுத்துவிட்டதால் விரக்தி அடைந்த சஞ்சலாமணி வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×