என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.
சுடுகாட்டு பாதை பணியை முடிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
- 90 சதவிகிதம் பணி முடிந்துள்ளது
- போக்குவரத்து பாதிப்பு
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த கொட்டை கிராமத்தில் ஒரு பிரிவினர் பயன்படுத்தும் சுகாட்டிற்கு சாலை வசதி இல்லாததால் வயல் வெளியில் சடலத்தை எடுத்து சென்று இறுதி சடங்கு செய்து வந்தனர்.
அப்போது மற்றவர்கள் தங்களது நிலத்தில் பாதை அமைக்க இடம் கொடுத்த நிலையில் ஒருவர் மட்டும் கொடுக்காமல் இருந்தாக கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக சடலத்தை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகின்றது.
இருந்த போதிலும் பொதுமகக்கள் அவ்வழியாக எடுத்து சென்றனர். நடை பாதையாக உள்ளதை வாகனம் செல்லும் வகையில் பாதையாக மாற்றவேண்டும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.
இதனை தொடர்ந்து வருவாய் துறை மூலமாக அங்கு பாதை அமைக்க இடம் கையகப்படுத்தி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
வயல் வெளியாக இருந்ததை பாதையாக மாற்றினர். இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பாக அவ்வழியா சென்ற எம்.எல்.ஏ. எஸ்.அம்பேத்குமாரை முற்றுகையிட்டு புகார் செய்தனர்.
இதனை தொடர்ந்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக அங்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஜல்லி சாலை 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அமைக்க ஒப்புதல் பெற்று தந்தார்.
90 சதவிகிதம் பணி முடிந்துள்ளது. இந்த நிலையில் பணியை நிறுத்தியதாக கூறப்படுகின்றது. பணியை விரைந்து முடிக்க வேண்டி அப்பகுதி பொதுமக்கள் திடீர் என கீழ்ெகாடுங்காலூர் கூட்டுசாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி கார்த்திக், பிடிஓ ஸ்ரீதர் ஆகியோர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
விரைவில் பணி முடிக்கப்படும் என கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.






