என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • பேரூராட்சி மன்ற தலைவரை கண்டித்து நடந்தது
    • பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த தேசூர் பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ள நிலையில் 8 தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பேரூராட்சி மன்ற தலைவருக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் இடையே பணியின் காரணமாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது பேரூராட்சி மன்ற தலைவரின் கணவர் தகாத வார்த்தையால் பேசியதாகவும் மேலும் தூய்மை பணியாளர்களை தரகுறைவாக நடத்து வதாகவும் கூறி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் சம்பவம் இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது
    • கலெக்டர் முருகேஷ் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்காக பே கோபுர தெருவில் நாளை முதல் போக்குவரத்து தடை செய்யப்படுவதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை உட்கடமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் சிமெண்ட் சாலை அமைக்கப்படும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    திருவூடல் தெரு- பே கோபுர தெரு சந்திப்பு (திரவுபதி அம்மன் கோவில்)முதல் வட ஒத்தவாடை தெரு வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளன.

    இப்பணி நிறைவு பெறும் வரை நாளை காலை 6 மணி முதல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. இச்சாலையை மூடுவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தண்டராம்பட்டு மற்றும் மணலூர்பேட்டை சாலை வழியாக வரும் வாகனங்கள் மற்றும் பே கோபுரத் தெரு வழியாக நகரில் உள்ளே செல்லும் வாகனங்கள் அனைத்தும் காமராஜர் சிலையிலிருந்து கல் நகர், ஆடு தொட்டி தெரு, காந்தி நகர் புறவழிச்சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.தேரடி வீதியிலிருந்து நகருக்கு வெளியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் காந்தி சிலை, பூத நாராயணன் பெருமாள் கோவில், சின்ன கடை வழியாக செல்ல வேண்டும்.

    செங்கம் சாலையில் இருந்து திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும், செங்கம் சாலை சந்திப்பில் இருந்து கிரிவலம் பாதை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும் இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடவும் கூடாது, அருகில் செல்லவும் கூடாது
    • செயற் பொறியாளர் எச்சரிக்கை

    செய்யாறு:

    செய்யாறு மின்வாரிய செயற் பொறியாளர் சரவணன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மழை, மின்னல், காற்றின் போது பொது மக்கள் மின்கம்பம், மின்பாதை, மின்மாற்றி அருகில் நிற்கவோ, செல்லவோ கூடாது.

    மின்மாற்றிகளிலோ அல்லது மின்கம்பத்திலோ பழுது ஏற்பட்டால் உரிய அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி சரி செய்து கொள்ள வேண்டும். அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடவும் கூடாது. அருகில் செல்லவும் கூடாது.

    மின்பாதைக்கு அருகிலோ, பக்கவாட்டிலோ, மின்பா தைக்கு கீழாகவோ எவ்விதகட்டிடப் பணியும் மேற்கொள்ளக் கூடாது. அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு கட்டிட உரிமை யாளரே முழு பொறுப்பு ஆவார்.

    பொதுமக்கள் மற்றும் நுகர் வோர் விழாக் காலங்களில் கம்பத்திலோ, மின்பாதைக்கு கீழாகவோ பேனர் தட்டிகள் மற்றும் கொடிகள் போன்ற வற்றை கட்டக்கூடாது.

    அதனால் ஏற்படும் அசம்பாவிதங்க ளுக்கு அவரவரே முழு பொறுப்பாவார்கள்.

    வீட்டில் துணியை காயப்போடுவதற்காக கட்டும் கயிற்றின் மீது எந்த ஒரு மின் ஒயரையும் சுற்றி எடுத்துச் செல்லக்கூடாது.

    வயல்வெளிகளில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சவ ஊர்வலத்தின் போது பூ மாலைகளை மின்பாதையின் மேல் வீசக்கூடாது.

    மின் பழுது, மின் மீட்டர் அளவு குறைபாடுகள் மற்றும் விபத்து குறித்து கட்டணமில்லா சேவை எண் 94987 94987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குதிரை வாகனத்தில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    செங்கம்:

    செங்கத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீருக்மணி சத்யபாமா கதமத ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் 10 நாள் கருட சேவை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    நேற்று 8-ம் நாள் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    மூலவர்களுக்கு வண்ண மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதேபோல உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு குதிரை வாகனத்தில் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

    • 371 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன
    • மாணவர்களும், பெற்றோர்களும் முகாம் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனர்

    செய்யாறு:

    செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வெம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு பழம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி களில் வருவாய்த்துறை சார்பில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் சிறப்புமுகாம் நடந்தது.

    முகாமில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேற்படிப்பு மேற்கொள்ள தேவையான முதல் பட்டதாரி சான்று, சாதி சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று ஆகியவற்றைப் பெற திரளாக கலந்துகொண்டு விண்ணப்பித்தனர்.

    தொடர்ந்து மாணவர்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து தகுதி யுடைய மாணவர்களுக்கு உரிய சான்றிதழ்கள் முகாமில் வழங்கப்பட்டது.

    அதன்படி, 114மாண வர்களுக்கு சாதி சான்று, 118 மாணவர்களுக்கு வருமானச் சான்று, 133 மாணவர்களுக்கு இருப்பிட சான்று, 6 மாண வர்களுக்கு முதல் பட்டதாரி சான்று என மொத்தம் 371,மாணவர்களுக்கு 4 வகையான சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்த முகாம் பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்களும் பெற்றோர்களும் தெரிவித்தனர்.

    • கல்லூரி விடுதியில் தங்கியிருந்த காயத்ரி விதைப்பண்ணை அருகே உள்ள கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.
    • வாணாபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    திருவண்ணாமலை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் காயத்ரி (வயது 20).

    இவர் திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கல்லூரி விடுதியில் தங்கியிருந்த காயத்ரி விதைப்பண்ணை அருகே உள்ள கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.

    அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று திரண்டனர்.

    அப்போது அவர்கள் மகள் மரணத்திற்கு கல்லூரி நிர்வாகம் கொடுத்த அழுத்தம்தான் காரணம், நீதி கிடைக்கும் வரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றனர்.

    அவர்களிடம், வாணாபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

    விடுதியில் உள்ள மாணவியின் அறையில் இருந்து கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

    கல்லூரி நிர்வாகம் கொடுக்கும் அழுத்தத்தை தாங்க முடியவில்லை. மாணவர், மாணவிகள் பேசினாலும் தவறாக பார்க்கின்றனர்.

    இங்கிருந்து போனால் போதும். படிக்கவும் முடியவில்லை. எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அப்பா, அம்மா உங்களுக்கு கஷ்டத்தை கொடுத்து விட்டேன்.

    கல்லூரி கட்டணம் கட்டுவதற்கு நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள், நான் உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்க விரும்பவில்லை என்னை மன்னித்து விடுங்கள். எனது மரணத்திற்கு நான் தான் காரணம் வேறு யாரும் இல்லை என எழுதப்பட்டுள்ளது.

    மாணவி காயத்ரியுடன் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள், அவரது தோழிகள் பாடம் நடத்திய பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், முதல்வர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • தற்போது வரை எந்த ஒரு சீரமைக்கும் முயற்சியையும் எடுக்கப்படவில்லை
    • சமூக வலைதலங்களில் தகவல் பரவி வருகிறது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே பூசிமலைகுப்பத்தில் உள்ள (பிரெஞ்சு கோட்டை) கண்ணாடி மாளிகை கட்டிடங்களை புதுப்பிக்க கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பே தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவவேலு சட்டமன்றத்தில் சுமார் 11.5 கோடி செலவில் சீரமைத்து தரப்படும் என அறிவித்தார்.

    ஆனால் தற்போது வரை எந்த ஒரு சீரமைக்கும் முயற்சியையும் எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் ஏன்?என எதிர்பார்க்கின்றனர். இது குறித்து சமூக வலைதலங்களில் தகவல் பரவி வருகிறது.

    • சாவில் சந்தேகம் உள்ளது என ஆஸ்பத்திரியில் உறவினர்கள் முற்றுகை
    • போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை

    வாணாபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூரில் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஓசூரைச் சேர்ந்த கருணாநிதி என்பவரது மகள் காயத்ரி (வயது 21) 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காயத்ரி அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வாணாபுரம் போலீசார் மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மாணவியின் உறவினர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிமுன்பு குவிந்தனர்.

    கூறும்போது மாணவியின் உடலில் காயங்கள் உள்ளன எங்களுக்கு மாணவியின் சாவில் சந்தேகம் உள்ளது.

    இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களிடம் போலீசார் பேச்சு வார்ததை நடத்தினர்.

    • வாயில் நுரை தள்ளியபடி கிடந்தார்
    • குடும்ப தகராறு காரணமாக விபரீதம்

    செய்யாறு:

    வெம்பாக்கம் அடுத்த வடமனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 27). ஆடுகளை மேய்த்து வந்தார். இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் முருகன் மன உளைச்சலில் காணப்பட்டார்.

    கடந்த 3-ந் தேதி மாலை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    வாயில் நுரை தள்ளியபடி கிடந்த கார்த்திகை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு வெம்பாக்கம் பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து மோரணம் போலீசில் சுகந்தி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடைகளுக்கு முன்பு வைத்திருந்த விளம்பர பலகை மற்றும் மேற்கூறைகளை அகற்றினர்
    • அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்தால் கடும் நெரிசல் ஏற்படுகிறது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பஸ் நிலையம் அருகே காய்கறி மற்றும் மளிகை கடைகள் அதிக அளவில் உள்ளது. கண்ணமங்கலம் பஜார் என்று அழைக்கப்படும் இந்த பகுதி வேலூர் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் உள்ளது.

    இங்கு சாலையோரம் கடை நடத்தி வரும் உரிமையாளர்கள், விளம்பர பலகைகள் மற்றும் நிழலுக்காக மேற்கூரைகள் அமைத்திருந்தனர்.

    இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது.

    எனவே விளம்பர பலகை மற்றும் மேற்கூறைகளை அகற்ற வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.

    அதன்படி வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு முன்பு வைத்திருந்த விளம்பர பலகை மற்றும் மேற்கூறைகளை அகற்றினர்.

    இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை முற்றிலுமாக தடுக்கும் வகையில் சாலை நடுவே தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கிரிவலம் சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 40)இவர் நேற்று முன்தினம் பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் அவர் கிரிவலம் சென்று கொண்டிருந்தார்.

    செங்கம் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அருகே நடந்து செல்லும் போது ராஜேஷ் திடீரென மயங்கிவிழுந்துள்ளார்.

    அப்போது அதே பகுதியில் கிரிவலம் சென்று கொண்டிருந்த பக்தர்கள் உட்பட அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காயத்ரி அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
    • மாணவியின் உடலில் காயங்கள் உள்ளன எங்களுக்கு மாணவியின் சாவில் சந்தேகம் உள்ளது.

    வாணாபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூரில் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஓசூரைச் சேர்ந்த கருணாநிதி என்பவரது மகள் காயத்ரி (வயது 21) 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காயத்ரி அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த வாணாபுரம் போலீசார் மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மாணவியின் உறவினர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிமுன்பு குவிந்தனர்.

    மாணவியின் உடலில் காயங்கள் உள்ளன எங்களுக்கு மாணவியின் சாவில் சந்தேகம் உள்ளது.

    இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சு வார்ததை நடத்தினர்.

    ×