என் மலர்
நீங்கள் தேடியது "போலீசார் பேச்சு வார்ததை நடத்தினர்"
- சாவில் சந்தேகம் உள்ளது என ஆஸ்பத்திரியில் உறவினர்கள் முற்றுகை
- போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை
வாணாபுரம்:
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூரில் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஓசூரைச் சேர்ந்த கருணாநிதி என்பவரது மகள் காயத்ரி (வயது 21) 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காயத்ரி அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வாணாபுரம் போலீசார் மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவியின் உறவினர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிமுன்பு குவிந்தனர்.
கூறும்போது மாணவியின் உடலில் காயங்கள் உள்ளன எங்களுக்கு மாணவியின் சாவில் சந்தேகம் உள்ளது.
இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் போலீசார் பேச்சு வார்ததை நடத்தினர்.






