என் மலர்
நீங்கள் தேடியது "2-வது மனைவி"
- முதல் மனைவியுடன் கணவருக்கு தொடர்பில் இருந்ததால் 2-வது மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
- தனது கணவரிடம் முதல் மனைவியிடம் உள்ள தொடர்பை கைவிடுமாறு கூறினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அ.பாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி சஞ்சிலாமணி(38). முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்தார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை கடந்த 10 வருடத்துக்கு முன்பு சஞ்சிலாமணியை 2-ம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி அவரது முதல் மனைவியிடம் மீண்டும் தொடர்பில் இருப்பது சஞ்சலாமணிக்கு தெரியவந்தது. எனவே இவர் தனது கணவரிடம் முதல் மனைவியிடம் உள்ள தொடர்பை கைவிடுமாறு கூறினார். ஆனால் அதை ஏற்க அவர் மறுத்துவிட்டதால் விரக்தி அடைந்த சஞ்சலாமணி வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






