என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட கனகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த பூதூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கனகா (வயது55). கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்த இவர் 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளியாக வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று இரவு வழக்கம்போல் கனகா வீட்டில் தூங்கினார். நள்ளி ரவில் வீட்டின் அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பி ஒன்று அறுந்து கனகா வீட்டின் முன்பு விழுந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் இதனை யாரும் கவனிக்க வில்லை.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கனகா வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவர் வீட்டு முன்பு அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட கனகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுபற்றி போலீசாருக்கும், மின்வாரிய ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    போலீசார் பலியான கனகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில நாட்களாக சோழவரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதில் ஏற்கனவே சேதம் அடைந்து இருந்த மின்கம்பி அறுந்து விழுந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    இந்த பகுதியில் மின்கம்பத்தில் உள்ள கம்பிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சேதம் அடைந்த மின்கம்பிகளை ஆய்வு செய்து அதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • துணை மின் நிலையத்தில் நாளை (6-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • தகவலை இருளி பட்டு மின்நிலைய உதவி பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை (6-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை அழிஞ்சி வாக்கம், எம்ஜிஆர் நகர், சித்தி விநாயகர் பண்ணை, சாய் கிருபா நகர், கணேஷ் நகர், ஸ்ரீ நகர், விருந்தாவன நகர், இருளி பட்டு, சத்திரம், பாதி பகுதி அத்திப்பேடு, எம்கே கார்டன், ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை, சத்திரம், ஜெகநாதபுரம், அகரம், குதிரை பள்ளம், ஆமூர் காலனி, கங்கையாடி குப்பம், நெடுவரம் பாக்கம் காலனி, மாலிவாக்கம் போன்ற பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை இருளி பட்டு மின்நிலைய உதவி பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    • பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம், மற்றும் பூஜை அறை உண்டியலில் இருந்த பணம், செல்போன் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
    • கொள்ளை குறித்து எண்ணூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் விம்கோ நகர், அம்பேத்கார் நகர், 4-வது தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். ஓய்வுபெற்ற போலீஸ்காரர். இவரது மனைவி ரமாதாயி. இவர்களது மகன் கவியரசன். மருமகள் பேச்சியம்மாள். இவர்கள் இருவரும் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் காவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். செல்லப்பாண்டியன் வீட்டின் கீழ் தளத்திலும், அவரது மகன் மற்றும் மருமகள் முதல் மாடியிலும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    நேற்று இரவு செல்லப்பாண்டியன், வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கி விட்டார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் செல்லப்பாண்டியன் வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் செல்லப்பாண்டியன் மனைவி ராமதாயியின் தலையணை அடியில் வைத்திருந்த பீரோவின் சாவியை நைசாக எடுத்து பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம், மற்றும் பூஜை அறை உண்டியலில் இருந்த பணம், செல்போன் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.

    இன்று காலை செல்லப்பாண்டியன் எழுந்த பின்னரே வீட்டில் கொள்ளை நடந்து இருப்பது தெரிந்தது. மாடியில் உள்ள அவரது மகன் வீட்டு கதவு பூட்டப்பட்டு இருந்ததால் கொள்ளையர்கள் அங்கு செல்லவில்லை.

    இது குறித்து எண்ணூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் கழிவு நீர் மழை நீரோடு கலந்து சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
    • பழவேற்காடு நெடுஞ்சாலை திருப்பாலைவனத்தில் மழையினால் சாலை சேதமடைந்து பெரிய பள்ளமாக காணப்படுகின்றன.

    பொன்னேரி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக விட்டு விட்டு கனமழை கொட்டுகிறது. நேற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

    பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் பாதாள சாக்கடை திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 5 வருடத்திற்கு மேலாக நடை பெற்று வரும் நிலையில் முழுமையாக முடிக்கப்படாததால் என். ஜி. ஓ. நகர், பர்மா நகர், ஜீவா தெரு உள்ளிட்ட பல இடங்களில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கின. மேலும் அந்த இடம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறின. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    மேலும் 16-வது வார்டுக்கு உட்பட்ட தெருக்களில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் குளம்போல் தேங்கி சகதியாக மாறிகாணப்படுகிறது. இதேபோல் ரயில் நிலையம் அருகில் மழைநீர் கால்வாய் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் கழிவு நீர் மழை நீரோடு கலந்து சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    பொன்னேரி-மீஞ்சூர் சாலை அருகே தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி காணப்படுவதால் சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. பொன்னேரி-பழவேற்காடு சாலை திருவாயர்பாடி ரெயில்வே மேம்பாலம் அடியில் 4 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் இரண்டு பக்கமும் வாகனங்கள் செல்ல முடியாமல் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துணைத் தலைவர் விஜயகுமார் தலைமையில் நகராட்சி நிர்வாக பணியாளர்கள் 3 மோட்டார்கள் வைத்து மழை நீரை அகற்றினர்.

    பலத்த மழை காரணமாக நேற்று இரவு பொன்னேரி மற்றும் சுற்று வட்டார பகுதியில் மூன்று மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. பொன்னேரி பழவேற்காடு நெடுஞ்சாலை திருப்பாலைவனத்தில் மழையினால் சாலை சேதமடைந்து பெரிய பள்ளமாக காணப்படுகின்றன. இதனால் அவ்வழியே வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்க வருகின்றன. இதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக பொன்னேரியில் 5 செ.மீட்டர் மழையும், கும்மிடிப்பூண்டியில் 3 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

    • கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுவார் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
    • தலைமை கழக நிர்வாகிகள் முக்கிய பேச்சாளர்களும் பேச இருக்கின்றனர்.

    திருவள்ளூர்:

    தி.மு.க.வில் மண்டல வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடந்து வந்தது.

    இதில் டெல்டா மண்டல கூட்டம் திருச்சியில் ஜூலை மாதம் நடந்தது. தென் மண்டல கூட்டம் ஆகஸ்டு மாதம் ராமநாதபுரத்திலும், மேற்கு மண்டல கூட்டம் செப்டம்பர் மாதம் காங்கேயத்திலும், வடக்கு மண்டல கூட்டம் அக்டோபரில் திருவண்ணாமலையிலும் நடைபெற்றது.

    இந்த கூட்டங்கள் மூலம் 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    இந்த கூட்டங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றி வந்தார். தேர்தல் வியூகம் குறித்து பல்வேறு விஷயங்களை எடுத்துரைத்தார்.

    இதன் நிறைவாக சென்னை மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் 12 ஆயிரம் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்கும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று திருவள்ளூரில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளடங்கிய 11 தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். காலை 9 மணிக்கு அமைச்சர் ஆர். காந்தி, திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.சந்திரன், திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலையில் கூட்டம் தொடங்கியது.

    இதல் மாவட்டச் செயலாளர்கள் தா.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன், ஆவடி சா.மு. நாசர், சுந்தர், பி.கே. சேகர்பாபு, மாதவரம் எஸ். சுதர்சனம், டி.ஜே.கோவிந்த ராஜன், நே.சிற்றரசு, மயிலை வேலு, தா. இளைய அருணா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள்.

    கூட்டத்தில் சுற்றுச் சூழல் அணி மாநில துணைச் செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட துணை செயலாளர்கள் டாக்டர் குமரன், உதய மலர் பாண்டியன், திருவாலங்காடு மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் காஞ்சிபாடி பி.சரவணன், முன்னாள் நகர மன்ற தலைவர் பொன் பாண்டியன், அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ஜி ஜெய் கிருஷ்ணன், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் லோட்டஸ் எஸ்.டி. கோபிநாத், இளைஞர் அணி அமைப்பாளர் ம.கிரண். துணை அமைப்பாளர்கள் மோதிலால், ம.புவனேஷ் குமார், டி.ஆர். திலீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுவார் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு வைரஸ் காய்ச்சல், இருமல், சளி பாதிப்பு இருப்பதால் இந்த கூட்டத்தில் அவரால் பங்கேற்க இயலவில்லை.

    இதனால் அவருக்கு பதிலாக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு இன்று மாலை சிறப்புரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் முக்கிய பேச்சாளர்களும் பேச இருக்கின்றனர்.

    இன்று மாலை திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப் படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    • கலெக்டரின் உத்தரவின் பேரில் இப்பணி அப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
    • பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ளது ராஜபாளையம் கிராமம். இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார் தொழிற்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு ராஜபாளையம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தொழிற்சாலையால் விலை நிலங்கள் பாதிப்பு, நிலத்தடி நீர்மட்டம், சுற்றுச் சூழல் பாதிப்பு. சுவாசக் கோளாறு உள்ளிட்ட ஏற்படும் பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறி மாவட்ட கலெக்டரில் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் பேரில் இப்பணி அப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் அப்பகுதியில் மீண்டும் தார்தொழிற்சாலை அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் ராஜ பாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் தொழிற்சாலை அமைப்பதற்கான பணியைதடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் பெரியபாளைம் போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் தனபால் உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • இந்திரபாபு என்பவரின் சட்டையில் மையை தடவி நூதன முறையில் கொள்ளையர்கள் பணத்தை பறித்து சென்றனர்.
    • கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் பாலவாக்கத்தில் உள்ள வங்கியில் ரூ. 1.32 லட்சம் பணத்தை எடுத்து வந்தபோது மர்ம நபர்கள் 100 ரூபாய் நோட்டுகளை வீசி பணத்தை பறித்து சென்றனர்.

    இதேபோல் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாஸ் குப்பத்தில் உள்ள வங்கியில் ரூ. 2 லட்சம் பணத்தை எடுத்து வந்த இந்திரபாபு என்பவரின் சட்டையில் மையை தடவி நூதன முறையில் கொள்ளையர்கள் பணத்தை பறித்து சென்றனர். இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் உத்தரவின் படி சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் ஊத்துக்கோட்டையில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொன்னேரி அடுத்த வெள்ளி வாயல், விச்சூர் ஆற்றின் கரைப் பகுதியை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
    • பேரிடரை சந்திக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றார்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டதில் வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதிகாரிகள் வெள்ள பாதிப்பை எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கடந்த ஆண்டில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளான பொன்னேரி அடுத்த வெள்ளி வாயல், விச்சூர் ஆற்றின் கரைப் பகுதியை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    பின்னர் அவர் மீஞ்சூர் ஒன்றியம், லட்சுமிபுரம் அணைக் கட்டு, ஏ.ரெட்டி பாளையம், சோமஞ் சேரி, ஆண்டார் மடம், தத்தை மஞ்சி, ஆகிய இடங்களில் கடந்த ஆண்டு ஆரணி ஆற்றில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களில் வெள்ளம் புகுந்த பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    ஆரணி ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதா? எனவும் முன்னெச்சரிக்கையாக அங்கு அடுக்கி வைக்கப்பட்ட மணல் மூட்டைகள், கயிறு, கம்புகளை பார்வையிட்டார், பின்னர் திருப்பாலைவனம் பேரிடர் மைய கால கட்டிடத்தை பார்வையிட்டு ஜன்னல், கதவுகள், கழிவறைகளை ஒரு வாரத்திற்குள் சீரமைக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்டம் முழுவதும் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பு பகுதிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டு உள்ளது. பேரிடரை சந்திக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றார்.

    ஆய்வின் போது, சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் மதிவாணன், ஆரணிஆறு செயற்பொறி யாளர் ராதா கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் வெற்றிவேலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திர சேகர், குமார், ராம கிருஷ்ணன் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் முத்துலட்சுமி, தலைவர் கவிதா மனோகரன் உடன் இருந்தனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, துறைமுக உள்பகுதி கடலில் கவிழ்ந்து தலைக்குப்புற விழுந்தது.
    • கடலுக்குள் கவிழ்ந்த கண்டெய்னர் இன்னும் மீட்கப்படவில்லை.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் உள்ள அதானி பெர்த்தில் கண்டெய்னர் லாரியை டிரைவர் குமரேசன் என்பவர் இன்று அதிகாலை ஓட்டி சென்றார். அப்போது அவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, துறைமுக உள்பகுதி கடலில் கவிழ்ந்து தலைக்குப்புற விழுந்தது. உடனடியாக அங்கிருந்த துறைமுக பணியாளர்கள், டிரைவர் குமரேசனை மீட்டனர். காயமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலுக்குள் கவிழ்ந்த கண்டெய்னர் இன்னும் மீட்கப்படவில்லை.

    இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடலுக்குள் கவிழ்ந்த கண்டெய்னர் இன்னும் மீட்கப்படவில்லை.
    • மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் உள்ள அதானி பெர்த்தில் கண்டெய்னர் லாரியை டிரைவர் குமரேசன் என்பவர் இன்று அதிகாலை ஓட்டி சென்றார். அப்போது அவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, துறைமுக உள்பகுதி கடலில் கவிழ்ந்து தலைக்குப்புற விழுந்தது. உடனடியாக அங்கிருந்த துறைமுக பணியாளர்கள், டிரைவர் குமரேசனை மீட்டனர். காயமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலுக்குள் கவிழ்ந்த கண்டெய்னர் இன்னும் மீட்கப்படவில்லை. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சோழவரம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவராக ஜெகநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமான பேர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகிகளை மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. பரிந்துரையின்பேரில் செயல் தலைவர் டாக்டர் கே. ஜெயக்குமார் எம்.பி., மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் நியமித்துள்ளனர்.

    அதன்படி திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சோழவரம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவராக ஜெகநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமான பேர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்துகளை போதைக்காக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
    • போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் தொழிற்பேட்டையை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் பணி புரியும் வட மாநில வாலிபர்கள் போதைக்காக இருமல் மருந்தை பயன்படுத்துவதாக போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்பத்தூர் மதுவிலக்கு போலீசார் அத்திப்பட்டு ஐ.சி.எப். காலனியில் உள்ள ஒரு மருந்து கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மருந்து கடை விற்பனையாளரான அசோகன் என்பவர் வட மாநில வாலிபர்களை குறிவைத்து மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்துகளை போதைக்காக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து மருந்து கடைக்காரர் அசோகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 இருமல் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×