என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • செங்கம் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அருகே நடந்து செல்லும்போது ராஜேஷ் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
    • டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

    திருவண்ணாமலை:

    சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40). இவர், நேற்று முன்தினம் பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு சென்றார். பின்னர் அவர் கிரிவலம் சென்று கொண்டிருந்தார்.

    செங்கம் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அருகே நடந்து செல்லும்போது ராஜேஷ் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்போது சக பக்தர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நள்ளிரவு மர்ம நபர்கள் கிணற்றில் கொட்டி விட்டு சென்று விட்டனர்
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த கடைசி குளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மகேஷ் இவர் கிராமத்தில் 10 ஏக்கரில் நெல் கரும்பு ஆகியவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

    இவர் விவசாயம் செய்யும் விவசாய கிணற்றில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் கோழி கழிவுகளை கிணற்றில் கொட்டி விட்டு சென்று விட்டனர்.

    இதனால் அந்த விவசாய கிணறு துர்நாற்றம் வீசும் சூழல் ஏற்பட்டது.

    அங்கு வசிக்கும் 15 குடும்பங்களுக்கு இந்த விவசாய கிணற்றில் இருந்து தான் குடிநீர் எடுத்துச் செல்லுகிறது வழக்கம். இதனால் பே்பகுதி மக்கள் கோழி கழிவுகளை கொட்டி சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது
    • போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்

    திருவண்ணாமலை:

    விழுப்புரம் மாவட்டம் மரக் காணம் பகுதியில் கள்ளச்சா ராயம் குடித்து பலர் உயிரி ழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவ தும் சாராய ஒழிப்பு நடவ டிக்கை தீவிரமாகமேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    அதன் படி, திருவண்ணாமலை மாவட்டத்திலும் சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் தீவி ரம் காட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று திரு வண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த் திகேயன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண் டுகள் ரமேஷ்ராஜ், கோவிந்த சாமி மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் ஜமு னாமரத்தூர் மலைப்பகுதி யில் உள்ள தும்பக்காடு பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாராய ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்ட னர்.

    அப்போது ஜமுனாமரத் தூர் தாலுகா தும்பக்காடு கீழூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு (வயது 33), தும்பக்காடு மேலூர் கிராமத்தை சேர்ந்த முரளி (22) ஆகியோர் அவர்க ளது வீட்டின் பின்புறத்தில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த போது போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    • வருகிற 16-ந்தேதி 108 பால்குடம் மற்றும் கூழ்வார்க்கும் திருவிழா
    • வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது

    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு பெரியமலை திரும ணிச் சேறைவுடையார் சிவன் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவலிங்கம், திருமணி நாயகி தாயார், விநாயகர், வள்ளி, தெய்வானை, முருகர், அகத்தியர் ஆகிய மூலவர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் ஆனந்தன் ஐயர் தலைமையில் நடந்தது.

    அதைத் தொடர்ந்து சிவயோகி சித்தர் ஐ.ஆர்.பெருமாள் சுவாமிகள் தலைமையில் பக்தி பாடல்கள் பாடியபடி மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.

    கோவில் அடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங் கப்பட்டது. இதில் ஆரணி, செய்யாறு, வந்தவாசி, போளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் இருந்து பக் தர்கள் வந்து கிரிவலம் சென்றனர்.

    கோவிலில் வருகிற 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆண்டு பெருவிழாவை யொட்டி 108 பால்குடம் மற்றும் கூழ்வார்க்கும் திருவிழா நடக்கிறது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரி வித்தனர்.

    • அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம்
    • சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்

    செய்யாறு:

    செய்யாறு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி. அதே பகுதியில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால் சிறுமி தாயுடன் வசித்து வருகிறார்.

    பெரியப்பா உறவு முறையான கூலி தொழிலாளி சிறுமி இருக்கும் வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம். இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் சிறுமியின் தாயார் வீரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.

    அங்கிருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அப்போது சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனால் தாயார் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்ததில், தனது பெரியப்பா அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறினார்.

    பின்னர் சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிலாளியை தேடி வருகின்றனர்.

    • பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த மோரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 40). இவரது மனைவி கோமதி. இவர்கள் சொந்தமாக அதே பகுதியில் ஹாலோ பிளாக் கடை நடத்தி வருகின்றனர்.

    நேற்று காலை கடையை திறப்பதற்காக கணவன், மனைவி சென்றனர். அப்போது வாலிபர் ஒருவர் ஹாலோ பிளாக் செய்யும் மெஷினை திருடி கொண்டு ஓட முயன்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன் மனைவி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடிவந்து வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

    அவர் செய்யாறு அடுத்த சின்ன செங்காடுவை சேர்ந்த தனசேகர் (40)என்பது தெரியவந்தது. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் பிடிபட்ட தனசேகரை மோரணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் தனசேகர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மேலும் திருட்டு சம்பந்தமாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
    • இன்று காலையிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.54 மணி அளவில் தொடங்கியது. திருவண்ணாமலையில் நேற்று 105.8 டிகிரி வெயில் பதிவாகியது. இதனால் வெயில் சுட்டெரித்தது. எனினும் பக்தர்கள் பலர் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மாலை வரை கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஆனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவிலின் அம்மணி அம்மன் கோபுரம் அருகில் இருந்து ராஜகோபுரம் அருகில் வரை சித்ரா பவுர்ணமியை போன்று இந்த பவுர்ணமிக்கும் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலின் உட்பிரகாரத்திலும் பக்தர்கள் வந்து செல்லும் பாதையிலும் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தண்ணீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது. மேலும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் மாலைக்கு மேல் அதிகரிக்க தொடங்கியது. நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதனால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர்.

    திருவண்ணாமலை நகரில் உள்ள முக்கிய இணைப்பு சாலை பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    பவுர்ணமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.34 மணி வரை உள்ளது. இதனால் இன்று காலையிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    போலீசார் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி தொடர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

    • பணி, முழுமை பெறாமல் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
    • சுற்றுச்சூழல் இயக்குனர் ஆய்வு

    ஆரணி:

    ஆரணி நகராட்சியில் உள்ள சூரிய குளம் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    அந்த பகுதியில் இருந்து வரும் கழிவுநீர், கால்வாய் மூலமாக இந்த குளத்தில் கலக்கிறது. இதனை தடுக்கும் வகையிலும், குளத்தை சீரமைத்து அதில் சுத்தமான மழை நீர் மட்டும் தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் குளத்தை சீரமைத்து, குளத்தை சுற்றி மின்விளக்குகள் அமைக்க ரூ.1 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த 36 மாதமாக நடைபெற்று வரும் இந்த பணி, முழுமை பெறாமல் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகாரின் பேரில் சுற்றுச் சூழல்துறை இயக்குனர் தீபக் பில்ஜி, நேற்று சூரிய குளம் சீரமைக்கும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது ஆரணி சப்-கலெக்டர் தனலட்சுமி, நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, கமிஷனர் தமிழ்செல்வி, என்ஜினீயர் விஜயராஜ காமராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • மன உளைச்சலில் இருந்து வந்தார்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    செங்கல்பட்டு மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 67). இவரது மனைவி மல்லிகா (50). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    மல்லிகாவிற்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் மல்லிகா கடந்த 29-ந் தேதி வெம்பாக்கம் மேலனூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்தார்.

    அப்போது அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு மல்லிகா ஆளானார்.

    பின்னர் பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மேல் சிகிச்சை க்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஏழுமலை தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முகத்தில் காயங்களுடன் ஆட்டோ டிரைவர் மர்ம சாவு
    • கணவன் -மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு மனைவியிடம் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46), ஆட்டோ டிரைவர்.

    இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கணவன் -மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று அதிகாலையில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் முகத்தில் வெட்டு காயங்களுடன் ரமேஷ் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-

    கணவன்- மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கத்தியை எடுத்து ரமேஷ் தனக்கு தானே முகத்தில் வெட்டியதாக முதல் கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

    ஆனாலும் பிரேத பரிசோதனைக்கு பிறகே முழுமையான தகவல் தெரியவரும். எனவே மர்ம சாவாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

    மேலும் இது சம்பந்தமாக போலீசார் ரமேஷ் மனைவி மகாலட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமியின் பெற்றோர்களுக்கு கொலை மிரட்டல்
    • வாலிபருக்கு வலைவீச்சு

    செய்யாறு:

    செய்யாறு பகுதியை சேர்ந்த தொழிலாளியின் 10 வயது மகள், அதே பகுதியில் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர்களது எதிர் வீட்டில் 20 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். தொழிலாளியின் வீட்டில் அடிக்கடி வாலிபர் சென்று நெருங்கி பழகி உள்ளார். இந்த நிலையில் பள்ளி மாணவியை வாலிபருடன் கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி வர அனுப்பி உள்ளனர்.

    வாலிபர் பள்ளி மாணவியை அந்தப் பகுதியில் உள்ள ஏரி பகுதிக்கு அழைத்து சென்றார். அங்குள்ள முட் புதரில் வைத்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இச்சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் வாலிபரிடம் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் சிறுமியின் பெற்றோர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    பின்னர் இது குறித்து சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் போக்சோ மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.

    • தேர்வு முடிந்ததும் ஆசிரியர் உள்ளிட்ட மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்
    • அரசு கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்

    திருவண்ணாமலை:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் சந்தியா.

    இவர் ஆற்காடு மகாலட்சுமி மகளிர் கலை கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

    இவருக்கு நேற்று திருமணம் நடந்தது. இதனையடுத்து திருமண கோலத்தில் சந்தியா அரசு கலைக் கல்லூரியில் நடந்த இறுதி ஆண்டு தேர்வை எழுதினார்.

    தேர்வு முடிந்ததும் ஆசிரியர் உள்ளிட்ட மாணவர்கள் சந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இதேபோல் திருவண்ணாமலை அடுத்த பூதமங்கலம் சேர்ந்தவர் குமுதா.

    இவர் திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவருக்கும் நேற்று திருமணமான நிலையில் திருமண கோலத்தில் சென்று தேர்வு எழுதினார்.

    ×