என் மலர்
நீங்கள் தேடியது "Temple Road Closure"
- வியாபாரிகள் திடீர் மறியல்
- போலீசார் பேச்சுவார்த்தை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி வழிபாடு மற்றும் கிரிவலம் ஆகியவை இன்று நடந்தது.
இதன் எதிரொலியாக, பெரியத் தெருவில் (மாட வீதி) உள்ள பூதநாராயணன் கோவில் அருகே முழுமையாக தடுப்புகள் அமைக்கப்பட்டு, இரட்டைபிள்ளையார் கோவிலுக்கு செல்லும் வீதி மூடப்பட்டது.
வியாபாரிகள் மறியல்
கிரிவலம் செல்லும் பக்தர்கள், சின்ன கடை வீதி வழியாக தேரடி வீதி மற்றும் இரட்டை பிள்ளையார் கோவில் தெரு என 2 வழித்தடங்களில் ராஜகோபுரத்தை சென்றடைவார்கள்.
இந்த நிலையில் இரட்டை பிள்ளையார் கோவில் வீதிக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிய தெருவில் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இரட்டை பிள்ளையார் கோவில் வீதி அடைக்கப்பட்டதால் சித்ரா பவுர்ணமி திருவிழா வியாபாரம் அடியோடு பாதிக்கப்படும், இரட்டை பிள்ளையார் தெரு வழியாக வட ஒத்தவாடை தெருவில் உள்ள குடியிருப்பு மற்றும் விடுதிகளுக்கு செல்ல முடியாது என்றனர்.
அவர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.






