என் மலர்
நீங்கள் தேடியது "தேர்வு எழுதிய மாணவிகள்"
- தேர்வு முடிந்ததும் ஆசிரியர் உள்ளிட்ட மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்
- அரசு கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்
திருவண்ணாமலை:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் சந்தியா.
இவர் ஆற்காடு மகாலட்சுமி மகளிர் கலை கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
இவருக்கு நேற்று திருமணம் நடந்தது. இதனையடுத்து திருமண கோலத்தில் சந்தியா அரசு கலைக் கல்லூரியில் நடந்த இறுதி ஆண்டு தேர்வை எழுதினார்.
தேர்வு முடிந்ததும் ஆசிரியர் உள்ளிட்ட மாணவர்கள் சந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல் திருவண்ணாமலை அடுத்த பூதமங்கலம் சேர்ந்தவர் குமுதா.
இவர் திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருக்கும் நேற்று திருமணமான நிலையில் திருமண கோலத்தில் சென்று தேர்வு எழுதினார்.






