என் மலர்
திருவண்ணாமலை
- கர்நாடக மாநிலம் சரவணபெலகுளாவில் 57 அடி உயரமுள்ள பாகுபலி சிலைதான் உலகில் அதிகம் உயரம் கொண்டது.
- ராட்சத கிரேன் உதவியுடன் சுமார் 8 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு பாகுபலி சிலை கோவில் முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஜெயின் கோவில் உள்ளது.
இந்த கோவில் முன் பகுதியில் 24 அடி உயரம் கொண்ட பாகுபலி சிலை வைக்க முடிவு செய்தனர்.
இதற்காக செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் 24 அடி உயரம் கொண்ட பாகுபலி கல் சிலை வடிவமைப்பதற்காக கொடுக்கப்பட்டு சிலை உருவாக்கப்பட்டது.
இந்த சிலை 20 டயர் கொண்ட லாரியில் பொன்னூர் கிராமத்துக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது. பாகுபலி சிலை மகாபலிபுரத்திலிருந்து மேல் மருவத்தூர், கீழ்கொடுங்கலூர், வந்தவாசி, திண்டிவனம் சாலை, இளங்காடு கூட்ரோடு வழியாக பொன்னூர் வந்தது. வழி நெடுக ஜெயின் பக்தர்கள் தீபாராதனை செய்து பாகுபலி சிலையை வழிபட்டனர்.
கர்நாடக மாநிலம் சரவணபெலகுளாவில் 57 அடி உயரமுள்ள பாகுபலி சிலைதான் உலகில் அதிகம் உயரம் கொண்டது.
இப்போது திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா பொன்னூர் கிராமத்தில் உள்ள ஜெயின் கோவில் முன்பு 24 அடி உயரம் கொண்ட 2-வது பெரிய பாகுபலி சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று ராட்சத கிரேன் உதவியுடன் சுமார் 8 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு பாகுபலி சிலை கோவில் முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அப்போது ஜெயின் மதத்தைச் சேர்ந்த துறவிகள், சென்னை, காஞ்சிபுரம், திண்டிவனம், போளூர், ஆரணி, செஞ்சி, ஓதலவாடி, தேவிகாபுரம், சேத்துப்பட்டு ஆகிய பகுதியில் இருந்து ஏராளமான ஜெயினர்கள் கலந்து கொண்டு பாகுபலியை வழிபட்டு சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- போலீசில் புகார்
- 2 பேரை தேடி வருகின்றனர்
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள சேர்ப்பாப்பட்டு பொன்வயல் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் மகன் சீதாபதி.
டிரைவரான இவர், 17 வயது சிறுமியை அவரது பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமியும், அவரும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை,
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
அதன் போலீசார் சிறுமியை கடத்தி திருமணம் செய்த சீதாபதி மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் தேடி வருகின்றனர்.
- 4 பேர் காயம்
- போலீசார் விசாரணை
கலசபாக்கம்,
தெலுங்கானா மாநிலம் கசாப் காலி நிஜாம்மாபாத் பகுதியை சேர்ந்தவர் மாரா குருஷி கிருஷ்ணா (வயது 34). இவர், தனது தாய் மாறா பாத்திமா மற்றும் மனைவி, மகன் உள்பட 5 பேர் காரில் திருவண்ணா மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
தரிசனம் முடித்துவிட்டு ஊருக்கு திரும்பினர். திரு வண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் போளூர் வழியாக காரில் சென்றனர்.
கலசபாக்கத்தை அடுத்த குருவிமலை பகுதி அருகே சென்ற போது, வேலூரில் இருந்து வந்த அரசு பஸ் திடீரென கார் மீது மோதியது. இதில் மாறா பாத்திமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த 4 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
- போலீசார் விசாரணை
ஆரணி,
ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 34). டிராக்டர் டிரைவர் இவர் அதே கிராமத்தை சேர்ந்த நாராயணன் என்பவரின் நிலத்தில் நெல் பயிரிடுவதற்காக டிராக்டரில் கண்ணன் ஏர் ஓட்டினார்.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரின் அடியில் சிக்கி கொண்ட கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இச்சம்பவம் குறித்து கண்ணனின் சகோதரி ஜெயந்தி ஆரணி தாலுக்கா போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உதவி இயக்குனர் தலைமையில் நடந்தது
- அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
போளூர்,
போளூர் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் சவிதா தலைமையில் நடைபெற்றது.
போளூர் தாசில்தார் சஜேஷ்பாபு, சமூக நலத்துறை தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்டல துணை தாசில்தார் சுசிலா வரவற்றார். மாவட்ட விநியோக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு மனுக்களை பெற்றுக்கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
இதில் விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
- கராத்தே மாஸ்டர் குண்டர் சட்டத்தில் கைது
- வேலூர் ஜெயிலில் அடைப்பு
தண்டராம்பட்டு,
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி. அதே பகுதியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரவீன்குமார் (வயது 23). கராத்தே மாஸ்டர். இவர் பிளஸ் 2 மாணவியை காதலிப்பதாக கூறப்படுகிறது.
குண்டர் சட்டத்தில் கைது
திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் தண் டராம்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
விசாரணையில் பிரவீன்குமார் மீது ஏற்கனவே இதே போன்று தானிப்பாடி போலீசில் ஒரு வழக்கு இருப்பது தெரியவந்தது. இதனால் பிரவீன்குமார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- எனது மகள் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருப்பது எனக்கு உண்மையிலேயே பெருமையாக உள்ளது.
- அரசு மாதிரிப் பள்ளி தொடர்ந்து 2-வது ஆண்டாக சாதனை படைத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை சேர்ந்தவர் ரவிக்குமார் ஆட்டோ டிரைவர். இவருடைய மகள் வர்ஷா. திருவண்ணாமலை அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் வர்ஷா 600-க்கு 589 மதிப்பெண்கள் பெற்றார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாணவியை திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் பாராட்டினார்.
எனது தந்தை ஆட்டோ ஓட்டி வருகிறார். எங்கள் குடும்பத்தில் அதிக நிதி நெருக்கடி உள்ளது.
எனக்கு மாதிரி பள்ளியில் ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது. பொது தேர்வுகளின் போது ஆசிரியர்கள் தொடர்ந்து என்னை கடினமாக படிக்க தூண்டினர். தேர்வு நேரத்தில் எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அப்போது பாடங்களை படித்து முடிப்பது சோதனையாக இருந்தது.
ஆனாலும் கடினமாக படித்தேன். தற்போது அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. நான் அரசு ஊழியராக ஆசைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகள் சாதனை பெற்றதில் ஆட்டோ டிரைவர் ரவிக்குமார் மகிழ்ச்சியோடு காணப்பட்டார். அவர் கூறுகையில்:-
நான் ஆட்டோ ஓட்டி வருகிறேன். அந்த வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறோம். வறுமையிலும் எனது மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவளை தொடர்ந்து படிக்க வைத்தேன்.
தேர்வு நேரத்தில் எனது மகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இருந்தாலும் அவர் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நன்றாக படித்தார். எனது மகள் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருப்பது எனக்கு உண்மையிலேயே பெருமையாக உள்ளது என்றார்.
திருவண்ணாமலையில் உள்ள அரசு மாதிரிப் பள்ளி, தொடர்ந்து 2-வது ஆண்டாக சாதனை படைத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாடல் பள்ளியைச் சேர்ந்த 77 மாணவர்களில், 23 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
- வருகிற 12-ந்தேதி நடக்கிறது
- அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள 5 புத்தூரில் தர்மராஜா கோவிலில் மகாபாரத அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது.
இதைமுன்னிட்டு கடந்த 7-ந் தேதி காலை அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு தபசு மரம் அமைத்து அர்ச்சுனன் வேடமணிந்த நாடக நடிகர் மரத்தின் உச்சியில் ஏறிச் சென்று ஈசனிடம் பாசு பதாஸ்திரம் வேண்டினார்.
நிகழ்ச்சியில் தபசு மரத்தை சுற்றி குழந்தை வரம் வேண்டியும் திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு திருமணம் வேண்டியும் வணங்கினர். தபசு மரத்தில் இருந்த கீழே தனது கையிலிருந்த பிரசாதங்கள் பக்தர்கள் வீசினார்.
வருகிற 12-ந்தேதி காலை துரியோதனன் படுகளம், மாலையில் தீமிதி விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
- 90 சதவிகிதம் பணி முடிந்துள்ளது
- போக்குவரத்து பாதிப்பு
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த கொட்டை கிராமத்தில் ஒரு பிரிவினர் பயன்படுத்தும் சுகாட்டிற்கு சாலை வசதி இல்லாததால் வயல் வெளியில் சடலத்தை எடுத்து சென்று இறுதி சடங்கு செய்து வந்தனர்.
அப்போது மற்றவர்கள் தங்களது நிலத்தில் பாதை அமைக்க இடம் கொடுத்த நிலையில் ஒருவர் மட்டும் கொடுக்காமல் இருந்தாக கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக சடலத்தை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகின்றது.
இருந்த போதிலும் பொதுமகக்கள் அவ்வழியாக எடுத்து சென்றனர். நடை பாதையாக உள்ளதை வாகனம் செல்லும் வகையில் பாதையாக மாற்றவேண்டும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.
இதனை தொடர்ந்து வருவாய் துறை மூலமாக அங்கு பாதை அமைக்க இடம் கையகப்படுத்தி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
வயல் வெளியாக இருந்ததை பாதையாக மாற்றினர். இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பாக அவ்வழியா சென்ற எம்.எல்.ஏ. எஸ்.அம்பேத்குமாரை முற்றுகையிட்டு புகார் செய்தனர்.
இதனை தொடர்ந்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக அங்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஜல்லி சாலை 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அமைக்க ஒப்புதல் பெற்று தந்தார்.
90 சதவிகிதம் பணி முடிந்துள்ளது. இந்த நிலையில் பணியை நிறுத்தியதாக கூறப்படுகின்றது. பணியை விரைந்து முடிக்க வேண்டி அப்பகுதி பொதுமக்கள் திடீர் என கீழ்ெகாடுங்காலூர் கூட்டுசாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி கார்த்திக், பிடிஓ ஸ்ரீதர் ஆகியோர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
விரைவில் பணி முடிக்கப்படும் என கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
- கைது செய்தவர்களை விடுக்கவும் கோரிக்கை வைத்தனர்
- போலீசார் கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்தவர்களை விடுக்கவும் கோரிக்கை வைத்தனர்.
திருவண்ணாமலை ஒன்றியம் உள்ள தேவனந்தல் ஊராட்சியில் புனல்காடு அருகில் உள்ள மலையை ஒட்டிய 5 ஏக்கர் இடத்தில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதற்கு அருகில் உள்ள புனல்காடு, கலர்கொட்டாய், ஆடையூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் ஆதரவாக செயல்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி அந்த குப்பை கிடக்கில் குப்பை கொட்ட சென்ற லாரி டிரைவர் சிலர் தாக்கியதாகவும், பேச்சுவார்த்தைக்கு சென்ற திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதேவ்ஆனந்தை போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், புதியதாக அமைக்கப்பட்டு வரும் குப்பை கிடங்கை சுற்றி அளவீடு நடப்பட்ட கற்களை சிலர் உடைத்தாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கொடுத்த புகாரின் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் அதன் பேரில் போலீசார் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 14 பேரும் தலைமறைவாக உள்ளனர்.
அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். அதை தொடர்ந்து நேற்று மாலையில் குப்பை கிடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்குப்பதிவு செய்து உள்ள 20 பேரின் குடும்பத்தினரும் என சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் போர்ட்டிகோவில் அமர்ந்து பெண்கள் ஒன்றிணைந்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் தரையில் படுத்து கொண்டு கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், புனல்காடு மலை அடிவாரத்தில் குப்பை கிடங்கு அமைக்க கூடாது என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது.
பின்னர் அவர்களில் சிலரை போலீசார் கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் கலெக்டர் முருகேஷை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்று கொண்ட அவர் இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- 2 பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தார்
- சால்வை அணிவித்தார்
செய்யாறு:
செய்யாறு டவுன், அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இங்கு படித்த கிஷேர் என்ற மாணவர் பிளஸ்-2 தேர்வில் பள்ளியில் முதல் இடமும், இரண்டு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெணும் எடுத்தார்.
ஒ.ஜோதி எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், பி.டி.ஏ. தலைவர் அசோக் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- அர்ச்சகர்கள் வலியுறுத்தல்
- கோடை விடுமுறையால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தாிசனம் செய்ய வருகை தருகின்றனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
கோவிலுக்கு கோடை விடுமுறையால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தாிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
கொரோனா பரவலுக்கு முன்பு அருணாசலேஸ்வரர் கோவிலில் மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடை சாற்றப்பட்டு இருக்கும்.
கொரோனா கட்டுப்பாடு தளர்வு செய்யப்பட்ட பின்னர் அருணாசலேஸ்வரர் கோவில் அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தொடர்ந்து சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மீண்டும் ஆகம விதிப்படி மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை கோவிலில் நடை சாற்ற வேண்டும் என்று கோவில் அர்ச்சகர்கள் கோவில் இணை ஆணையரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவை பெற்று கொண்ட ஆணையர் குமரேசன், இது குறித்து துறை அமைச்சரிடம் அனுமதி பெற்று வரும் காலங்களில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.






