என் மலர்
உள்ளூர் செய்திகள்

வருவாய்த்துறை சிறப்பு முகாம்
- 371 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன
- மாணவர்களும், பெற்றோர்களும் முகாம் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனர்
செய்யாறு:
செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வெம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு பழம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி களில் வருவாய்த்துறை சார்பில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் சிறப்புமுகாம் நடந்தது.
முகாமில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேற்படிப்பு மேற்கொள்ள தேவையான முதல் பட்டதாரி சான்று, சாதி சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று ஆகியவற்றைப் பெற திரளாக கலந்துகொண்டு விண்ணப்பித்தனர்.
தொடர்ந்து மாணவர்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து தகுதி யுடைய மாணவர்களுக்கு உரிய சான்றிதழ்கள் முகாமில் வழங்கப்பட்டது.
அதன்படி, 114மாண வர்களுக்கு சாதி சான்று, 118 மாணவர்களுக்கு வருமானச் சான்று, 133 மாணவர்களுக்கு இருப்பிட சான்று, 6 மாண வர்களுக்கு முதல் பட்டதாரி சான்று என மொத்தம் 371,மாணவர்களுக்கு 4 வகையான சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்த முகாம் பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்களும் பெற்றோர்களும் தெரிவித்தனர்.






