என் மலர்
திருவண்ணாமலை
- அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது
- ஏராளமானோர் தரிசனம் செய்தனர்
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ராமையன் தோப்பு பகுதியில் அமைந்துள்ள தர்மராஜா மற்றும் திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது.
உலக மக்கள் நன்மை பெற வேண்டியும், நாடகக் கலை புத்துயிர் பெற வேண்டி மகாபாரத சொற்பொழிவு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கப்பட்டு தொடர்ந்து 67 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று மகாபாரதத்தில் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பொது மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- மாங்காய் பறித்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள ஆராத்திரி வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 46). இவர் சென்னையில் கண்ணகி நகரில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
நேற்று பிரகாசம் அவரது தம்பி மோகன் இருவரும் சொந்த கிராமமான ஆராத்திரி வேலூருக்கு வந்தனர். பிரகாசம் அவரது வீட்டில் இருந்த மாங்காய் மரத்தில் மாங்காய் பறிப்பதற்கு வீட்டு மாடியில் ஏறினார்.
மாங்காய் பறித்துக் கொண்டிருந்தபோது மாடியில் இருந்த மின்சார ஒயரில் தவறுதலாகபட்டது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பிரகாசம் இறந்தார்.
இதுகுறித்து பிரகாசம் மனைவி திலகவதி மோரணம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கணவன் மது குடித்து தகராறால் விபரீதம்
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த கொவளை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி அம்மு (வயது 32). இவர்களுக்கு அனுஷ்குமார்(12), கோகுல் (8) ஆகிய மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் செந்தில் வேலைக்கு சரிவர செல்வதில்லை.தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் அம்மு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் அங்கு சென்று அம்முவின் உடலை கைப்பற்றி வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அம்முவின் அக்கா லட்சுமி அளித்த புகாரின்பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- கலசபாக்கம் பகுதியில் 66 செ.மீ மழை பதிவாகியுள்ளன
- விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த சில நாட்களாகவே திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகப்படியான வெயில் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் வராமல் தவித்து வந்தனர்.
இந்நிலை யில் கடந்த சில தினங்க ளாக திருவண்ணா மலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான ஜமுனாமரத்தூர் போளூர் கலசப்பாக்கம் கண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்ந்தன. இதில் அதிகபட்சமாக கலசபாக்கம் பகுதியில் 66 செ.மீ மழை பதிவாகியுள்ளன.
மேலும் நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக ப்படியான கலசப்பாக்கம் ஜமுனாமுத்தூர் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்ததால் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள நாக நதி ஆறு மற்றும் ஆரணியில் உள்ள கமண்டல நாகநதி ஆகிய 2 ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் பருவ மழை காலங்களில் மட்டுமே ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வழக்கமாக ஒன்று ஆனால் தற்போது கோடை காலங்களில் இது போன்ற வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வரும் நிலையில் இந்த கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லாததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியைடந்துள்ளனர்.
- 20 ஆண்டுக்கு முன்பு படித்தவர்கள்
- மரக்கன்றுகளை நட்டு வைத்து நினைவு பரிசுகளை வழங்கினர்
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள தேவிகாபுரம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் (1998-2003) வரை படித்த முன்னாள் மாணவிகள் 20 வருடம் கழித்து நேற்று சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் மாணவி தேவி தலைமை வகித்தார், பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணன் ஆசிரியைகள் கீதா, கே.கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவிகள் உமா, ரம்யா ஆகியோர் வரவேற்றனர்.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தலைமை ஆசிரியர் முத்துசாமி கலந்துகொண்டு முன்னாள் மாணவிகளை கவுரவப்படுத்தி மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
அனைவரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் மரக்கன்றுகளை நட்டு வைத்து நினைவு பரிசுகளை வழங்கினர். இதில் முன்னாள் மாணவி வனிதா நன்றி கூறினார்.
- சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்தல்
- 1,600-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை நகரம்மற்றும் கிரிவலப்பாதையில் தேங்கிய குப்பை மற்றும் உணவு கழிவுகளை தூய்மைப் பணியாளர்கள் அகற்றினர்.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கடந்த 5-ந் தேதி நடைபெற்றது.
இதையொட்டி மூலவர், அம்மன் மற்றும் சித்திர குப்தன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் சித்ரா பவுர்ணமிக்கு வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானத்தின் கழிவுகள் மற்றும் குப்பை அகற்றும் பணியில் சுமார் 1,600-க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் முழுவீச்சில்
ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில்
உள்ள குப்பை மற்றும் உணவு கழிவுகளை துரிதமாக அகற்றியதால், சாலைகள் தூய்மையாக இருந்தன.
தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில்,
அண்ணாமலையார் கோவிலில்சிறப்பு சாமி தரிசனம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து, அவர்களுக்கு கோவில் பிரசாதம் வழங்க வேண்டும் என அனைத்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- கோவில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
போளூர்:
போளூர் ஸ்ரீ பால முருகன் கோவில் சிமெண்ட் சாலை அமைக்க போலு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது
அதைத் தொடர்ந்து நேற்று சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை போடும் கோவில் அறக்கட்டளை தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. தர்மகர்த்தா செல்வம் முன்னிலை வகித்தார், செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் அக்ரி எஸ். கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ கலந்துகொண்டு பூமி பூஜை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட அவைத் தலைவர் நாராயணன், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், நகர் அவைத்தலைவர் ஏழுமலை, சேத்துப்பட்டு ஸ்ரீதர் 17-வது வார்டு உறுப்பினர் கவிதா கருணாகரன் மற்றும் பாசறை பாபு மண்ணு சண்முகம் மற்றும் கோவில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர செயலாளர் பாண்டுரங்கன் நன்றி கூறினார்.
- தேர்வில் தோல்வி பயத்தில் இருந்த ஹரி கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.
- வீடு திரும்பிய தந்தை தூக்கில் மகன் பிணமாக தொங்கியதைக் கண்டு அழுது துடித்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள நாராயணகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி. விவசாயி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார்.
இவருடைய மகன் ஹரி (வயது 18) தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்த இவர் தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது.
தேர்வில் தோல்வி பயத்தில் இருந்த ஹரி கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலை அவரது தந்தை வெளியே சென்றிருந்தார். அந்த நேரத்தில் ஹரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீடு திரும்பிய அவரது தந்தை தூக்கில் மகன் பிணமாக தொங்கியதைக் கண்டு அழுது துடித்தார். தண்டராம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதில் மாணவன் ஹரி தோல்வி அடைந்திருந்தார். தேர்வு தோல்வி பயத்தின் காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தற்கொலை உள்ளிட்ட விபரீதமான முடிவுகளை எடுக்க வேண்டாம். மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
- ஜவ்வாதுமலை பகுதியில் கனமழையின் காரணமாக நீர்வரத்து
- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருவண்ணாமலை:
ஜவ்வாதுமலை பகுதியில் கணமையின் காரணமாக கலசப்பாக்கம் மிருகண்ட அணை முழு கொள்ளளவு எட்டியதால் அணையிலிருந்து சுமார் 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கலசப்பாக்கம் தொகுதி ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள மேல்சோழங்குப்பம் கிரா மத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்டா அணையின் முழு கொள்ளளவு 23 அடியாாகும். தற்போது தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பொழிந்து வருகின்றன.
இதில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலைப்பகுதி மற்றும் கலசப்பாக்கம் பகுதிகளில் நேற்று 96.6 மில்லி மீட்டர் கனமழை பெய்தது இதனால் ஜவ்வாது மலை பகுதியிலிருந்து மிருகண்டா நதி அணைக்கு சுமார் 100 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு உள்ளன. இதனால் அணையின் 20 அடி கொள்ளளவுக்கு மேல் நிரம்பி வருகின்றன.
தற்போது அணையின் பாதுகாப்பு கருதி சுமார் 100 கன அடிக்கு மேல் தண்ணீர் நேற்று இரவு முதல் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் அணையின் அருகே உள்ள சீனாந்தல், காந்த பாளையம், ஆதமங்கலம் புதூர், கெங்க லமகாதேவி கேட்டவரம்பாளையம், அருணகிரிமங்கலம், சிருவள்ளூர், எலத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
- சகோதரி கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த கொவளை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி அம்மு (வயது32) இருவருக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் திருவிழா நடந்தது. திருவிழாவில் தெருக்கூத்து நாடகம் நடந்தது.
இதனை அம்மு அவரது கணவர் செந்தில் இருவரும் பார்த்துவிட்டு அதிகாலை வீட்டிற்கு வந்து தூங்கினர். காலை 9 மணி அளவில் செந்தில் மாட்டுக்கு தண்ணீர் காட்ட தனது மனைவியை எழுப்பி உள்ளார்.
அப்போது அசதியாக உள்ளதாகவும் நீங்களே மாட்டிற்கு தண்ணீர் காட்ட வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மாட்டிற்கு தண்ணீர் வைத்து விட்டு பின்னர் விவசாய வேலைக்கு செந்தில் சென்று விட்டார்.
பிற்பகல் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அம்மு படுக்கையில் இருந்து எழவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த செந்தில் மனைவியை எழுப்பி பார்த்தபோது கண் விழிக்கவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அம்மு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். சம்பவம் குறித்து அம்முவின் சகோதரி லட்சுமி (34) கீழ்கொடுங்காலூர் போலீசில் இன்று புகார் செய்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- முயல் வாங்குவதாக கூறி மோசடி
- பெண்ணுக்கு வலைவீச்சு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா கீழ்அணைக்கரை பகுதியை சேர்ந்தவர் வியாசியாமேரி (வயது 78). இவருடன் அவரது மகள் மற்றும் மருமகன் வசித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் வீட்டின் மாடியில் முயல் வளர்த்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை சுமார் 4 மணியளவில் வியாசியாமேரி வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது மொபட்டில் அவரது வீட்டிற்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து உள்ளார். அந்த பெண் மூதாட்டியிடம் முயல் வாங்குவது போன்று பேச்சு கொடுத்து உள்ளார்.
இதையடுத்து மூதாட்டி வீட்டின் கதவில் தாழ்பாள் போட்டு அந்த பெண்ணை மாடிக்கு அழைத்து சென்று அவர்கள் வளர்த்து வரும் முயலை காண்பித்தார். பின்னர் அந்த பெண் முயலை வாங்கினார். மூதாட்டியிடம் முயலை எடுத்து செல்ல கோணிப்பையை எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு கீழே சென்றார்.
10 பவுன் நகை கொள்ளை
இதை நம்பி மூதாட்டி மாடியிலேயே இருந்தார். பின்னர் அந்த இளம்பெண் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றார்.
நீண்ட நேரமாகியும் அந்த பெண் வராததால் மாடியில் இருந்து மூதாட்டி கீழே வந்தார். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் கொள்ளை யடிக்கப்ப ட்டது தெரியவந்தது.
இது குறித்து திருவண்ணா மலை தாலுகா போலீசா ருக்கு தகவல் தெரிவி த்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா?
- போலீஸ் விசாரணை
சேத்துப்பட்டு:
திரு வண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் பகுதி வழியே செய்யாறு செல்கிறது. இந்த ஆற்றில் இடுகாடு மற்றும் சுடுகாடு இரண்டும் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்க ளாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருவதால் இந்த ஆற்றில் வெள்ளம் செல்கிறது.
இதனை தொடர்ந்து நேற்று அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வெள்ளத்தைக் காண சென்றனர். அப்போது ஆற்று வெள்ளம் நடுவே தண்ணீரில் ஆண் உடல் முழுவதும் புதைந்த நிலையில் கால்கள் மட்டும் வெளியே தெரிந்தது.
இதனால் ஆற்று வெள்ளத்தைப் பார்க்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர். இதுகுறித்து பெரணமல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூழ்கிய நிலையில் கிடந்த உடலை பார்த்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்க ப்பட்டது. அதன் உதவியுடன் ஆற்றில் புதைந்திருந்த உடலை தோண்டி கரைக்கு எடுத்து வந்தனர்.
இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும் என கூறப்படுகிறது. அவரை மர்ம கும்பல் அடித்து கொலை செய்து உடலை ஆற்றில் புதைத்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தற்போது மழை பெய்து வெள்ளம் ஓடியதால் மண் அரிப்பில் உடலின் கால்கள் வெளியே தெரிந்தது. அவரை கொலை செய்தவர் யார்? இறந்த கிடந்தவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






