என் மலர்
திருப்பூர்
- கந்த சஷ்டி விழா வருகிற 13-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடக்கிறது.
- 19-ந்தேதி மாலையில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம், பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி கோவிலில், கந்த சஷ்டி விழா வருகிற 13-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் காலை முதல் இரவு வரை, ஆறுகால பூஜைகள், சுவாமிக்கு அபிேஷக அலங்காரம் நடக்கிறது.
இரவு 7 மணிக்கு மேல் இந்திர விமானம், ஆட்டுகிடா, வெள்ளையானை, நீலமயில் வாகனங்களில் சுவாமிகளின் திருவீதி உலா போன்றவை நடக்கிறது. இதைத்தொடர்ந்து 18-ந்தேதி மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹார விழா நடக்கிறது. 19-ந்தேதி மாலையில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
- வருகிற ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
- வெற்றி பெற்றவர்களுக்கு, ரொக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
திருப்பூர்:
வருகிற ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நூறு சதவீத ஓட்டுப்பதிவை சித்தரிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 25 பள்ளிகள், 25 கல்லூரிகளில் ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது.
இந்நிலையில் பல்லடம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட முதலிபாளையம் நிப்ட்-டீ பேஷன் கல்லூரியில், போஸ்டர் உருவாக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதில் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு நூறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் வகையில், விதவிதமான போஸ்டர் ஓவியங்கள் வரைந்து வண்ணம் தீட்டினர். போட்டியில், மாணவர் பரீத் அகமது முதலிடமும், மாணவி திவ்யாஸ்ரீ இரண்டாமிடமும், ஸ்வேதா மூன்றாமிடமும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, ரொக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
திருப்பூர் தெற்கு தாலுகா தனி தாசில்தார் பாபு, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கதிர்வேல், கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார். பள்ளி, கல்லுாரிகளில் தனித்தனியே போட்டி நடத்தப்பட்டு சிறந்த ஓவியம் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசு 500 ரூபாய், இரண்டாம் பரிசு 300 மற்றும் மூன்றாம் பரிசு 200 ரூபாய் வழங்கப்படுகிறது. அவற்றில், மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் ஓவியத்துக்கு ரூ.5 ஆயிரமும், இரண்டாம் இடத்திற்கு ரூ.2 ஆயிரமும், மூன்றாமிடம் பிடிக்கும் ஓவியத்துக்கு 1,000 ரூபாய் என வழங்கப்படும். மாவட்ட அளவில் சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். மாநில அளவில் சிறந்த ஓவியத்துக்கு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.20 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. சிறந்த ஓவியங்கள் வருகிற தேர்தலில், நூறு சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வுக்கான போஸ்டர்களில் பயன்படுத்தப்படும் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
- தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் இருந்து எவ்வளவு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்பது குறித்து நாளை 6-ந்தேதி முடிவு செய்யப்பட உள்ளது.
- பண்டிகைக்கு குறிப்பிட்ட நாட்கள் முன்னதாக, கோவையில் இருந்து நாகர்கோவில், சென்னைக்கு முன்பதிவில்லா சிறப்பு ெரயில் இயக்க வேண்டும் என்பது பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.
திருப்பூர்:
தீபாவளியையொட்டி சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் இருந்து எவ்வளவு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்பது குறித்து நாளை 6-ந்தேதி முடிவு செய்யப்பட உள்ளது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள், சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து கழக பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை எந்த நேரமும் தொடர்புகொள்ளலாம். அதேபோல், ஆம்னி பஸ்களில் அதிக கட்டண வசூல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 கட்டணமில்லா எண்கள் மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அரசு போக்குவரத்து கழக துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைையயொட்டி கோவையில் இருந்து சென்னை செல்லும் சேரன், கோவை, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம்-சென்னை நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் போன்ற ெரயில்களில் முன்பதிவு, 100 சதவீதம் நிறைவு பெற்றது. பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கோவையில் இருந்து சென்னை, நாகர்கோவில், பெங்களூரு போன்ற ஊர்களுக்கு தீபாவளி சிறப்பு ெரயில் அறிவிப்பு வெளியிட வேண்டும். பயணிகள் கூட்ட நெரிசல் அதிகரித்தால், பண்டிகைக்கு குறிப்பிட்ட நாட்கள் முன்னதாக, கோவையில் இருந்து நாகர்கோவில், சென்னைக்கு முன்பதிவில்லா சிறப்பு ெரயில் இயக்க வேண்டும் என்பது பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.சிறப்பு ெரயில் அறிவிப்பு குறித்து கோரிக்கை வைக்கும் போது அதனை பரிசீலிக்கும் சேலம் கோட்ட அதிகாரிகள் எர்ணாகுளம், கொச்சுவேலி, ஆலப்புழா, திருவனந்தபுரம் என கேரளாவில் இருந்து சென்னைக்கு ெரயில் அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், கோவை, திருப்பூர் மாவட்ட பயணிகளுக்கு இருக்கை கிடைக்காமல் போகிறது. எனவே இம்முறையும் அப்படியொரு அறிவிப்பு வெளியிடாமல் கோவையில் இருந்து ெரயில் புறப்படும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ், உடுமலை ஒன்றிய கிராமங்களில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்
- நிலுவையிலுள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய பி.டி.ஓ., விடம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ், உடுமலை ஒன்றிய கிராமங்களில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிலாளர்களுக்கு, கடந்த 3 மாதமாக வேலைக்கான சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால், தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பண்டிகை காலத்தில் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே நிலுவையிலுள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- வழக்கத்திற்கு மாறாக ஐப்பசி மாதம் வரை வறண்ட வானிலை நிலவியதால், தக்காளி விளைச்சல் அதிகரித்தது.
- தக்காளி விலை தொடர்ந்து அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலுார் பகுதியில் ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி அறுவடை செய்யப்பட்டு வருகிறது. வழக்கத்திற்கு மாறாக ஐப்பசி மாதம் வரை வறண்ட வானிலை நிலவியதால், தக்காளி விளைச்சல் அதிகரித்தது. எனவே, 13 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி, 100 ரூபாய்க்கு விலை போனது. இது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து மழை பெய்ய தொடங்கி உள்ளது. எனவே, அதிக ஈரப்பதம் காரணமாக தக்காளி அழுகும் நிலைமை அதிகரித்துள்ளது.
தற்போது ஒரு பெட்டி தக்காளி 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வரும் வாரங்களில் மழை அதிகரிக்கும் என்பதால் தக்காளி மேலும் அழுக வாய்ப்புள்ளது. இதனால் தக்காளி விலை தொடர்ந்து அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது.
இந்த தகவலை பொங்கலூர் பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
- துணை மின் நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- மின் பாதையின் அருகில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உடுமலை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அங்கலக்குறிச்சி செயற்பொறியாளர் ஆர்.தேவானந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேவனூர்புதூர் துணை மின் நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
ஆகவே நாளை (திங்கட்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், சி.பொ.சாளை, பாண்டியன்கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வலையபாளையம், எஸ்.நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்க முத்தூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. அப்போது மின் பாதையின் அருகில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
- வடமாநில தொழிலாளர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் வழியாக தன்பாத் வரை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- ரெயிலில் பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 22 மற்றும் சரக்கு பெட்டிகள் 2 எண்ணிக்கையில் இணைக்கப்படுகிறது.
திருப்பூர்:
தீபாவளி பண்டிகையையொட்டி வடமாநில தொழிலாளர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் வழியாக தன்பாத் வரை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. முன்பதிவு வசதியில்லாத இந்த ரெயில் வருகிற 10-ந் தேதி எர்ணாகுளத்தில் இருந்து நள்ளிரவு 11.55 மணிக்கு புறப்பட்டு 12-ந்தேதி இரவு 11 மணிக்கு தன்பாத் சென்றடையும். இந்த ரெயிலில் பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 22 மற்றும் சரக்கு பெட்டிகள் 2 எண்ணிக்கையில் இணைக்கப்படுகிறது.
கோவைக்கு 11-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கும், திருப்பூருக்கு 5.28 மணிக்கும், ஈரோட்டுக்கு 6.25 மணிக்கும், சேலத்துக்கு 7.22 மணிக்கும் வந்து செல்லும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மாநகரில் உள்ள ரோடுகளில் வழக்கத்தை விட வாகனப்போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
- பழங்காலம் முதல் பிரபலமான ஓலை வெடி தற்போது ஓல்டு இன் கோல்டு என்ற பெயரில் தங்க நிறத்தில் மின்னும் ஓலை வெடிகள் பாக்கெட்டுகளாக விற்பனைக்கு வந்துள்ளது.
திருப்பூர்:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திருப்பூரில் உள்ள கடைவீதிகளுக்கு மக்கள் அதிக அளவில் வரத்தொடங்கியுள்ளனர். இதனால் துணி கடைகள், இனிப்பு கடைகள், அலங்கார ெபாருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள், மின்சாதன பொருள், நகை கடைகள் உள்பட பல்வேறு வியாபார நிறுவனங்களில் பண்டிகை கால விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
இதேபோல் ஓட்டல், சாலையோர கடைகளில் ஆடைகள் மற்றும் உணவு வகை, தின்பண்டங்களின் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கடை வீதிகளில் பொதுமக்கள் குடும்பத்தோடு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினர். இதேபோல் வடமாநில தொழிலாளர்களும் அதிக அளவில் வருவதால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது.
இதேபோன்று மாநகரில் உள்ள ரோடுகளில் வழக்கத்தை விட வாகனப்போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதால் மாநகர போலீஸ் சார்பில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக புதுமார்க்கெட் வீதி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, மங்கலம் ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, முனிசிபல் வீதி, குமரன் ரோடு உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் மின்கம்பங்களில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு, அதன் மூலம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் வகையிலான அறிவிப்புகளை ஒலிக்க செய்து வருகின்றனர். காலை முதல் இரவு வரை முக்கியமான நேரங்களில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இதேப்போல் மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, பல்லடம், தாராபுரம், காங்கயம் உள்பட பல்வேறு ஊர்களில் கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அந்த பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தீபாவளி பண்டிகையின் பிரதானமாக பட்டாசு ரகங்கள் விற்பனையும் திருப்பூர் பகுதியில் துவங்கியுள்ளது. நிரந்தர பட்டாசு கடைகள், தற்காலிக பட்டாசு கடைகள், பட்டாசு நிறுவனங்களின் நேரடி விற்பனை நிலையங்கள் என திருப்பூர் பகுதியில் பட்டாசு விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
பெரும்பாலான பட்டாசு ரகங்கள், கிப்ட் பேக் வகையில் விற்பனையாகிறது. இவை 10 முதல் 60 வகையான பட்டாசுகள் என்ற அடிப்படையில் பல்வேறு விலைகளில், அதாவது 500 ரூபாய் முதல் விற்பனைக்கு உள்ளது. இவை தவிர ரகம் வாரியாக சிறியது முதல் மிகப் பெரிய அளவிலான வெடிகள், சர வெடிகள், புஸ்வாணங்கள், மத்தாப்பு வகைகள், வானில் பறந்து சென்று வெடிக்கும் பட்டாசுகள், வண்ண மயமாக வெடித்து சிதறும் வாண வேடிக்கை பட்டாசுகள் என நூற்றுக்கும் மேற்பட்ட வகையில் விற்பனைக்கு வந்துள்ளன.
நடப்பாண்டில் சிறுவர்களை ஈர்க்கும் விதமான பல்வேறு புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சாக்லெட் வெடி, சாக்லெட் மத்தாப்பு, கேன் மாடல் புஸ்வாணம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட உயர சென்று வெடிக்கும் வெடிகள், ெஹலிகாப்டர் மாடல் வெடி, மேஜிக் புஸ்வாணம் போன்ற பல ரகங்கள் விற்பனையாகிறது. பழங்காலம் முதல் பிரபலமான ஓலை வெடி தற்போது ஓல்டு இன் கோல்டு என்ற பெயரில் தங்க நிறத்தில் மின்னும் ஓலை வெடிகள் பாக்கெட்டுகளாக விற்பனைக்கு வந்துள்ளது. புஸ்வாண வகையில் மயில் வடிவத்திலான புஸ்வாணம் வெகுவாக கவருகிறது. சாக்லெட் மாடல் வெடி போன்று லாலி பாப் வடிவிலான ராக்கெட் பட்டாசும் உள்ளது. இரட்டைக்குழல் துப்பாக்கி என்பதோடு தற்போது இரட்டை துப்பாக்கியும் சிறுவர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது.
- வளம்குன்றா உற்பத்தி கோட்பாட்டின் கீழ் திருப்பூரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு முன்னெடுப்புகளை செய்துள்ளது.
- ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் முக்கிய நகரங்களில் மத்திய அரசு சார்பில் கண்காட்சிகளை நடத்தி திருப்பூரில் உள்ள வளம் குன்றா உற்பத்தி குறித்து தெரிவிக்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் டெல்லியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் பிரஜக்தா வர்மாவை நேரில் சந்தித்து பேசினர். இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் கவுரவ தலைவர் சக்திவேல் தலைமையில் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், துணை தலைவர் இளங்கோவன், இணை செயலாளர் குமார் துரைசாமி, ஆலோசக கமிட்டி உறுப்பினர்கள் பரமசிவம், சண்முகசுந்தரம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் இணை செயலாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி, வளம்குன்றா உற்பத்தி கோட்பாட்டின் கீழ் திருப்பூரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு முன்னெடுப்புகளை செய்துள்ளது. ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு, மரபுசாரா மின்உற்பத்தியில் தன்னிறைவு மற்றும் சமூகம் சார்ந்த முன்னெடுப்புகளை செய்துள்ளது குறித்து எடுத்துக்கூறினார்கள். திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களின் வளம் குன்றா உற்பத்தி குறித்து உலக வர்த்தக நிறுவனங்களுக்கும், இறக்குமதி நிறுவனங்களுக்கும் தெரிவிக்கும் பணியை மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் முக்கிய நகரங்களில் மத்திய அரசு சார்பில் கண்காட்சிகளை நடத்தி திருப்பூரில் உள்ள வளம் குன்றா உற்பத்தி குறித்து தெரிவிக்க வேண்டும். இதன் மூலமாக இறக்குமதி நிறுவனங்கள் திருப்பூரின் சிறப்பை அறிந்து புதிய ஆர்டர்களை வழங்குவதற்கு வசதியாக அமையும் என்று சங்கத்தின் கவுரவ தலைவர் சக்திவேல் கூறினார்.
இதை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக இணை செயலாளர் கூறினார். வளம் குன்றா உற்பத்தியில் தயாரிக்கும் ஆடைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக எச்.எஸ். கோர்டை புதிதாக அமைக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கும் ஆடைகளுக்கு அரசு சலுகைகளை வழங்க வேண்டும் என்று கூறினார்கள். திருப்பூர் ஏற்றுமதியாளர்சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் பேசும்போது, ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பு செய்யும்போது அதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதற்காக அதிகமான பொருட்செலவு ஏற்படுகிறது. மத்திய அரசு இந்த சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தனியாக சலுகைளை வழங்கினால் உதவியாக அமையும் என்றார். திருப்பூர் மாநகராட்சியை முன்மாதிரியாக எடுத்து, பனியன் கழிவுகளை தனியாக எடுத்து அவற்றை மறுசுழற்சி செய்வது தொடர்பாக மேயர், ஆணையாளருடன் ஆலோசனை நடத்த மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக இணை செயலாளர் தெரிவித்தார்.
தனியார் அமைப்பு மூலமாக விரைவில் திருப்பூரில் ஆய்வு செய்து முடிவுகளை மத்திய அரசிடம் இன்னும் 6 மாதங்களில் சமர்ப்பித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இணை செயலாளர் தெரிவித்தார்.
- திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 18 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.
- ராசரி விலை ரூ. 6ஆயிரத்து 950. ஒட்டுமொத்த விற்பனை தொகை ரூ.91 லட்சமாகும்.
மூலனூர், நவ.5-
வெள்ளகோவில் அருகே உள்ள மூலனூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 361 விவசாயிகள் தங்களுடைய 4 ஆயிரத்து 174 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து ஆயித்து 322 குவிண்டால் திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 18 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா். பருத்தி விலை குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.7 ஆயிரத்து 479 வரை விற்பனையானது.
சராசரி விலை ரூ. 6ஆயிரத்து 950. ஒட்டுமொத்த விற்பனை தொகை ரூ.91 லட்சமாகும். ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு செயலாளா் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 182 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிா்க் கடன், கால்நடை பராமரிப்புக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
- கடந்த 2022-23 ம் ஆண்டை காட்டிலும் ரூ.244.46 கோடி அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2023-24-ம் ஆண்டில் 88 ஆயிரத்து 898 பேருக்கு ரூ.900.17 கோடி கடன் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா்சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 182 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிா்க் கடன், கால்நடை பராமரிப்புக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில், உரிய தவணை தேதியில் பயிா் கடன்களை திருப்பி செலுத்தும் விவசாயிகள் வட்டியை செலுத்த தேவையில்லை. அதன்படி, 2023-24- ம் ஆண்டில் நவம்பா் 2-ந்தேதி வரை 21 ஆயிரத்து 395 விவசாயிகளுக்கு பயிா் கடனாக ரூ.243.09 கோடியம், கால்நடை பராமரிப்பு கடனாக 3 ஆயிரத்து 554 பேருக்கு ரூ.26.25 கோடியும் என மொத்தம் 24 ஆயிரத்து 949 விவசாயிகளுக்கு ரூ.269.34 கோடி வட்டியில்லாத பயிா் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல 58 ஆயிரத்து 240 பேருக்கு நகை கடன்களாக ரூ.492 கோடியும், 375 பேருக்கு மத்திய கால கடன்களாக ரூ.3.78 கோடியும், 129 மாற்று திறனாளிகளுக்கு ரூ.84.95 லட்சமும் கடனாக வழங்கப்பட்டுள்ளது. டாப்செட்கோ மூலம் 377 பேருக்கு ரூ.2.72 கோடியும், டாம்கோ மூலம் 98 பேருக்கு ரூ.78 கோடியும், 848 சுய உதவி குழுக்களுக்கு ரூ.5.24 கோடியும், 155 பேருக்கு வீட்டு கடனாக ரூ.7.78 கோடியும், ஆயிரத்து 355 பேருக்கு சிறு கடன்களாக ரூ.4.44 கோடியும், 2 ஆயிரத்து 372 பேருக்கு இதர கடன்களாக ரூ.68.24 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் 88 ஆயிரத்து 898 பேருக்கு ரூ.900.17 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 2022-23 ம் ஆண்டை காட்டிலும் ரூ.244.46 கோடி அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தேங்காய் எண்ணை உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்து பணிகளும் திறந்த வெளியிலேயே நடைபெற்று வருகிறது.
- தேங்காய் களங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
முத்தூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதிகளில் நூற்றுக் கணக்கில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இயற்கையில் அமைந்த சீதோஷ்ண நிலை தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிக்கு ஏதுவாக உள்ளதால் அதிக அளவில் களங்களை அமைத்துள்ளனர். தேங்காய் எண்ணை உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்து பணிகளும் திறந்த வெளியிலேயே நடைபெற்று வருகிறது.
தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடைபெறுவதால் தொடர்மழை பெய்யும் காலங்களில் இந்தப்பணிகள் முற்றிலுமாகப் பாதிப்படும். இந்த நிலையில் காங்கயம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் அவ்வப்போது விட்டு விட்டு பெய்துவரும் சாரல் மழை மற்றும் கன மழையால் தேங்காய் கள பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் செய்யமுடியாமல் முடங்கியுள்ளது. ஏற்கனவே உடைக்கப்பட்டு உலர்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை குவியல் குவியலாக களங்களில் குவித்து வைத்து தார்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர். இதன் காரணமாக தேங்காய் களங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.






