search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Training workshop meeting"

    • கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுவார் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
    • தலைமை கழக நிர்வாகிகள் முக்கிய பேச்சாளர்களும் பேச இருக்கின்றனர்.

    திருவள்ளூர்:

    தி.மு.க.வில் மண்டல வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடந்து வந்தது.

    இதில் டெல்டா மண்டல கூட்டம் திருச்சியில் ஜூலை மாதம் நடந்தது. தென் மண்டல கூட்டம் ஆகஸ்டு மாதம் ராமநாதபுரத்திலும், மேற்கு மண்டல கூட்டம் செப்டம்பர் மாதம் காங்கேயத்திலும், வடக்கு மண்டல கூட்டம் அக்டோபரில் திருவண்ணாமலையிலும் நடைபெற்றது.

    இந்த கூட்டங்கள் மூலம் 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    இந்த கூட்டங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றி வந்தார். தேர்தல் வியூகம் குறித்து பல்வேறு விஷயங்களை எடுத்துரைத்தார்.

    இதன் நிறைவாக சென்னை மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் 12 ஆயிரம் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்கும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று திருவள்ளூரில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளடங்கிய 11 தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். காலை 9 மணிக்கு அமைச்சர் ஆர். காந்தி, திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.சந்திரன், திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலையில் கூட்டம் தொடங்கியது.

    இதல் மாவட்டச் செயலாளர்கள் தா.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன், ஆவடி சா.மு. நாசர், சுந்தர், பி.கே. சேகர்பாபு, மாதவரம் எஸ். சுதர்சனம், டி.ஜே.கோவிந்த ராஜன், நே.சிற்றரசு, மயிலை வேலு, தா. இளைய அருணா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள்.

    கூட்டத்தில் சுற்றுச் சூழல் அணி மாநில துணைச் செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட துணை செயலாளர்கள் டாக்டர் குமரன், உதய மலர் பாண்டியன், திருவாலங்காடு மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் காஞ்சிபாடி பி.சரவணன், முன்னாள் நகர மன்ற தலைவர் பொன் பாண்டியன், அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ஜி ஜெய் கிருஷ்ணன், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் லோட்டஸ் எஸ்.டி. கோபிநாத், இளைஞர் அணி அமைப்பாளர் ம.கிரண். துணை அமைப்பாளர்கள் மோதிலால், ம.புவனேஷ் குமார், டி.ஆர். திலீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுவார் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு வைரஸ் காய்ச்சல், இருமல், சளி பாதிப்பு இருப்பதால் இந்த கூட்டத்தில் அவரால் பங்கேற்க இயலவில்லை.

    இதனால் அவருக்கு பதிலாக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு இன்று மாலை சிறப்புரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் முக்கிய பேச்சாளர்களும் பேச இருக்கின்றனர்.

    இன்று மாலை திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப் படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    ×