என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்னல் தாக்கி நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
    X

    மின்னல் தாக்கி நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

    • 30 டன் கழிவுகள் எரிந்தது
    • அந்தப் பகுதியில் புகைமண்டலமாக காட்சியளித்தது

    செய்யாறு:

    செய்யாறு நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. நகராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது.

    தேவையற்ற மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பி வைக்கப்படுகிறது.அவ்வாறு சேகரிக்கப்பட்ட 30 டன் பிளாஸ்டிக் கழிவுகள் நகராட்சி வளாகத்தில் பின்புறம் உள்ள கிடங்கில் சேமிக்க வைக்கப்பட்டுள்ளது.

    நேற்று மாலை 5.30 மணி முதல் செய்யாறில் இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் மழை பெய்தது இரவு 8.30 மணி அளவில் மின்னல் திடீரென குப்பை கிடங்கில் மின்னல் தாக்கியது. இதில் தீப்பொறி விழுந்து குப்பைகள் எரிய தொடங்கின.

    நகராட்சி நிர்வாகத்தினர் செய்யாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததினர் அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த நகரமன்ற தலைவர் மோகனவேல், துப்புரவு ஆய்வாளர் மதனராசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் மீண்டும் தீப்பிடித்து கொண்டது. இன்று காலை 8 மணி வரை எரிந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் அனல் காற்றும் வீசியது. மேலும் புகைமண்டலமாக காட்சியளித்தது.

    Next Story
    ×