என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • அன்னதானம் வழங்கப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, பழம்பேட்டையில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன், கோவிலில் 34-ம் ஆண்டு தீமிதி விழா மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வரசித்தி விநாயகர் கோவிலில் பக்தர்கள் பால்குடம் ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் தீபாராதனை நடைப்பெற்றது.பின்னர் பக்தர்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.அதைத்தொடர்ந்து காப்புக்கட்டி, விரதம் இருந்த பக்தர்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    முன்னதாக முத்துமாரி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கோவிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதில் சேத்துப்பட்டு, கண்ணனூர், பழம்பேட்டை, நெடுங்குணம், கெங்கைசூடாமணி, பெரணம்பாக்கம், வேப்பம்பட்டு, வில்லிவனம், நந்தியம்பாடி ஆகிய கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இவ்விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் பா.சீனுவாசன், கோவில் பூசாரிகள் ரங்கராஜன், ஏழுமலை, ரங்கன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • சித்ரா பவுர்ணமியொட்டி திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சென்றனர்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆந்திர மாநிலம் காள காளஹஸ்தியை சேர்ந்தவர்கள் தயா சேகர் ரெட்டி, டாக்டர் சூரிய சேகர் ரெட்டி, மோனிகா, மதுமிதா இவர்கள் அனைவரும் சித்ரா பவுர்ணமியொட்டி திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சென்றனர்.

    கிரிவலம் முடிந்து சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டு வந்தனர். வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பாக்கம் கிராமத்தில் இருந்து 20 பேர் கொண்ட ஆன்மீக குழு திருவண்ணாமலைக்கு அ ன் ன தான ம் வழங்குவதற்காக வேனில் சென்றனர்.

    வண்ணாங்குளம் அருகே வந்தபோது கார்- வேன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் காரில் பயணம் செய்த தயா சேகர் ரெட்டி மற்றும் டாக்டர் சூரியசேகர்ரெட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    பெண் பலி

    இதில் படுகாயம் அடைந்த மோனிகா, மதுமிதாவை மீட்டு அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக மோனிகாவை வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மோனிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    மதுமிதா சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுக்கா, பெருமாந்தாங்கல் -வடமணபாக்கம் இடையே ரூ.2 கோடி மதிப்பில் புதிய தார் சாலை போடுவதற்கு பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் டி.ராஜு தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய தார் சாலை போடும் பணியினை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர்கள் நாவல்பாக்கம் வி. பாபு, திலகவதி ராஜ்குமார், திமுக நகர செயலாளர் கே.விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் ஜே. சி.கே. சீனிவாசன், எம். தினகரன், என். சங்கர், ஏ.ஞானவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 23-ந் தேதி நடக்கிறது
    • வசந்த விழாசிறப்பு பூஜையுடன் தொடங்கியது

    கண்ணமங்கலம்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள கம்மவான்பேட்டை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழா நேற்று சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

    இதைமுன்னிட்டு கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து அலகு நிறுத்தி தினமும் மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது.

    14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)திரவுபதியம்மனுக்கு திருக்கல்யாணமும், 23- ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை துரியோதனன் படுகளமும், மாலை தீ மிதி விழாவும் நடக்கிறது.

    24-ந்தேதி தருமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • 30 டன் கழிவுகள் எரிந்தது
    • அந்தப் பகுதியில் புகைமண்டலமாக காட்சியளித்தது

    செய்யாறு:

    செய்யாறு நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. நகராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது.

    தேவையற்ற மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பி வைக்கப்படுகிறது.அவ்வாறு சேகரிக்கப்பட்ட 30 டன் பிளாஸ்டிக் கழிவுகள் நகராட்சி வளாகத்தில் பின்புறம் உள்ள கிடங்கில் சேமிக்க வைக்கப்பட்டுள்ளது.

    நேற்று மாலை 5.30 மணி முதல் செய்யாறில் இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் மழை பெய்தது இரவு 8.30 மணி அளவில் மின்னல் திடீரென குப்பை கிடங்கில் மின்னல் தாக்கியது. இதில் தீப்பொறி விழுந்து குப்பைகள் எரிய தொடங்கின.

    நகராட்சி நிர்வாகத்தினர் செய்யாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததினர் அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த நகரமன்ற தலைவர் மோகனவேல், துப்புரவு ஆய்வாளர் மதனராசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் மீண்டும் தீப்பிடித்து கொண்டது. இன்று காலை 8 மணி வரை எரிந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் அனல் காற்றும் வீசியது. மேலும் புகைமண்டலமாக காட்சியளித்தது.

    • இன்று காலை வரை பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் இருந்தனர்.
    • கிரிவலப் பாதையில் உள்ள கழிவறைகள் திறக்கப்படாததால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    நேற்று மாலை கிரிவலத்திற்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

    இரவு வரை பக்தர்கள் கிரிவலப் பாதையை சுற்றி வந்தனர். இதனால் நகரின் முக்கிய பகுதியில் உள்ள சின்ன கடை தெரு, தேரடி தெரு, திருவூடல் தெரு, திருமஞ்சன கோபுர தெருக்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    தொடர்ந்து இன்று காலை வரை பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் இருந்தனர்.

    நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பொது தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.50 கட்டண தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இன்று காலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது. ஆனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    இதனால் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரமானது. சித்ரா பவுர்ணமிக்கு வரும் பக்தர்கள் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்திருந்தார்.

    அதன்படி கூடுதலாக தரிசன வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன ஆனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இதே போல பக்தர்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுவும் சீராக செய்யப்படவில்லை.

    இன்று பக்தர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் சிறப்பு ரெயில், பஸ் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கிரிவலப் பாதையில் உள்ள கழிவறைகள் திறக்கப்படாததால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    • பழைய ஒய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தல்
    • ஏராளமான அலுவலர்கள் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    ஆரணி டவுன் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்ட கிளை தலைவர் இல.பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி செயலாளர் களுக்கான பணி விதி வெளியிடுதல், ஊதிய உயர்வு, புதிய பணியிடம் ஏற்படுத்துதல், பதவி உயர்வு பழைய ஒய்வூதிய திட்டத்தை அமுல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு மற்றும் கோஷங்களை எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்ட கிளை தலைவர் தென்னரசு துணை தலைவர் முத்துவேலன் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சண்முகம் பரசுராமன் சரவணன் தேவராஜ் திவாகர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்

    இறுதியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • 48 ஏரிகள் பாசன வசதி பெறும்
    • எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு பெருமாள்பேட்டை பகுதியில் செண்பகத்தோப்பு அணை கமண்டல நதி குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

    சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் நிரம்பியது. சென்னை பொதுப்பணித்துறை கூடுதல் சந்தீப் சக்சேனா உத்தரவின் பேரில் இன்று சரவணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    181.44 கன அடி தண்ணீர் வருகிற 25-ந் தேதி வரை திறக்கப்படுகிறது. இதன்மூலம் 48 ஏரிகள் பாசன வசதி பெறும்.

    செண்பகத்தோப்பு அணையில் திறந்து விடும் தண்ணீரை விவசாய பயன்பாட்டுக்கு பாதுகாப்பாக 48 ஏரிகளில் தண்ணீர் நிரம்பும் பணி நடப்பதாக பொதுப் பணித்துறை உதவிப் பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    • ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கமண்டல நாகநதி ஆற்றுபாலம் அருகில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ பெரிய நாயகி உடனுரை ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் உலக அமைதி வேண்டி 9ம் ஆண்டு பால்குடம் ஆரணி டவுன் பழைய காந்தி சாலையில் உள்ள ஸ்ரீ அரியாத்தமன் ஆலயத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட பெண்கள் விரதமிருந்து பால்குடம் ஏந்தி காந்தி ரோடு பழைய பஸ் நிலையம் பெரிய கடை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வர் ஆலயத்தில் உள்ள பஞ்சமூர்த்திகளுக்கு பாலபிஷேகம் செய்தனர்.

    இதில் திமுக மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, மேற்கு ஆரணி ஒன்றிய சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், ஆலய நிர்வாகி நடராஜன், மற்றும பக்தர்கள் பங்கேற்றனர்.

    • வியாபாரிகள் திடீர் மறியல்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி வழிபாடு மற்றும் கிரிவலம் ஆகியவை இன்று நடந்தது.

    இதன் எதிரொலியாக, பெரியத் தெருவில் (மாட வீதி) உள்ள பூதநாராயணன் கோவில் அருகே முழுமையாக தடுப்புகள் அமைக்கப்பட்டு, இரட்டைபிள்ளையார் கோவிலுக்கு செல்லும் வீதி மூடப்பட்டது.

    வியாபாரிகள் மறியல்

    கிரிவலம் செல்லும் பக்தர்கள், சின்ன கடை வீதி வழியாக தேரடி வீதி மற்றும் இரட்டை பிள்ளையார் கோவில் தெரு என 2 வழித்தடங்களில் ராஜகோபுரத்தை சென்றடைவார்கள்.

    இந்த நிலையில் இரட்டை பிள்ளையார் கோவில் வீதிக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிய தெருவில் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இரட்டை பிள்ளையார் கோவில் வீதி அடைக்கப்பட்டதால் சித்ரா பவுர்ணமி திருவிழா வியாபாரம் அடியோடு பாதிக்கப்படும், இரட்டை பிள்ளையார் தெரு வழியாக வட ஒத்தவாடை தெருவில் உள்ள குடியிருப்பு மற்றும் விடுதிகளுக்கு செல்ல முடியாது என்றனர்.

    அவர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • வண்ணாங்குளம் அருகே வந்தபோது கார்-வேன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி:

    ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்தவர்கள் தயாநிதி, டாக்டர் சூரிய சேகர் ரெட்டி, மோனிகா, மதுமிதா. இவர்கள் அனைவரும் சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை கிரிவலத்திற்கு காரில் சென்றனர்.

    கிரிவலம் முடிந்து ஊருக்கு புறப்பட்டு வந்தனர். வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பாக்கம் கிராமத்தில் இருந்து 20 பேர் கொண்ட ஆன்மீக குழு திருவண்ணாமலைக்கு அன்னதானம் வழங்குவதற்காக வேனில் சென்றனர்.

    வண்ணாங்குளம் அருகே வந்தபோது கார்-வேன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் காரில் பயணம் செய்த தயாநிதி மற்றும் டாக்டர் சூரியசேகர்ரெட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    காரில் இருந்த 2 பெண்களும், வேனில் இருந்து சிறுவனும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்ணமங்கலம் போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சித்ரா பவுர்ணமி நேற்று இரவு 11.59 மணிக்கு தொடங்கியது.
    • இன்று இரவு 11.33 மணிக்கு சித்ரா பவுர்ணமி நிறைவடைகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரகுப்தருக்கு சன்னதி உள்ளது.

    சித்ரா பவுர்ணமியன்று மட்டும் சிதிரகுப்பருக்கு எருமை பால் அபிஷேகம் செய்யபடும். அதன்படி சித்ரா பவுர்ணமியான இன்று அம்மன் சன்னதி அருகே உள்ள சித்திர குப்தருக்கு எருமை மாட்டு பால் அபிஷேகமும் மற்றும் சிறப்பு அபிஷேகமும் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.***திருவண்ணாமலை, மே.5-

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுணர்மி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து கிரிவலம் செல்வது வாழ்வில் பல நல்ல பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது.

    சித்ரா பவுர்ணமி தினத்தில் சித்தர்கள் ஆசியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி நேற்று இரவு 11.59 மணிக்கு தொடங்கியது. இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதேபோல் இன்று இரவு 11.33 மணிக்கு சித்ரா பவுர்ணமி நிறைவடைகிறது. இதனால் நேற்று இரவு முதல் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.

    நள்ளிரவு 12 மணிக்கு மேல் பஸ்கள் மற்றும் வாகனங்கள் நகருக்குள் வர அனுமதி வழங்கப் படவில்லை. அவைகள் நகர எல்லையில் உள்ள 13 தற்காலிக பஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.

    அங்கிருந்து பக்தர்கள் கோவிலுக்கு நடந்து சென்றனர். மேலும் ஆட்டோக்களும் இயக்கப் பட்டன. நகரமெங்கும் சிறு சிறு வியாபாரிகள் கடை அமைத்து பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    கற்பூரம் மற்றும் தண்ணீர் பாட்டில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. பக்தர்களுக்கு இலவச தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு அவர்களின் தாகம் தணிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. 110 இடங்களில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.


    திருவண்ணாமலை நகரம் இன்று காலை பக்தர்களின் கூட்டத்தால் திணறியது. 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.

    அலைகடல் புகுந்தது போல் பக்தர்கள் கூட்டம் கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

    14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையில் காட்டாற்று வெள்ளம் போல பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் முழங்கி செல்கின்றனர். சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் மூலம் பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

    பாதுகாப்புக்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்குள் வந்ததும் பரவச நிலையில் அண்ணாமலையாரை வணங்கிய படி செல்கின்றனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது. அங்கு விரைவு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.* * *திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் சன்னதி அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர், பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 10 கோவில்களின் பிரசாதம் விற்பனை செய்தனர். இதனை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.* * *சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.* * *திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று சித்திரை வசந்த உற்வசத்தையொட்டி மன்மத தகனம் நிகழ்ச்சி நடந்தது.

    ×