முதியவர் தீக்குளித்து தற்கொலை

உடல்நிலை சரியில்லாததால் விரக்தி போலீசார் விசாரணை
முதியவர் தீக்குளித்து தற்கொலை
Published on

வாலாஜா:

வாலாஜாவில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஜோபு (வயது 60). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் மனம் உடைந்த ஜோபு, வீட்டில் யாரும் இல்லாத போது தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ பரவியதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியிலும், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் அனு மதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com