என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளம் சீரமைப்பு"

    • பணி, முழுமை பெறாமல் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
    • சுற்றுச்சூழல் இயக்குனர் ஆய்வு

    ஆரணி:

    ஆரணி நகராட்சியில் உள்ள சூரிய குளம் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    அந்த பகுதியில் இருந்து வரும் கழிவுநீர், கால்வாய் மூலமாக இந்த குளத்தில் கலக்கிறது. இதனை தடுக்கும் வகையிலும், குளத்தை சீரமைத்து அதில் சுத்தமான மழை நீர் மட்டும் தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் குளத்தை சீரமைத்து, குளத்தை சுற்றி மின்விளக்குகள் அமைக்க ரூ.1 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த 36 மாதமாக நடைபெற்று வரும் இந்த பணி, முழுமை பெறாமல் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகாரின் பேரில் சுற்றுச் சூழல்துறை இயக்குனர் தீபக் பில்ஜி, நேற்று சூரிய குளம் சீரமைக்கும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது ஆரணி சப்-கலெக்டர் தனலட்சுமி, நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, கமிஷனர் தமிழ்செல்வி, என்ஜினீயர் விஜயராஜ காமராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×