என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எண்ணூர் துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி கடலுக்குள் கவிழ்ந்தது: டிரைவர் காயத்துடன் மீட்பு
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, துறைமுக உள்பகுதி கடலில் கவிழ்ந்து தலைக்குப்புற விழுந்தது.
- கடலுக்குள் கவிழ்ந்த கண்டெய்னர் இன்னும் மீட்கப்படவில்லை.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் உள்ள அதானி பெர்த்தில் கண்டெய்னர் லாரியை டிரைவர் குமரேசன் என்பவர் இன்று அதிகாலை ஓட்டி சென்றார். அப்போது அவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, துறைமுக உள்பகுதி கடலில் கவிழ்ந்து தலைக்குப்புற விழுந்தது. உடனடியாக அங்கிருந்த துறைமுக பணியாளர்கள், டிரைவர் குமரேசனை மீட்டனர். காயமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலுக்குள் கவிழ்ந்த கண்டெய்னர் இன்னும் மீட்கப்படவில்லை.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






